22/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 4 - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல!

சமஸ்கிருதம் என்பதன் பொருள் செம்மைப்படுத்தப்பட்ட கிரந்தம் என்பதே. தமிழில் செங்கிருந்தம் என்றே சமஸ்கிருதம் அழைக்கப்படுகிறது.

சமஸ்கிருத வரலாற்றை அறிய கல்வெட்டுக்களோ, மொழியியில் இலக்கண நூல்களோ இல்லை. மக்கள் பேச்சு வழக்கிலோ, அரச மொழியாகவோ சமஸ்கிருதம் இருந்ததில்லை. சமஸ்கிருதத்திற்கு என தனி இலக்கிய நூல்களும் இல்லை என்பது தான் மிக அதிர்ச்சிகரமான உண்மை.


நான்கு வேதங்கள், உபநிடங்கள், புராணங்கள், மகாபாரதம், இராமாயணம், வானசாஸ்திரங்கள், காளிதாசரின் கவிதைகள், என ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. ஆனால் இங்கு ஒரே அடியாக எதுவுமே இல்லை என அபாண்டம் சொல்லலாமா? என்ற கேள்வி உங்கள் மனதுள் எழுவது நியாயமே!

சமஸ்கிருதம் என சொல்லப்படும் ஆரிய இலங்கியங்களை கிழ்கண்டவாறு பிரிக்கலாம்.

1. ரிக், யசுர், சாம, அதர்வன வேதங்கள், 2, உபநிடங்கள், பிரமாணங்கள், 3. சாஸ்திரங்கள், புராணங்கள், 4. மகாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்கள், 5. காளிதாசர் உட்பட அறிஞர்களின் படைப்புகள்,  6. ஆதிசங்கரர், இராமானுஜர் உட்பட ஆன்மீக குருக்களின் படைப்புகள்.

இதில் ஆதிசங்கரர், இராமானுஜர் இவர்களின் படைப்புகளை தவிர மற்றவை எல்லாம் உண்மையில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவைகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் வேதங்களும், இதிகாசங்களும் ஆரிய பண்படே தவிர இந்திய பண்பாடு அல்ல.

இந்தோ கிரேக்க மொழியில் எழுதப்பட்டவைகள் தான் வேதங்களும், இதிகாசங்களும். 

பைபிள், குரான், ரிக்வேதம் மூன்றையும் படித்தவர்களுக்கு தெரியும் இந்த மூன்றும் ஒன்று என.

கிரேக்க இதிகாசங்களான ஒடிசி, இலியட் என்பவற்றையும், மகாபாரதம், இராமாயணத்தையும் படித்தவர்களுக்கு தெரியும் இந்த நான்கு இதிகாசங்களும் ஒற்றை கருவில் எழுதப்பட்டது என.

சமஸ்கிருதத்தில் எழுத்து இலக்கியங்கள் பிறந்தது 5ம் நூற்றாண்டுக்கு பின்பு தான். அதுவும் சிறு குறிப்புகளாக தான் எழுதப்பட்டதே தவிர பெரிய இலக்கியங்கள் சமஸ்கிருத்தில் எழுதப்படவில்லை.

சமஸ்கிருதம் முதன் முதலில் கிரந்த எழுத்துக்களில் தான் எழுதப்பட்டது. கிரந்த எழுத்துக்களின் செம்மைபடுத்தலே சமஸ்கிருதமாக மாறியது. 

செப்பேடுகளில் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகளில் வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒலைச்சுவடிகள் தாராளமாக கிடைக்கும் பொருளானதால் ஏராளமான எழுத்து இலக்கியங்கள் தோன்றின. இவற்றை முறைப்படுத்த சங்கங்கள் தோற்றின. சங்கங்கள் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டன.

சங்க காலத்தில் நிகழ்ந்த கிரந்த எழுத்து சீர்திருத்தத்தின் போது தான் செம்மொழி எனப்பட்ட செந்தமிழும், பிறகிரந்தம் எனப்பட்ட வடமொழியும் தோன்றின.

எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த புலவர்கள் தமிழையும். ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்த புலவர்கள் கிரந்தமொழியையும் ஆதரித்தனர்.

பலதரப்பட்ட மக்களால் பலவகைகளில் பயன்படுத்தப்பட்ட கீரல் எழுத்துக்களே கிரந்தமாக சீர்திருத்தப்பட்டது.

கிரந்த எழுத்துக்கள் சீர்திருத்தப்பட்டவுடன் தமிழ் இலக்கியங்கள் வேகமாக வளரத் துவங்கின. வாய்மொழி இலக்கியங்களில் சிறப்பானவை எழுத்து இலக்கியங்களாக மாற்றப்பட்டன.

கிரந்தத்தை ஆதரித்த புலவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட இவர்கள் தனி குழுவாக செயல்படத் துவங்கினர். அந்த தனிக் குழுவே சமஸ்கிருத்ததின் பிதாமகனாக பல்லவர்காலத்தில் முடிசூடிக்கொண்டது.

பல்லவர் காலத்திற்கு பின்னரே சமஸ்கிருதம் எழுத்துநடையை பெற்றது. அப்படியானால் அதற்கு முன்னர் எழுதப்பட்டதாக சொல்லப்படும் வேதங்களும் இதிகாசங்களும், உபநிடங்களும் எப்படி சமஸ்கிருத்தில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்டது?

அங்கே தான் தென்னிந்திய பார்ப்பனர்கள் ஆரிய பிராமிணர்களுடன் கைகோர்த்துக்கொண்ட வரலாற்று பிழை ஆரம்பமாகிறது.

சமஸ்கிருதம் பிரமணர்களின் தந்தை மொழியான சுவாரஸ்யத்தில், அது யாருடைய தாய்மொழி என்ற உண்மை மறைந்து கிடக்கிறது

அந்த மறைமொழி இரகசியத்தின் பரசியம் அடுத்த இறுதி பகுதியில்

மொழி ஆய்வு தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க :

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 1 - ஆரியமா திராவிடமா?

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 2 - ஹிந்துஸ்தானி மொழிகள்

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 3 - ஆரிய மாயை

No comments:

Post a comment