16/09/2019

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 1

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கூறினார். இதற்கு ஒரே காரணம் இந்தியாவின் தேசிய மொழியாக இந்திய மொழிகளில் ஒன்று தான் இருக்க வேண்டும் என்பதே.

இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியாவின் ஒரு மொழி இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்தியாவின் தேசிய மொழியாக இந்திய மொழி அல்லாத ஒன்றை எப்படி ஏற்பது? இங்கு இருந்து தான் இந்தி எதிர்ப்பை துவங்க வேண்டும்.

இந்தி உண்மையில் இந்தியாவின் மொழி அல்ல என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்தியாவின் மொழி அல்லாத இந்தியை எப்படி இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றினார்கள்? இதில் தான் இந்த ஆய்வு கட்டுரையின் அத்தனை சுவாரசியங்களும் அடங்கி கிடக்கிறது.

1950க்கு முன்னர் இந்தி என்ற ஒரு மொழியே இந்தியாவில் பேசப்படவில்லை. இன்று இந்தியாவில் பேசப்படும் இந்திக்கு வெறும் 100க்கும் குறைவான சொற்கள் மட்டுமே உள்ளது. வெறும் 100 சொற்கள் மட்டுமே உள்ள இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக எப்படி பயன்படுத்த முடியும்?

இந்தியாவில் இந்தி பேசுவோர் வெறும் 1% பேர் மட்டுமே. இந்த ஒரு சதவீதம் பேர் பேசும் இந்தியை எப்படி 130கோடி மக்கள் பேசும் மொழியாக மாற்ற முடியும்? & இந்த கேள்விகள் எல்லாம் ஏதோ அறிவு இல்லாதவன் கேட்கும் கேள்விகள் போல தெரியலாம். ஆனால் இந்த கேள்விகளில் தான் இந்தி படியுங்கள் இந்தி படியுங்கள் என மத்திய அரசு சொல்வதன் அர்த்தம் அடங்கி இருக்கிறது.

சரி நேரடியாக விசயத்திற்கு செல்வோம்.

இந்துஸ்தானி மொழி பற்றி கேள்விபட்டவர்களுக்கு இந்த கட்டுரை வாசிப்பு மிக எளிதாக இருக்கும். அது தெரியாதவர்கள் விக்கிபீடியா போன்ற ஓரளவு ஆதாரப்பூர்வமான இணைய தளங்களில் இந்துஸ்தானி மொழி என்ற சொல்லை தேடி படித்து வாருங்கள்.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி இந்துஸ்தானி மொழி தான். வட இந்தியாவில் 80% மக்கள் பேசும் மொழி இந்துஸ்தானி மொழி. இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி இந்துஸ்தானி. உலகில் சீனம், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பேசும் மொழி இந்துஸ்தானி. சந்தேகம் இருப்பவர்கள் விக்கிபீடியாவில் படிக்கலாம்.

உலகில் மூன்றாவது பெரிய மொழி இந்துஸ்தானி. ஆனால் இன்று இந்துஸ்தானி மொழி எது என்றால் யாருக்குமே தெரியாது. காரணம் அங்கே தான் இந்தி படியுங்கள் என்ற மத்திய அரசின் பிரச்சார ரகசியம் அடங்கி கிடக்கிறது.

உண்மையில் இந்தி படியுங்கள் என்பது தென்னிந்தியருக்கான கோரிக்கை அல்ல. அது வட இந்தியருக்கான கோரிக்கை.

வட இந்தியாவில் 99% பேருக்கு இந்தி தெரியாது. இந்துஸ்தானி தான் தெரியும். வட இந்தியர்கள் பேசுவது எல்லாம் இந்துஸ்தானி மொழி தான். இந்துஸ்தானி மொழிக்கும் இந்தி மொழிக்கும் இமாலைய வேறுபாடு உண்டு. ஆனால் இந்துஸ்தானி தான் இந்தி என நம்மை நம்ப வைத்து விட்டார்கள்.

உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ஆங்கிலமும், ஸ்டேண்டேடு இந்தியும் தான். ஸ்டேண்டேடு இந்தியில் தான் அரசு கோப்புகளை தரவேண்டும் என மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது நினைவு இருக்கிறதா?

ஸ்டேண்டேடு இந்தி என்பது 100க்கும் குறைவான சமஸ்கிருத சொற்களை கொண்ட ஒரு புதிய மொழி. இதற்கும் இந்திக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

உதாரணமாக பானி என்பது இந்தியில் தண்ணீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஸ்டேண்டேடு இந்தியில் பானி என்ற சொல் இல்லை. ஐலம் என்ற சொல் தான் உள்ளது. ஐலம் என்றால் வட இந்தியாவில் 99% பேருக்கு என்ன என்று தெரியாது. ஆனால் தென்னிந்தியாவில் 100% மக்களுக்கு தெரியும். 

இப்ப சொல்லுங்க இந்தியை படியுங்கள் என்பது தென்னிந்தியருக்கான கோரிக்கையா? அல்லது வட இந்தியர்களுக்கான கோரிக்கையா?


ஸ்டேண்டேடு இந்தியில் பேசினால் தென்னிந்தியர்களுக்கு நன்றாகவே புரியும். ஆனால் வட இந்தியர்களுக்கு சுத்தமாக புரியாது. மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் வைக்கும் பெயர்களே இதற்கு உதாரணம். ஆதார், ஐலசேகரம், கிசான், முத்ரா, ரயில்நீர், பசல்பீமா(பசலி), சௌச்சாலயம் இந்த சொற்களை எல்லாம் தென்னிந்தியர்கள் நேரடியாக புரிந்து கொள்கிறார்கள். வட இந்தியர்கள் பெப்பே என விழிக்கிறார்கள்.


உண்மையில் இந்தி என்பது இந்திய மொழியே அல்ல. ஆதாரத்துடன் அடுத்த பகுதில் பார்க்கலாம்.

இந்தி எதிர்ப்பு தொடரும்...


No comments:

Post a comment