28/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 5 - சமஸ்கிருதம் யாருடைய தாய்மொழி

சமஸ்கிருதம் எங்கு தோன்றியது என்ற எளிமையான கேள்வி சமஸ்கிருதத்தின் தாய்மை தன்மையையும் விளக்கி விடும்.

சமஸ்கிருதம் தோன்றியது தென்னிந்தியாவில் என மொழியியில் ஆய்வாளர்கள் ஆதாரப்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் தோன்றிய மொழி எப்படி ஆரிய மொழியாக முடியும்? இந்த அடிப்படை கேள்வி இன்று வரை புரியாத புதிராக இருப்பது தான் வேடிக்கை!

உண்மையில் தென்னிந்தியாவில் தோன்றிய சமஸ்கிருதம், தென்னிந்திய மொழியே தவிர, ஆரிய மொழி அல்ல. தமிழால் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் தான் பின்னர் செங்கிரந்தமாக வடிவம் பெற்றது. செங்கிருந்தமே சமஸ்கிருதமாக 19ம் நூற்றாண்டில் புகழின் உச்சிக்கு சென்றது.

சங்ககாலத்தில் அகபொருள், புறப்பொருள் இவற்றின் அடிப்படையில் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட்டன. மூடநம்பிக்கை சார்ந்த படைப்புகள் புறக்கணிக்பட்டன. இதனால் கடவுள் கொள்கை சார்ந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். சங்க இலக்கியங்களில் பக்தி இலக்கியங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.

சங்க காலத்தில் பெரும்பாலும் கடவுள் மறுப்பு கொள்கைகளே மேலோங்கி இருந்தது. கடவுள் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இது பெரும் விவாதமாக இருந்தது.

அகப்பொருள், புறப்பொருள் இலக்கணத்தோடு மறைபொருள் இலக்கணமும் தேவை என வாதிட்டனர் அந்தணர்கள். தமிழ் இலக்கணம் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதை தொடர்ந்து கடவுள் கொள்கை உடையவர்கள் செந்தமிழ் எழுத்தை தவிர்த்து, கிரந்த எழுத்துக்களில் பக்தி இலக்கியங்களை எழுதினர். இந்த இலக்கியங்கள் மறைமொழி இலக்கியங்களாக பார்க்கப்பட்டன.

மறைமொழி இலக்கியங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக சகுணம் பார்த்தல், ஒத்திசை, வெறியாட்டு(சாமியாடல்), பலிக்குபலி போன்றவை மக்களிடம் பிரபலம் ஆனது. இது சங்க புலவர்களிடையே ஆத்திரத்தை ஊட்டின. மறைமொழி இலக்கியங்கள் மக்களிடையே மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன என்றும், அவற்றை தடை தடைசெய்ய வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனால் மறைமொழியில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் தடைசெய்யப்பட்டது. கடவுள் கொள்கையை பரப்புபவர்கள் தண்டிக்கப்பட்டனர். கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்த அந்தணர்கள் தமிழகத்தை விட்டு வெறியேற துவங்கினர்.


இவ்வாறு வெளியேறிய அந்தணர்கள் சிலர் வடஇந்திய மௌரிய பேரசுகளிடம் தஞ்சம் அடைந்தனர். பலர் தமிழக்தின் குறுநில மன்னர்களிடம் தங்களை நிலநிறுத்திக்கொண்டர்.

சங்க காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் பல்லவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. பல்லவர்களின் துணையோடு வடஇந்தியாவில் குப்தர்கள் ஆட்சியில் கிரந்தம் எழுத்து மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் இருந்த கிரந்த எழுத்துக்களுக்கு அப்போது தான் இலங்கணங்களும் வகுக்கப்பட்டன. 51 ஒலி எழுத்துக்களாக சுருக்கி கிரந்தம் செம்மைப்படுத்தப்பட்டது. இதற்கு பின்னரே சமஸ்கிருத இலக்கியங்கள் முழுமையான எழுத்தாக்கம் பெற்றன.

பல்லவர் மற்றும் குப்தர்கள் தான் வைணவம் மற்றும் சிவ வழிபாட்டு முறையை இந்தியா முழுவதும் பரப்பினர். இவர்கள் காலத்தில் தான் சாதிய முறை, சமய சடங்குகள் தமிழகத்தில் வேரூன்றியது. பிராமணர்கள் அதிகாரம் மிக்கவர்களாக உருவெடுத்தனர். சங்ககாலத்தில் வடக்கே இடம் பெயர்ந்த அந்தணர்கள் மீண்டும் தென்னகம் நோக்கி பிராமணர்களாக திரும்ப வந்தனர்.

