06/09/2019

நிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2

சூரியன், நட்சத்திரம், கிரகம், ராசி என பலதும் இருந்தாலும் சோதிடத்தின் அடிப்படை நிலவு தான். நிலவை வைத்து தான் அத்தனையும் அடையாளம் காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் நிலவு தவிர மற்ற அனைத்தும் கற்பனை கதாபாத்திரங்களே தவிர உண்மை அல்ல.

சூரியன் இருக்கிறது, 9 கோள்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் இன்றைய நவீன அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்படி இருக்கும் போது நிலவு தவிர மற்றவை எல்லாம் கற்பனை என சொல்லுதல் சரியாகுமா?

உண்மையில் வானியல் அறிவியலுக்கும் ஜோதிடத்திற்கும் சம்மந்தமே இல்லை. வானியல் வேறு, ஜோதிடம் வேறு. இன்றைய பெரும்பான்மை ஜோதிடர்கள் இரண்டையும் சேர்த்து குழப்பிக் கொள்கின்றனர்.

ஜோதிடம் வேறு, வானியல் வேறு!. இரண்டையும் ஒன்றுக்கு ஒன்று சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜோதிடத்திற்கு வானியலை சாட்சிக்கு அழைக்கும் போது தான் ஜோதிடம் முட்டாள் தனமாகிறது.

ஜோதிடத்தில் சொல்லப்படும் சூரியன், நட்சத்திரம், கிரகங்கள் இவற்றோடு வானில் காணப்படும் சூரியன் நட்சத்திரம், கிரகங்களை போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. அதுவேறு இது வேறு! பெயர்கள் கூட வேறு வேறு தான். தற்காலத்தில் தான் எல்லாம் ஒன்று என்ற போலித்தனத்தை கூறுகின்றனர்.

இவை குறித்து விரிவான விளக்கங்களை புத்தக வடிவில் தந்துள்ளேன். விரிவாக தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம்.

சோதிடம், ஜோதிடம், ஜாதகம், குறிசொல்லல், ஆருடம், சகுனம், வாஸ்து, கணிப்பு, தீர்க்கதரிசனம், சாமியாடல், இந்த பத்தும் வெவ்வேறானவை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதவை. ஆனால் இதை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி விட்டனர். மொத்தத்தையும் ஜோதிடம் என்ற ஒன்றுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் தான் எதுவுமே விளங்காமல் போனது.

மனம் இசைதல் அல்லது நம்பிக்கை என்பதை வியாபாரமாக்கி விட்டனர். இதனாலேயே சோதிடம் என்பது மூடநம்பிக்கையாக ஒதுக்கப்படுகிறது.

ஜோதிடத்தை வானியல் அறிவியலில் நிரூபிக்க முற்படுகின்றனர். நிச்சயமாக ஜோதிடத்தை வானியல் அறிவியலில் நிரூபிக்க முடியாது. அதே நேரத்தில் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையும் அல்ல. இதை இன்றைய ஜோதிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி நிலவு விடயத்துக்கு வருவோம்.

சோதிடம் உட்பட சாமியாடல் வரை உள்ள பத்தும் நிலவை அடிப்படையாக கொண்டவை தான்.

நம்மால் எளிமையாக, நேரடியாக கண்ணால் பார்க்க கூடியது தான் நிலவு. இரவு பகல் என்ற இரு பொழுதுகளையும் நிலவு பிரித்து தருகிறது. நிலவை விட பெரியதும் அதிக ஒளியை தருவதும் சூரியன் தான். ஆனாலும் சூழியல் ஆய்வுக்கு பழந்தமிழர்கள் நிலவையே எடுத்துக்கொண்டர்.

சூரியன் தான் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை. சூரியன் இல்லை என்றால் இரவு/பகல் இல்லை. தண்ணீர் இல்லை. மழை இல்லை. தாவரங்கள் இல்லை. உயிர்கள் இல்லை. ஏன் நிலவுக்கே சூரியன் தான் வெளிச்சம் தருகிறது. இப்படி சூரியன் தான் வானத்தின் அதிபதியாக இருக்கிறது. ஆனாலும் மனதர்களை பொருத்தவரை நிலவு தான் கடவுள். மனதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் நிலவு தான் கடவுள்.


நிலவு தான் உயிர்களை உண்டாக்கியது. நிலவு தான் உயிர்களை ஆளுகை செய்கிறது. இது வெரும் சோதிடம் அல்ல. அறிவியல் உண்மையும் கூட. சூரியன் இல்லாமல் பூமி இருக்கும். ஆனால் நிலவு இல்லாமல் பூமி இருக்காது. இதெல்லாம் பழந்தமிழர் கண்டறிந்த மிக்பெரிய அறிவியல் உண்மைகள். 

ஆனால் ஆரியர்/முகலாயர்/ஆங்கிலேயர் வருகையால் சோதிடம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. பலதையும் திரித்து தங்களுடைய தாக்கிக் கொண்டனர். அது நீண்ட நெடிய வரலாறு. அறிவகம் அறிமுக நூலில் இவை குறித்து தெளிவாக விரிவாக விளக்கி உள்ளேன்.

நிலவை புறம்தள்ளி எந்த ஜோதிடம் சொல்லி விட முடியாது. நிலவை வைத்து தான் அத்தனையையும் கணிக்கின்றனர். சோதிடம், ஜோதிடம், ஜாதகம், குறிசொல்லல், ஆருடம், சகுனம், வாஸ்து, கணிப்பு, தீர்க்கதரிசனம், சாமியாடல் இந்த பத்தும் வெவ்வேறானவை. ஆனால் பத்திற்கும் அடிப்படை நிலவு.

இது 5 குறுங் கட்டுரைகளை கொண்ட சிறுகட்டுரை தொடர் என்பதால் இந்த தொடரில் சோதிடம் பற்றி மட்டும் பார்ப்போம்.

நவீன மருத்துவத்தின் வழிகாட்டியாக நாடிசோதிடம் இருப்பது ஏன்?

நாடிசோதிடம் அழிந்ததால் மனிதகுலத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்ன?

நாடிசோதிடத்தை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த 3 பகுதிகளில் பார்க்கலாம்...

நாடிபித்தல் தொடரரும்... 

முந்தைய கட்டுரைகளை படிக்க ;

சோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1

No comments:

Post a comment