05/07/2019

முப்பரிமாணம் என்பது என்ன? - Time Travel 6

காலப்பயணம் மேற்கொள்ள மூன்று விசயங்களின் அடிப்படை புரிதல் முக்கியம். 1.காலம், 2.பரிமாணம், 3.பரிணாமம்.

சென்ற பதிவில் காலம் குறித்து பார்த்தோம். இந்த பதிவில் பரிமாணம் குறித்து பார்ப்போம்.

பொதுவாக நமக்கு முப்பரிமாணம் தான் தெரியும். முப்பரிமாணம் குறித்து 6ம் வகுப்பில் படித்திருப்போம். மூன்று கண்ணாடிக்குள் கலர்கலர் வளையல்களை போட்டு முப்பரிமாண சோதனை செய்து பார்த்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும்.


உலகிலேயே 2வது சுவையான குடிநீர் சிறுவாணி தண்ணீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் முதல் சுவையான குடிநீர் எது என கேட்டால், யாருக்கும் தெரியாது. அதுபோலத்தான். முப்பரிமாணம் எல்லொருக்கும் தெரியும் முதல் இரண்டாம் பரிமாணங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. இந்த முதல், இரண்டாம் பரிமாணங்கள் என்ன என தெரிந்து கொண்டால் மட்டுமே நமக்கு பரிமாணம் குறிந்த அடிப்படை புரிதல் வரும்.

ஒரு மாய புள்ளி என்பது சுழிய (0) பரிமாணம். இதற்கு நீளம், அகலம், உயரம் என எதுவும் இல்லை. இப்படி ஒரு புள்ளியை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாம் காகிதத்தில் வைக்கும் புள்ளிகள் எல்லாமே முப்பரிமாண புள்ளிகள் தான்.


நீளம் என்பது முதல் பரிமாணம், நீளம், அகலம் என்பது இரண்டாம் பரிமாணம், நீளம், அகலம், உயரம் என்பது மூன்றாம் பரிமாணம்.

முதல் பரிமாணம் என்பது நீளம் மட்டும் உடையது. நீளம் மட்டும் உடைய எந்த எந்த பொருளையும் நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நம்மால் அறியவோ உணரவோ முடியாது. இரண்டு புள்ளிகளுக்கு இடையில் நாம் வரையும் கோடு முதல் பரிமாணம் தான். ஆனால் அதற்கு நீளம் மட்டுமல்ல அகலமும் உயரமும் சிறிதளவாவது வந்து விடுகிறது. அதனால் நம்மால் முதல் பரிமாணத்தை கற்பனை செய்து பார்கிக்க முடியுமே தவிர பார்க்கவோ, தொட்டு உணரவோ முடியாது.

அடுத்து இரண்டாம் பரிமாணம் என்பது நீளம் அகலம் மட்டும் உடையது. நீளம் அகலம் மட்டும் உடைய பொருட்களை பார்க்க முடியும். தொட்டு உணரமுடியும். ஆனால் அது ஒரு நிழலாக தான் இருக்குமே தவிர உண்மையாக இருக்காது. இரண்டாம் பரிமாணத்திற்கு சிறந்த உதாரணம் நமது நிழல். நிழலை கவனித்து பாருங்கள் அதற்கு நீளம் இருக்கும், அகலம் இருக்கும் ஆனால் உயரம் இருக்காது. காகிதத்தில் வரையும் படம், தொலைகாட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், சினிமா, வானவில் என்பவை 2ம் பரிமாணத்திற்கு உதாரணங்கள். இவை எல்லாம் நிழல்கள் தானே தவிர உண்மை அல்ல. ஏனென்றால் நம்மால் இரண்டாம் பரிமாணத்தையும் அறிய முடியாது. நாம் எல்லாவற்றையும் முப்பரிமாணமாகத்தான் அறிகிறோம்.

நீளம், அகலம், உயரம் இந்த முன்றும் உள்ள எதுவும் மூப்பரிமாணம் உள்ளவை. நாம் மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அனைத்துமே முப்பரிமாண பொருட்கள் தான்.

நீளம், அகலம், உயரம் என்பது அளவீடுகள் என எதார்த்தமாகவே உங்களுக்கு தெரியும். காலம் என எதுவுமே இல்லை, காலம் என்பது ஒரு அளவீடு என்பது போல, பரிமாணம் என எதுவுமே இல்லை. பரிமாணம் என்பதும் ஒரு அளவீடு தான். நேற்று&இன்று&நாளை என்பது காலம். நீளம் அகலம் உயரம் என்பது பரிமாணம். இந்த காலமும் உண்மை அல்ல, பரிமாணமும் உண்மை அல்ல. இரண்டுமே அளவீடுகள் தான்.

காலமும் பரிமாணமும் மாயை என்றால் எது தான் உண்மை? காலமும், பரிமாணமும் அளவீடுகள் என்றால் அளப்பது யார்?, அளவாக இருப்பது எது? இந்த கேள்விகளில் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நினைவுக்கு வருகிறார். கூடவே சித்தர்களும்.

வேகத்தில் காலத்தையும் நீளத்தையும் கரைக்க முற்பட்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அட்டங்க சித்தியில் காலத்தையும், நீளத்தையும் கடக்க முற்பட்டனர் சித்தர்கள், உண்மையில் இருவருமே மாயையை தான் ருசித்தார்கள். அப்படியானால் உண்மை?

அறிவு பயணம் தொடரும்.

முந்தைய கட்டுரைகளை படிக்க www.arivakam.org

No comments:

Post a comment