பல்லவ கிரந்தம் தான் முதன்முதலில் எழுதப்பட்ட சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தமிழ் வட்டெழுத்துக்களின் சாயலில் சமஸ்கிருதம் எழுதப்பட்டது. குப்தர்களின் கிரந்தம் வழக்கொழிந்து போனது. குப்தர்களுக்கு பிந்தைய முகலாயர் காலத்தில் நாகரி எழுத்து வடிவில் வடஇந்திய சமஸ்கிருதம் புத்துயிர் பெற்றது.

கட்டுரையின் இறுதிக்கு வருவோம்.

தமிழகத்தை சேர்ந்த அந்தணர் பயன்படுத்திய மறைமொழி (இரகசிய மொழி, இறைமொழி) தான் சமஸ்கிருதம். இது தமிழின் ஒரு வட்டார மொழியாகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பதற்கு நாட்டுபுறமொழி என்ற பொருளும் உண்டு. பிறகிரந்தம் பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தமாகவும், படிப்படியாக வடுகு, தெழுங்கு மலையாளமாகவும் பரிணாமித்து கொண்டது.

உண்மையில் சமஸ்கிருதம் சங்ககால அந்தணர்களின் தாய்மொழியே அல்லாமல் ஆரியர்களின் மொழி அல்ல. சமஸ்கிருத்ததின் நவீன மொழி தெழுங்கும், மலையாளமுமே தவிர இந்தியோ, உருதோ அல்ல.

மொழி ஆய்வு முற்றும். நன்றி.

முந்தைய கட்டுரைகளை படிக்க :

1. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி  - ஆரியமா திராவிடமா?

2. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஹிந்துஸ்தானி மொழிகள் 

3. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஆரிய மாயை

4. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல!

22/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல!

சமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது.

சமஸ்கிருத வரலாற்றை அறிய கல்வெட்டுக்களோ, மொழியியில் இலக்கண நூல்களோ இல்லை. மக்கள் பேச்சு வழக்கிலோ, அரச மொழியாகவோ சமஸ்கிருதம் இருந்ததில்லை. சமஸ்கிருதத்திற்கு என தனி இலக்கிய நூல்களும் இல்லை என்பது தான் மிக அதிர்ச்சிகரமான உண்மை.


நான்கு வேதங்கள், உபநிடங்கள், புராணங்கள், மகாபாரதம், இராமாயணம், வானசாஸ்திரங்கள், காளிதாசரின் கவிதைகள், என ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. ஆனால் இங்கு ஒரே அடியாக எதுவுமே இல்லை என அபாண்டம் சொல்லலாமா? என்ற கேள்வி உங்கள் மனதுள் எழுவது நியாயமே!

சமஸ்கிருதம் என சொல்லப்படும் ஆரிய இலங்கியங்களை கிழ்கண்டவாறு பிரிக்கலாம்.

1. ரிக், யசுர், சாம, அதர்வன வேதங்கள், 2, உபநிடங்கள், பிரமாணங்கள், 3. சாஸ்திரங்கள், புராணங்கள், 4. மகாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்கள், 5. காளிதாசர் உட்பட அறிஞர்களின் படைப்புகள்,  6. ஆதிசங்கரர், இராமானுஜர் உட்பட ஆன்மீக குருக்களின் படைப்புகள்.

இதில் ஆதிசங்கரர், இராமானுஜர் இவர்களின் படைப்புகளை தவிர மற்றவை எல்லாம் உண்மையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவைகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் வேதங்களும், இதிகாசங்களும் ஆரிய பண்படே தவிர இந்திய பண்பாடு அல்ல.

இந்தோ கிரேக்க மொழியில் எழுதப்பட்டவைகள் தான் வேதங்களும், இதிகாசங்களும். 

பைபிள், குரான், ரிக்வேதம் மூன்றையும் படித்தவர்களுக்கு தெரியும் இந்த மூன்றும் ஒன்று என.

