17/09/2019

பேய், பிசாசு இருக்கிறது! - கருப்பு கடவுள் 1

உலகில் கடவுளை வணங்குபவர்களை விட சாத்தானை வணங்குபவர்கள் தான் அதிகம். கடவுளுக்கு பயப்படுகிறார்களோ இல்லையே பேய், பிசாசுக்கு பயப்படாதவர்கள் இல்லை.

கடவுள் கூட பிசாசுக்கு பயந்து தான் மனிதனை படைத்தார் என்று தான் வேதங்கள் சொல்கின்றன.

பைபிள், குரான், ரிக்வேதம், உபநிடங்கள் இவற்றில் கடவுளை விட பிசாசுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடவுள் மனிதனை படைப்பதற்கு முன்பே பிசாசு இருந்ததை நான்கு வேதங்களும் கூறுகின்றன. தனக்கும் பிசாசுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் மனிதனையே கடவுள் படைக்கிறார்.

வேதங்கள் சொல்வது உண்மையா, கற்பனையா என்ற விவாதத்திற்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். அப்படி சென்றால் இங்கே மதச்சண்டை போட பலபேர் காத்திருக்கிறார்கள். அதனால் தான் கடவுளை பற்றி விளக்குவதற்கு பதில் சாத்தானை பற்றி ஆய்வு செய்கிறது இந்த கட்டுரை.

மதத்திற்கு மதம் கடவுள் வேறுபடுகிறார். ஆனால் எல்லா மதத்திற்கும் ஒற்றை சாத்தான் தான் உள்ளார். சாத்தான் எல்லா மதத்திற்கும் எதிரி. கடவுள் என்ற பல கதாநாயகர்களுக்கு சாத்தான் தான் ஒற்றை வில்லன்.

கடவுள் இருக்கிறாரா? கடவுள் ஒருவரா பலரா? இதெல்லாம் உணர்வுபூர்வமான விசயங்கள். ஆனால் சாத்தானை திட்டினால் சாத்தானை தவிர கோபித்துக்கொள்ள யாருமில்லை.


கடவுள் வலிமையானவரா? சாத்தான் வலிமையானவரா என்றால் சாத்தான் தான் வலிமையானவர். இதை நான் சொல்லவில்லை. அனைத்து வேதங்களும் அதை தான் சொல்கிறது.

சரி நேரடியாக விசயத்துக்குள் செல்வோம்.

பேய் பிசாசு இருக்கிறதா? இல்லையா? இந்த கேள்விக்கு இருக்கிறது என்பது நேரடியான பதில்! கடவுளை விட பேய் பிசாசுக்கு தான் மரணமே இல்லை என்பது கூடுதல் தகவல்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகத்திற்கு உரியது. ஆனால் பேய் இருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமானது. அறிவியலால் நிரூபிக்க கூடியது.

அறிவகத்தில் இருந்து இப்படி ஒரு பதில் வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை தரலாம். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பேய், பிசாசு, சாத்தான், பில்லிசூனியம், ஏவல், வசியம் எல்லாம் சாத்தியமே! இதை அடுத்த 5 கட்டுரைகளில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்!

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் பேய், பிசாசு, சாத்தான் குறித்து பார்த்து விடலாம். பேய், பிசாசு, சாத்தான், நல்ல ஆவி, கெட்ட ஆவி, பரிசுத்த ஆவி, என எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் மொத்தமாக பேய் என்ற சொல்லில் இந்த கட்டுரைத் தொடரில் அழைக்கலாம்.

பேய் என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? என்ன செய்கிறது? மனிதர்களுடன் உறவாடுகிறதா? பேயை பார்க்க முடியுமா? இந்த எதார்த்த கேள்விகள் எல்லோர் மனதிலும் இருக்கும். இந்த கேள்விகளுக்கு நேர்மையான பதிலை பெரும் முயற்சி தான் இந்த கட்டுரைத் தொடர்.

முதலில் பேய் என்றால் என்ன என பார்ப்போம்

அறிவகத்தின் ஆய்வுகள் எப்போதும் ஐந்து கோணங்களில் இருக்கும்.
1.வேதங்கள் பார்வை,
2.சித்தர்கள் பார்வை,
3.சங்ககால பார்வை,
4.எதார்த்த பார்வை,
5.அறிவியல் பார்வை.

1.வேதங்கள் என்பது மதங்கள் பார்வை, இதில் இந்து, இஸ்லாமியம், கிருஸ்துவம், யூதம், எகிப்தியம், என மேற்கத்திய உலகின் அனைத்து மதங்களின் பார்வையில் ஆய்வு செய்வது.

2.சித்தர்கள் பார்வை என்பது தமிழ் சித்தர்கள், புத்த துறவிகள், சமண ரிசிகள், ஜென்தத்துவம் என கிழக்கத்திய தத்துவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வது.

3.சங்ககால பார்வை என்பது தொல்காப்பியம், திருமந்திரம், திருக்குறள் உட்பட தமிழ் சங்க இலக்கியங்களில் பார்வையில் ஆய்வு செய்வது.

4.எதார்த்த பார்வை என்பது வரலாற்று ரீதியாக அன்றும் இன்றும் எதார்த்த மக்கள் வாழ்க்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் அடிப்படையில் ஆய்வு செய்வது.

5. அறிவியல் பார்வை என்பது இயந்திரவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது.

முதல் கட்டுரைக்கான பக்க அளவு முடிந்து விட்டது.. அடுத்த பகுதியில் கண்டீப்பாக பேயை சந்திக்கலாம்..

செய்வினை தொடரும்...

No comments:

Post a comment