28/08/2019

சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி 5 - சமஸ்கிருதம் யாருடைய தாய்மொழி

சமஸ்கிருதம் எங்கு தோன்றியது என்ற எளிமையான கேள்வி சமஸ்கிருதத்தின் தாய்மை தன்மையையும் விளக்கி விடும்.

சமஸ்கிருதம் தோன்றியது தென்னிந்தியாவில் என மொழியியில் ஆய்வாளர்கள் ஆதாரப்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் தோன்றிய மொழி எப்படி ஆரிய மொழியாக முடியும்? இந்த அடிப்படை கேள்வி இன்று வரை புரியாத புதிராக இருப்பது தான் வேடிக்கை!

உண்மையில் தென்னிந்தியாவில் தோன்றிய சமஸ்கிருதம், தென்னிந்திய மொழியே தவிர, ஆரிய மொழி அல்ல. தமிழால் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் தான் பின்னர் செங்கிரந்தமாக வடிவம் பெற்றது. செங்கிருந்தமே சமஸ்கிருதமாக 19ம் நூற்றாண்டில் புகழின் உச்சிக்கு சென்றது.

சங்ககாலத்தில் அகபொருள், புறப்பொருள் இவற்றின் அடிப்படையில் இலக்கியங்கள் அங்கீகரிக்கப்பட்டன. மூடநம்பிக்கை சார்ந்த படைப்புகள் புறக்கணிக்பட்டன. இதனால் கடவுள் கொள்கை சார்ந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். சங்க இலக்கியங்களில் பக்தி இலக்கியங்கள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.

சங்க காலத்தில் பெரும்பாலும் கடவுள் மறுப்பு கொள்கைகளே மேலோங்கி இருந்தது. கடவுள் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இது பெரும் விவாதமாக இருந்தது.

அகப்பொருள், புறப்பொருள் இலக்கணத்தோடு மறைபொருள் இலக்கணமும் தேவை என வாதிட்டனர் அந்தணர்கள். தமிழ் இலக்கணம் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதை தொடர்ந்து கடவுள் கொள்கை உடையவர்கள் செந்தமிழ் எழுத்தை தவிர்த்து, கிரந்த எழுத்துக்களில் பக்தி இலக்கியங்களை எழுதினர். இந்த இலக்கியங்கள் மறைமொழி இலக்கியங்களாக பார்க்கப்பட்டன.

மறைமொழி இலக்கியங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக சகுணம் பார்த்தல், ஒத்திசை, வெறியாட்டு(சாமியாடல்), பலிக்குபலி போன்றவை மக்களிடம் பிரபலம் ஆனது. இது சங்க புலவர்களிடையே ஆத்திரத்தை ஊட்டின. மறைமொழி இலக்கியங்கள் மக்களிடையே மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன என்றும், அவற்றை தடை தடைசெய்ய வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனால் மறைமொழியில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் தடைசெய்யப்பட்டது. கடவுள் கொள்கையை பரப்புபவர்கள் தண்டிக்கப்பட்டனர். கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்த அந்தணர்கள் தமிழகத்தை விட்டு வெறியேற துவங்கினர்.


இவ்வாறு வெளியேறிய அந்தணர்கள் சிலர் வடஇந்திய மௌரிய பேரசுகளிடம் தஞ்சம் அடைந்தனர். பலர் தமிழக்தின் குறுநில மன்னர்களிடம் தங்களை நிலநிறுத்திக்கொண்டர்.

சங்க காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கிரந்தம் பல்லவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. பல்லவர்களின் துணையோடு வடஇந்தியாவில் குப்தர்கள் ஆட்சியில் கிரந்தம் எழுத்து மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் இருந்த கிரந்த எழுத்துக்களுக்கு அப்போது தான் இலங்கணங்களும் வகுக்கப்பட்டன. 51 ஒலி எழுத்துக்களாக சுருக்கி கிரந்தம் செம்மைப்படுத்தப்பட்டது. இதற்கு பின்னரே சமஸ்கிருத இலக்கியங்கள் முழுமையான எழுத்தாக்கம் பெற்றன.

பல்லவர் மற்றும் குப்தர்கள் தான் வைணவம் மற்றும் சிவ வழிபாட்டு முறையை இந்தியா முழுவதும் பரப்பினர். இவர்கள் காலத்தில் தான் சாதிய முறை, சமய சடங்குகள் தமிழகத்தில் வேரூன்றியது. பிராமணர்கள் அதிகாரம் மிக்கவர்களாக உருவெடுத்தனர். சங்ககாலத்தில் வடக்கே இடம் பெயர்ந்த அந்தணர்கள் மீண்டும் தென்னகம் நோக்கி பிராமணர்களாக திரும்ப வந்தனர்.

பல்லவ கிரந்தம் தான் முதன்முதலில் எழுதப்பட்ட சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தமிழ் வட்டெழுத்துக்களின் சாயலில் சமஸ்கிருதம் எழுதப்பட்டது. குப்தர்களின் கிரந்தம் வழக்கொழிந்து போனது. குப்தர்களுக்கு பிந்தைய முகலாயர் காலத்தில் நாகரி எழுத்து வடிவில் வடஇந்திய சமஸ்கிருதம் புத்துயிர் பெற்றது.

கட்டுரையின் இறுதிக்கு வருவோம்.

தமிழகத்தை சேர்ந்த அந்தணர் பயன்படுத்திய மறைமொழி (இரகசிய மொழி, இறைமொழி) தான் சமஸ்கிருதம். இது தமிழின் ஒரு வட்டார மொழியாகவே இருந்தது. சமஸ்கிருதம் என்பதற்கு நாட்டுபுறமொழி என்ற பொருளும் உண்டு. பிறகிரந்தம் பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தமாகவும், படிப்படியாக வடுகு, தெழுங்கு மலையாளமாகவும் பரிணாமித்து கொண்டது.

உண்மையில் சமஸ்கிருதம் சங்ககால அந்தணர்களின் தாய்மொழியே அல்லாமல் ஆரியர்களின் மொழி அல்ல. சமஸ்கிருத்ததின் நவீன மொழி தெழுங்கும், மலையாளமுமே தவிர இந்தியோ, உருதோ அல்ல.

மொழி ஆய்வு முற்றும். நன்றி.

முந்தைய கட்டுரைகளை படிக்க :

1. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி  - ஆரியமா திராவிடமா?

2. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஹிந்துஸ்தானி மொழிகள் 

3. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - ஆரிய மாயை

4. சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி - வேதங்கள் சமஸ்கிருதம் அல்ல!

No comments:

Post a comment