கிரேக்க இதிகாசங்களான ஒடிசி, இலியட் என்பவற்றையும், மகாபாரதம், இராமாயணத்தையும் படித்தவர்களுக்கு தெரியும் இந்த நான்கு இதிகாசங்களும் ஒற்றை கருவில் எழுதப்பட்டது என.

சமஸ்கிருதத்தில் எழுத்து இலக்கியங்கள் பிறந்தது 5ம் நூற்றாண்டுக்கு பின்பு தான். அதுவும் சிறு குறிப்புகளாக தான் எழுதப்பட்டதே தவிர பெரிய இலக்கியங்கள் சமஸ்கிருத்தில் எழுதப்படவில்லை.

சமஸ்கிருதம் முதன் முதலில் கிரந்த எழுத்துக்களில் தான் எழுதப்பட்டது. கிரந்த எழுத்துக்களின் செம்மைபடுத்தலே சமஸ்கிருதமாக மாறியது. 

செப்பேடுகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகளில் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒலைச்சுவடிகள் தாராளமாக கிடைக்கும் பொருளானதால் ஏராளமான எழுத்து இலக்கியங்கள் தோன்றின. இவற்றை முறைப்படுத்த சங்கங்கள் தோற்றின. சங்கங்கள் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டன.

சங்க காலத்தில் நிகழ்ந்த கிரந்த எழுத்து சீர்திருத்தத்தின் போது தான் செம்மொழி எனப்பட்ட செந்தமிழும், பிறகிரந்தம் எனப்பட்ட வடமொழியும் தோன்றின.

எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த புலவர்கள் தமிழையும். ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்த புலவர்கள் கிரந்தமொழியையும் ஆதரித்தனர்.

பலதரப்பட்ட மக்களால் பலவகைகளில் பயன்படுத்தப்பட்ட கீரல் எழுத்துக்களே கிரந்தமாக சீர்திருத்தப்பட்டது.

கிரந்த எழுத்துக்கள் சீர்திருத்தப்பட்டவுடன் தமிழ் இலக்கியங்கள் வேகமாக வளரத் துவங்கின. வாய்மொழி இலக்கியங்களில் சிறப்பானவை எழுத்து இலக்கியங்களாக மாற்றப்பட்டன.

கிரந்தத்தை ஆதரித்த புலவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள் தனி குழுவாக செயல்படத் துவங்கினர். அந்த தனிக் குழுவே சமஸ்கிருத்ததின் பிதாமகனாக பல்லவர்காலத்தில் முடிசூடிக்கொண்டது.

பல்லவர் காலத்திற்கு பின்னரே சமஸ்கிருதம் எழுத்துநடையை பெற்றது. அப்படியானால் அதற்கு முன்னர் எழுதப்பட்டதாக சொல்லப்படும் வேதங்களும் இதிகாசங்களும், உபநிடங்களும் எப்படி சமஸ்கிருத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டது?

அங்கே தான் தென்னிந்திய பார்ப்பனர்கள் ஆரிய பிராமிணர்களுடன் கைகோர்த்துக்கொண்ட வரலாற்று பிழை ஆரம்பமாகிறது.

சமஸ்கிருதம் பிரமணர்களின் தந்தை மொழியான சுவாரஸ்யத்தில், அது யாருடைய தாய்மொழி என்ற உண்மை மறைந்து கிடக்கிறது

அந்த மறைமொழி இரகசியத்தின் பரசியம் அடுத்த இறுதி பகுதியில்

மொழி ஆய்வு தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க :

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 3 - ஆரிய மாயை

17/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 3 - ஆரிய மாயை

1780களில் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஜெர்மனிய மொழியியில் ஆய்வாளர் ஒரு ஆய்வு கட்டுரை சமர்பித்தார். ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகள் அனைத்தும் ஒரு மொழிக்குடும்பம் என்றார் வில்லியம் ஜோன்ஸ். இதற்கு இந்தோ-ஐரோப்பியன் மொழிக்குடும்பம் என பெயர் சூட்டினார்.

அவரை தொடந்து பலரும் இந்தோ-ஐரோப்பியன் மொழி குடும்ப ஆய்வில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலம் இந்தோ-இரானிய மொழிக்குடும்பம் என கண்டறிப்பட்டது.

இந்தோ-ஈரானிய மொழிகளின் மூலம் ஆரியமொழி என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டது. இந்த ஆரிய மொழி எது என்ற தேடலில் மொழியியில் ஆய்வாளர்கள் போட்டி போட்டனர். கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, லத்தீன் என்ற நான்கு மொழிகளுக்குள் இந்த போட்டி நிலவியது.

