08/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

தமிழா, சமஸ்கிருதமா எது மூத்த மொழி? இந்தியாவில் இன்று வரை தொடரும் விவாதம் இது! இந்த விவாதம் துவங்கியது 1800களில். அதற்கு முன்னர் இப்படி ஒரு விவாதம் பெரிதாக இருந்ததில்லை.

ஆரியம் திராவிடம் என்ற விவாதம் தான் தமிழா சமஸ்கிருதமா என்ற விவாதற்திற்கு மூல காரணம்.

ஆரிய மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என வில்லியம் ஜோன்ஸ் என்பவரும், திராவிட மொழிகளின் தாய் தமிழ் என கால்டுவெல் என்பவரும் ஆராய்ச்சி கட்டுரை எழுதினர். இந்த இரு கட்டுரைகளின் அடிப்படையில் தான் இன்று வரை ஆரிய திராவிட விவாதம் நடக்கிறது.
ஆரியம் என்றால் என்ன?
சமஸ்கிருத மொழியில் ஆரியர் என்றால் மேலானவர்(உயர்ந்தவர்) என்று பொருள், ஆரியர் என்ற சொல் உன்மையில் சமஸ்கிருத சொல் அல்ல. அது ஈரான் நாட்டுமொழியான பார்சி மொழி சொல். பார்சி மொழியில் ஆரியம் என்றால் மேட்டு நிலம் என்று பொருள்.

ஆரியம் என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்தது தான் தற்போதைய ஈரான் நாடு. ஈரான் என்றால் ஆரியர் நிலம் என்று பொருள். சமஸ்கிருதம், பார்சி, இந்தி, உருது, அரபி, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் ஈரான் என்றால் ஆரியர் நிலம் என்று தான் அர்த்தம்.

ஆரியர்களின் தாய்நிலம் ஈரான் என்பதை வரலாற்றில் யாரும் மறுப்பதில்லை. ஈரானில் இருந்து கைபர் போலான் கணவாய் வழி இந்தியாவுக்குள் வந்தவர்களே ஆரியர்கள். இதை எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக்கொள்கின்றனர்.

ஆரியம் என்ற சொல் மேட்டுநிலத்தில் வசிப்பவர்களை குறிப்பதை போல திராவிடம் என்ற சொல் நதிக்கரை, கடற்கரை பகுதிகளில் வாழ்பவரை குறிக்கிறது. 

திரவம் என்ற தமிழ் சொல்லில் இருந்து திராவியம் என்ற சமஸ்கிருத சொல் பிறந்தது. திராவியம் என்ற சொல்லில் இருந்து திராவிடம் என்ற சொல் பிறந்தது.

மேட்டுநிலங்களில் வாழ்ந்த மக்கள் ஆரியர்கள் எனவும், திரவம்(தண்ணீர்) பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திராவிடர் எனவும் அழைக்கப்பட்டனர். அவ்வளவு தான் அதை தாண்டிய ஆரிய திராவிட சொல்லுக்கு ஆழமான விளக்கங்கள் இல்லை.

தமிழ் இலக்கியங்கள் வடநாட்டில் இருந்து மலைவழியாக வந்தவர்களை ஆரியர்கள் என்றும், கடல்வழி வந்தவர்களை திராவிடர்கள் என்றும் அழைக்கின்றன. தமிழர்கள் பெரும்பாலும் கடல் மற்றும் நதிக்கரை நாகரீகங்களையே கொண்டிருந்தனர். எனவே தமிழர்களும் திராவிடர்கள் என அழைக்கப்பட்டனர்.

ஹிட்லர் ஆட்சி காலத்தில் தான் ஆரியர் என்போர் உயர்ந்தவர் என்றும், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் இனவாதம் பரப்பப்பட்டது. அதன் விளைவால் ஹிட்லர் அழிந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே.

ஆரியர் யார்? திராவிடர் யார்? என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் ஆரியமொழி, திராவிட மொழி குறித்து பார்க்கலாம்.

மொழி ஆய்வு தொடரும்....

No comments:

Post a comment