20/07/2019

காலமரணம் - Time Travel END

மரணம் ஏன் ஏற்படுகிறது? கொலை, தற்கொலை இந்த 2 காரணங்களால் தான் மரணம் ஏற்படுகிறது. கொலை செய்யப்படாவிட்டால் நிச்சயமாக நாம் மரணத்தை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

கொலை என்பது மரணத்தின் 2ம் தேர்வு தானே தவிர முதல் தேர்வு அல்ல. தற்கொலை தான் மரணத்தின் முதல் தேர்வாக இருக்கிறது. நீங்கள் கொலை செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால் தற்கொலை என்பது உங்களுக்கு நிகழ்ந்தே தீரும்.

இங்கு தற்கொலை குறித்து தெளிவான புரிதல் அவசியம்.

காதல் தோல்வி, பணமின்மை, விரக்தி, இவற்றால் தற்கொலை செய்து கொள்வது தற்கொலை அல்ல. அது கொலை என்பதை நினைவில் வையுங்கள். உங்களை நீங்களே கொலை செய்கிறீர்கள். அவ்வளவு தான். விபத்து, நோய்வாய்ப்படல் என்பதும் கொலை தான்.

நான் இங்கு குறிப்பிடும் தற்கொலை என்பது உடல் தானாக தற்கொலை செய்து கொள்வது.

உடல் பிறக்கிறது, வளர்கிறது, இளமை கடந்து முழுமை அடைகிறது. 40 வயதில் உச்சத்தில் இருக்கும் உடல், பின்னர் தற்கொலை பாதையை தேர்ந்தெடுக்கிறது. மெல்ல மரணிக்க துவங்குகிறது.

உடலின் அடிப்படைக் கட்டமைப்பு செல்கள். இந்த செல்கள் 40 வயதுக்கு மேல் உறுப்புகளின் பணிகளுக்கான ஒத்துழைப்பை நிறுத்துகின்றன. உறுப்புகள் ஓய்வதால் உடலும் ஓய்கிறது. கடைசி உறுப்பான மூளை ஓய்ந்ததும் மரணம் சம்பவித்து விடுகிறது.மரணத்தின் முதல் படி செல்களின் வேலைநிறுத்தப் போராட்டம். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவியலாலும், ஆன்மீகத்தாலும் இன்று வரை சமரசப்படுத்த முடியவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள செல்களை நீக்கிவிட்டு இயந்திரத்தை பொறுத்தி அறிவியல் வெற்றி கண்டது. ஆனால் அது தற்காலிக ஏற்பாடு தானே தவிர நிரந்தரம் இல்லை. செல்களின் தொடர் வேலை நிறுத்தம் மூளையை முடக்குகிறது. இறுதியில் மூளையும் முடங்கிப் போகிறது.

மூளைக்கான மாற்று இயந்திரத்தை கண்டு பிடித்துவிட்டால் மூளையின் பணிகளை தொடரலாம். இயந்திர மூளை, இயந்திர உடல் இது மட்டுமே மரணத்தை வெல்ல அறிவியலின் ஒரே வழி. இதை நோக்கிய ஆராய்ச்சியில் அறிவியல் தீவிரப்பட்டுள்ளது.

மரணத்தை வெல்ல இங்கே இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

1. இயந்திர உடல், 2. உடல் செல்களின் தற்கொலையை தடுத்தல்.

இதில் இரண்டாமதை தான் சித்தர்கள் சித்தமருத்துவமாக போதித்துள்ளனர். காலப்போக்கில் அது கடவுளுடன் தொடர்பு படுத்தியதால் அழிந்து போனது. அதை மீட்டெடுத்தால் நிச்சயமாக மரணத்தை வெல்லலாம். 

காலப் பயணத்தின் இறுதிக்கு வருவோம்.

காலப்பயணமா?
மரணம் இல்லாத வாழ்வா?
 -  இரண்டில் எதை தேர்ந்தெடுத்தீர்கள்?

மரணம் இல்லாத வாழ்வை தேர்ந்தெடுத்து இருந்தால் நீங்கள் பாக்கியசாலி. ஏனென்றால் காலப்பயணம் என்பது சாத்தியமே இல்லாதது. அது ஓரு கற்பனை. அது ஒரு சுவாரசியம். அதை தாண்டி அதில் ஒன்றுமில்லை. காலமரணம் காலப்பயணத்திற்கு சமாதி கட்டி விடுகிறது. உங்கள் மரணத்துடன் உங்கள் காலமும் முடிந்து விடுகிறது. இல்லாத ஒரு காலத்திற்கு நீங்கள் எப்படி பயணிக்க முடியும்? 

காலப்பயணத்திற்கு ஒரே வழி மரணத்தை வெல்வது மட்டும் தான். மரணம் இல்லாத வாழ்வு நிச்சயம் சாத்தியப்படும். அறிவியலும் சித்த மருத்துவமும் கைகோர்த்தால்!

நமது முன்னோருக்கு கிடைக்காத மரணம் இல்லாத வாழ்வு நிச்சயம் நமக்கு கிடைக்கும். ஆம் அறிவியல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வேகத்தில் சித்தமருத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அதை செய்து விட்டால் நிச்சயமாக நமக்கு மரணம் என்பதே இல்லை.

கட்டுரை தொடர் சுருக்கம் : முதன் முதலில் காலப்பயண ஆய்வு செய்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் காலப்பாயண ஆய்வில் தோல்வி அடைந்தனர். அதற்கு மாற்றாக சித்த மருத்துவத்தை கண்டு பிடித்தனர். காலப் பயணத்துடன் தொடர்புடையது பரிமாணமும் பரிணாமமும். பரிமாணமும், பரிணாமமும் தான் உயிரியக்கத்தின்  6 அறிவுகளாக விரிந்துள்ளது. உயிர் இயக்கத்தின் இறுதி பரிணாமமாக கடவுள் கோட்பாடு வருகிறது. மரணத்தை வெல்பவர் கடவுளாகிறார். அப்படி ஒருவர் இதுவரை கண்டறிப்படவில்லை. உடல் செல்களின் தற்கொலையால் மரணம் நிகழ்கிறது. மரணத்தை வெல்ல கண்டுபிடிக்கப்பட்டது தான் சித்த மருத்துவம். மரணத்தை வென்று விட்டால் காலப்பயணம் என்பது சோதிடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும்.

காலப்பயணம் முற்றும்....
முந்தைய கட்டுரைகளை படிக்க : www.arivakam.org

No comments:

Post a comment