ஆரியர்கள் தான் உயர்ந்தவர்கள், ஆரியர்கள் மட்டுமே உலகை ஆட்சி செய்ய வேண்டும் என்ற நாசிக் கொள்கை நிலவிய காலம் அது. அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லர் நாசிக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

இதனால் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மொழியாக இருந்த கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, லத்தீன் மொழிகளை கீழ்நிலை மொழிகளாக ஜெர்மனியார்கள் கருதினர். இந்த மொழிகளை ஆரியத்தின் மூல மொழியாக ஏற்பதில் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் தான் அவர்கள் தென்னிந்தியாவின் சமஸ்கிருதத்ததை ஆரிய மொழியாக தத்தெடுத்துக் கொண்டனர்.

உண்மையில் ஆரிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரான், துருக்கி, ஜெர்மனியை மையமாக கொண்டு உருவான மொழிகள் தான் ஆரிய மொழிகள். அரேமியம் மொழிதான் ஆரிய மொழிகளின் தாய். அரேமியத்தில் இருந்து திரிந்த பார்சி மொழி தான் ஜெர்மன் மொழியின் தாய்.. ஹிட்லரின் நாசிக் கொள்கையால் பார்சி மொழிக்கு பதில் சமஸ்கிருதத்தை ஆரியமொழியாக தத்தெடுத்துக் கொண்டனர் ஜெர்மனியர்கள்.

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாய் இரானியன்(ஆரியன்) மொழி என்றும். ஈரானியன் மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்றும், சமஸ்கிருதமே ஆரிய மொழி என்றும் ஜெர்மனிய ஆய்வாளர்கள் இறுதி செய்தனர்.

சமஸ்கிருதத்தில் இருந்தே லத்தீன், கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, சீனம், தமிழ் உட்பட உலகின் அனைத்து பழமையான மொழிகளும் தோன்றின என ஆய்வு கட்டுரைகளை அடுக்கடுக்காக எழுதி தள்ளினர் ஜெர்மனியர்கள்.

ஐரோப்பிய-ஈரானிய மொழிகளில் சமஸ்கிருதத்தின் பங்கை திணிப்பதற்காக 1894ல் சர்வதேச சமஸ்கிருத ரோமனாக்க அரிச்சுவடி சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நீட்சியாக கல்கத்தா காங்கிரஸ் நூலகம் இன்றளவும் செயல்படுகிறது.

பார்சி மொழி சொற்கள் அனைத்தும் சமஸ்கிருத சொற்கள் என மாற்றப்பட்டன. இதனால் பார்சி மொழி தாக்கம் செலுத்திய அனைத்து ஆரிய மொழிகளிலும் சமஸ்கிருத சொற்கள் இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

இன்று வட இந்தியாவில் பழக்கத்தில் உள்ள 90% சமஸ்கிருத சொற்கள் எனப்படுபவை உண்மையில் உருது சொற்கள் தான். இந்தி மொழியில் 90% உருது சொற்களே உள்ளன. வெறும் 10% மட்டுமே சமஸ்கிருத சொற்கள் உள்ளன.

இந்தியும் உருதும் இரட்டை மொழிகள். எழுத்து மட்டுமே வேறுவேறு அல்லாமல் சொற்கள் அனைத்தும் ஒன்றே. இந்தி மொழியை அரபி எழுத்துக்களில் எழுதினால் அது உருது. உருது மொழியை தேவநாகரி எழுத்துக்களில் எழுதினால் அது இந்தி. இவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி இந்தியும் உருதும் ஒரே மொழிதான்.

இங்கே தான் அடிப்படை கேள்வி எழுகிறது உருது எப்படி சமஸ்கிருதம் ஆகும்? உருது மொழி சமஸ்கிருதம் இல்லை என்றால் இந்தியும் சமஸ்கிருதம் இல்லை என்பது தானே உண்மை! இந்தி, உருது, பார்சி, துருக்கி, ஜெர்மனி உட்பட ஈரானிய மொழிகள் தான் ஆரிய மொழிகள். இந்த மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பே இல்லை.

சமஸ்கிருதத்தின் நவீன வடிவம் இந்தி அல்ல என்றால், உண்மையில் சமஸ்கிருதத்தின் நவீன மொழி எது?

