17/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 3 - ஆரிய மாயை

1780களில் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஜெர்மனிய மொழியியில் ஆய்வாளர் ஒரு ஆய்வு கட்டுரை சமர்பித்தார். ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகள் அனைத்தும் ஒரு மொழிக்குடும்பம் என்றார் வில்லியம் ஜோன்ஸ். இதற்கு இந்தோ-ஐரோப்பியன் மொழிக்குடும்பம் என பெயர் சூட்டினார்.

அவரை தொடந்து பலரும் இந்தோ-ஐரோப்பியன் மொழி குடும்ப ஆய்வில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலம் இந்தோ-இரானிய மொழிக்குடும்பம் என கண்டறிப்பட்டது.

இந்தோ-ஈரானிய மொழிகளின் மூலம் ஆரியமொழி என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டது. இந்த ஆரிய மொழி எது என்ற தேடலில் மொழியியில் ஆய்வாளர்கள் போட்டி போட்டனர். கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, லத்தீன் என்ற நான்கு மொழிகளுக்குள் இந்த போட்டி நிலவியது.

ஆரியர்கள் தான் உயர்ந்தவர்கள், ஆரியர்கள் மட்டுமே உலகை ஆட்சி செய்ய வேண்டும் என்ற நாசிக் கொள்கை நிலவிய காலம் அது. அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லர் நாசிக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

இதனால் யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மொழியாக இருந்த கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, லத்தீன் மொழிகளை கீழ்நிலை மொழிகளாக ஜெர்மனியார்கள் கருதினர். இந்த மொழிகளை ஆரியத்தின் மூல மொழியாக ஏற்பதில் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் தான் அவர்கள் தென்னிந்தியாவின் சமஸ்கிருதத்ததை ஆரிய மொழியாக தத்தெடுத்துக் கொண்டனர்.

உண்மையில் ஆரிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரான், துருக்கி, ஜெர்மனியை மையமாக கொண்டு உருவான மொழிகள் தான் ஆரிய மொழிகள். அரேமியம் மொழிதான் ஆரிய மொழிகளின் தாய். அரேமியத்தில் இருந்து திரிந்த பார்சி மொழி தான் ஜெர்மன் மொழியின் தாய்.. ஹிட்லரின் நாசிக் கொள்கையால் பார்சி மொழிக்கு பதில் சமஸ்கிருதத்தை ஆரியமொழியாக தத்தெடுத்துக் கொண்டனர் ஜெர்மனியர்கள்.

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாய் இரானியன்(ஆரியன்) மொழி என்றும். ஈரானியன் மொழிகளின் தாய் சமஸ்கிருதம் என்றும், சமஸ்கிருதமே ஆரிய மொழி என்றும் ஜெர்மனிய ஆய்வாளர்கள் இறுதி செய்தனர்.

சமஸ்கிருதத்தில் இருந்தே லத்தீன், கிரேக்கம், அரேமியம், ஹீப்ரு, சீனம், தமிழ் உட்பட உலகின் அனைத்து பழமையான மொழிகளும் தோன்றின என ஆய்வு கட்டுரைகளை அடுக்கடுக்காக எழுதி தள்ளினர் ஜெர்மனியர்கள்.

ஐரோப்பிய-ஈரானிய மொழிகளில் சமஸ்கிருதத்தின் பங்கை திணிப்பதற்காக 1894ல் சர்வதேச சமஸ்கிருத ரோமனாக்க அரிச்சுவடி சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நீட்சியாக கல்கத்தா காங்கிரஸ் நூலகம் இன்றளவும் செயல்படுகிறது.

பார்சி மொழி சொற்கள் அனைத்தும் சமஸ்கிருத சொற்கள் என மாற்றப்பட்டன. இதனால் பார்சி மொழி தாக்கம் செலுத்திய அனைத்து ஆரிய மொழிகளிலும் சமஸ்கிருத சொற்கள் இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

இன்று வட இந்தியாவில் பழக்கத்தில் உள்ள 90% சமஸ்கிருத சொற்கள் எனப்படுபவை உண்மையில் உருது சொற்கள் தான். இந்தி மொழியில் 90% உருது சொற்களே உள்ளன. வெறும் 10% மட்டுமே சமஸ்கிருத சொற்கள் உள்ளன.

இந்தியும் உருதும் இரட்டை மொழிகள். எழுத்து மட்டுமே வேறுவேறு அல்லாமல் சொற்கள் அனைத்தும் ஒன்றே. இந்தி மொழியை அரபி எழுத்துக்களில் எழுதினால் அது உருது. உருது மொழியை தேவநாகரி எழுத்துக்களில் எழுதினால் அது இந்தி. இவ்வளவு தான் வித்தியாசம். மற்றபடி இந்தியும் உருதும் ஒரே மொழிதான்.

இங்கே தான் அடிப்படை கேள்வி எழுகிறது உருது எப்படி சமஸ்கிருதம் ஆகும்? உருது மொழி சமஸ்கிருதம் இல்லை என்றால் இந்தியும் சமஸ்கிருதம் இல்லை என்பது தானே உண்மை! இந்தி, உருது, பார்சி, துருக்கி, ஜெர்மனி உட்பட ஈரானிய மொழிகள் தான் ஆரிய மொழிகள். இந்த மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பே இல்லை.

சமஸ்கிருதத்தின் நவீன வடிவம் இந்தி அல்ல என்றால், உண்மையில் சமஸ்கிருதத்தின் நவீன மொழி எது?

சமஸ்கிருதம் ஆரிய மொழி இல்லை என்றால், சமஸ்கிருதம் யாருடைய தாய் மொழி?

மொழி ஆய்வு தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க :

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்

No comments:

Post a comment