16/06/2019

அறிவியலா? ஆன்மீகமா? Time travel - 2

காலப்பயண Time travel ஆராய்ச்சியில் இருபிரிவினர் ஈடுபட்டுள்ளனர். 1.அறிவியலாளர்கள், 2.சித்தர்கள். அறிவியலாளர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒளியின் வேகம். சித்தர்கள் தேர்ந்தெடுத்த பாதை கூடுவிட்டு கூடு பாய்தல். 

இந்த இரண்டு பாதைகளில் எது சரி, எது தவறு என இன்று வரை தீர்மானிக்க முடியவில்லை. காரணம் இரண்டு பாதைகளுமே கருத்தியலில் தான் உள்ளதே தவிர, செயல்முறை விளக்கங்கள் இல்லாதவை.

அறிவிலா? ஆன்மீகமா? எது சரியான பாதை? என்ற கேள்வியே காலப்பயணத்திற்கான அடித்தளமாக அமைகிறது. அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி நாம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். 

அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது மூடநம்பிக்கை என ஒதுக்குவது தவறு.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா? பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா? 

காலத்தை வளைத்து நமக்கு ஏற்றவாறு மெதுவாகவும், வேகமாகவும் பயணிக்க செய்தால், காலப்பயணம் சாத்தியம் என்கின்றனர் அறிவியலாளர்கள். காலத்திற்கு ஏற்றவாறு நாம் வளைந்து சென்றால் காலம் கடந்து வாழமுடியும் என்கின்றனர் சித்தர்கள். 

காலத்தை கடக்கும் இயந்திரம் வேண்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள், காலம் கடக்கும் உடல் வேண்டும் என்கின்றர் சித்தர்கள். இதில் சித்தர்களை விட அறிவியலாளர்கள் தான் தொடர் வெற்றியை பெற்று வருகிறார்கள். காலம் கடக்கும் உடல் தனிமனித தேடலாக சுருங்கியதால் தோற்றவர்களாக நிற்கின்றனர் சித்தர்கள்.

சித்தர்கள் கண்டறித்த எண்ணயியலை(மனக்கணக்கு), எண்ணியலாக(எண்கணக்கு) மாற்றியது தான் அறிவியலாளர்களின் முதல் வெற்றி. அதுவே அறிவியலின் அடுத்தடுத்த பிரமாண்ட வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்து விட்டது.

எண்ணயியலா(ஆன்மீகம்)? எண்ணியலா(அறிவியல்)? - நமக்கு எளிமையான பாதை எது?
காலத்தை கடக்கும் உடலா?, காலத்தை கடக்கும் இயந்திரமா? - நாம் எதை தேர்ந்தெடுக்க போகிறோம்?

அறிவு பயணம் தொடரும்....

No comments:

Post a comment