சமஸ்கிருதம் ஆரிய மொழி இல்லை என்றால், சமஸ்கிருதம் யாருடைய தாய் மொழி?

மொழி ஆய்வு தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க :

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்

13/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்

ஆரிய நிலமான ஈரான் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆரியர்கள். அவர்கள் தாய்மொழி பார்சி மொழி. பார்சி மொழி தான் ஆரிய மொழிகளின் மூல தாய் மொழியாக உள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் ஆட்சியாக, நந்த வம்சம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக மௌரிய பேரசு வருகிறது. நந்த மற்றும் மௌரியர்கள் ஆரிய பேரரசை தோற்றுவித்தனர். உண்மையில் இவர்கள் இந்தியர்கள் அல்ல ஈரானியர்கள். ஈரானை தாயகமாக கொண்டு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்திய பகுதிகளை ஆட்சி செய்தனர். இவர்களின் அலுவல் மொழியாக பார்சி மொழி இருந்தது.

பார்சி மொழி வட இந்தியாவின் பழங்குடியினர் மொழிகளுடன் கலந்து பல திரிபு மொழிகளை உருவாக்கியது. அவற்றுள் முக்கியமானது பெங்காளி மொழி.

மௌரியர் என்றால் ஆரியர் என்று பொருள். இந்த மௌரியர்களுக்கும் முகலாயர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து வந்தது. ஈரானின் மேற்கு தெற்கு பகுதிகளில் முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முகலாயர்களுக்கு துருக்கிமொழி அலுவல் மொழியாக இருந்தது.

துருக்கி மற்றும் பார்சி மொழி கலப்பால் உருது மொழி உருவாகியது. உருது மற்றும் வட இந்திய பழங்குடி மொழிகளின் கலப்பால் காஷ்மீரி, சிந்தி, பஞ்சாப்பி, ஹரியாவி, மார்வாரி(ராஜஸ்தானி), போஜ்புரி, பிஹாரி, பெங்காளி, உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் தோன்றின.

20ம் நூற்றாண்டு வரை வட இந்தியாவை ஆரியர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ச்சியாக ஆட்சி செய்தார்கள். நந்த வம்சம், மௌரிய பேரசு, முகலாயர்கள், சுல்தான்கள், ஆங்கிலேயர் என்போர் தான் வடஇந்தியாவின் தொடர் பேரரசுகள்.

ஈரானியர்களான மௌரியர்களின் பார்சி மொழி, துருக்கியர்களான முகலாயர்களின் துருக்கி மொழி, ஈராக்கியர்களான சுல்தான்களின் அரபு மொழி இவற்றின் தாக்கத்தால் உருவானவையே தற்போதைய வடஇந்திய மொழிகள்.

வட இந்திய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஆவணங்கள் அனைத்தும் பார்சி மற்றும் பாளி மொழி கலப்பில் எழுதப்பட்டவைகள் தான். பார்சி மற்றும் வடஇந்திய பழங்குடி மொழிகளின் கலப்பில் உருவான மொழிகளை ஹிந்துஸ்தானி மொழிகள் என பொதுவாக குறிப்பிடுகின்றனர்.

வட இந்தியாவை பொருத்த வரை மௌரியர் காலத்தில் பார்சி மொழியும், முகலாயர் காலத்தில் துருக்கி மொழியும், சுல்தான்கள் காலத்தில் உருது மொழியும், ஆங்கிலேயர் காலத்தில் இந்தி மொழியும் ஆட்சி மொழிகளாக இருந்தன.

பார்சி, துருக்கி, உருது, இந்தி இந்த நான்கு மொழிகளின் பெரும் தாக்கத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்திய பழங்குடி மொழிகள் அழிந்து போயின.

சரி சமஸ்கிருதம் விசயத்திற்கு வருவோம்.

வட இந்திய வரலாற்றில் சமஸ்கிருதம் எங்குமே காணவில்லையே?
பின் எப்படி இந்தி சமஸ்கிருதத்தின் நவீன வடிவம் ஆகியது?
இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? 
வடஇந்திய மொழிகளில் சமஸ்கிருதம் துளி அளவேனும் கலந்துள்ளதா? 
சமஸ்கிருதத்தின் சாம்ராஜியம் வட இந்தியா என்பது மாயையா?
ஏன் வட இந்திய ஆட்சியாளர்கள் சமஸ்கிருதத்தை இந்த அளவு இறுக பிடித்துள்ளார்கள்?
        - இதன் பின்னனியில் தான் ஆரிய மாயை ஒழிந்துள்ளது.

அந்த ஆரிய மாயையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

மொழி ஆய்வு தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க :

ஆரியமா திராவிடமா? - சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1

08/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

தமிழா, சமஸ்கிருதமா எது மூத்த மொழி? இந்தியாவில் இன்று வரை தொடரும் விவாதம் இது! இந்த விவாதம் துவங்கியது 1800களில். அதற்கு முன்னர் இப்படி ஒரு விவாதம் பெரிதாக இருந்ததில்லை.

ஆரியம் திராவிடம் என்ற விவாதம் தான் தமிழா சமஸ்கிருதமா என்ற விவாதற்திற்கு மூல காரணம்.

ஆரிய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என வில்லியம் ஜோன்ஸ் என்பவரும், திராவிட மொழிகளின் தாய் தமிழ் என கால்டுவெல் என்பவரும் ஆராய்ச்சி கட்டுரை எழுதினர். இந்த இரு கட்டுரைகளின் அடிப்படையில் தான் இன்று வரை ஆரிய திராவிட விவாதம் நடக்கிறது.
ஆரியம் என்றால் என்ன?
சமஸ்கிருத மொழியில் ஆரியர் என்றால் மேலானவர்(உயர்ந்தவர்) என்று பொருள், ஆரியர் என்ற சொல் உன்மையில் சமஸ்கிருத சொல் அல்ல. அது ஈரான் நாட்டுமொழியான பார்சி மொழி சொல். பார்சி மொழியில் ஆரியம் என்றால் மேட்டு நிலம் என்று பொருள்.

ஆரியம் என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்தது தான் தற்போதைய ஈரான் நாடு. ஈரான் என்றால் ஆரியர் நிலம் என்று பொருள். சமஸ்கிருதம், பார்சி, இந்தி, உருது, அரபி, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் ஈரான் என்றால் ஆரியர் நிலம் என்று தான் அர்த்தம்.

ஆரியர்களின் தாய்நிலம் ஈரான் என்பதை வரலாற்றில் யாரும் மறுப்பதில்லை. ஈரானில் இருந்து கைபர் போலான் கணவாய் வழி இந்தியாவுக்குள் வந்தவர்களே ஆரியர்கள். இதை எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.

ஆரியம் என்ற சொல் மேட்டுநிலத்தில் வசிப்பவர்களை குறிப்பதை போல திராவிடம் என்ற சொல் நதிக்கரை, கடற்கரை பகுதிகளில் வாழ்பவரை குறிக்கிறது. 

திரவம் என்ற தமிழ் சொல்லில் இருந்து திராவியம் என்ற சமஸ்கிருத சொல் பிறந்தது. திராவியம் என்ற சொல்லில் இருந்து திராவிடம் என்ற சொல் பிறந்தது.

மேட்டுநிலங்களில் வாழ்ந்த மக்கள் ஆரியர்கள் எனவும், திரவம்(தண்ணீர்) பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திராவிடர் எனவும் அழைக்கப்பட்டனர். அவ்வளவு தான் அதை தாண்டிய ஆரிய திராவிட சொல்லுக்கு ஆழமான விளக்கங்கள் இல்லை.

தமிழ் இலக்கியங்கள் வடநாட்டில் இருந்து மலைவழியாக வந்தவர்களை ஆரியர்கள் என்றும், கடல்வழி வந்தவர்களை திராவிடர்கள் என்றும் அழைக்கின்றன. தமிழர்கள் பெரும்பாலும் கடல் மற்றும் நதிக்கரை நாகரீகங்களையே கொண்டிருந்தனர். எனவே தமிழர்களும் திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர்.

ஹிட்லர் ஆட்சி காலத்தில் தான் ஆரியர் என்போர் உயர்ந்தவர் என்றும், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் இனவாதம் பரப்பப்பட்டது. அதன் விளைவால் ஹிட்லர் அழிந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே.

ஆரியர் யார்? திராவிடர் யார்? என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் ஆரியமொழி, திராவிட மொழி குறித்து பார்க்கலாம்.

மொழி ஆய்வு தொடரும்....