08/09/2019

மருத்துவ வேதமே நாடிசோதிடம் - சோதிடத்தின் எதிர்காலம் 3

சித்த மருத்துவத்தின் அரிய கண்டு பிடிப்பு தான் நாடிசோதிடம். நாடி சோதிடமே சித்தமருத்துவத்தின் வேதமாக உள்ளது.

வாதம், பித்தம், கபம் இந்த மூன்றின் அடிப்படையில் உடலை பரிசோதிக்கும் முறை சித்த மருத்துவம். இதில் பித்தம் என்பது உடலின் இரத்த நாளங்கங்களில் இரத்த ஓட்ட தன்மையை கண்டறியும் முறை. இரத்த அழுத்தத்திற்கு தகுந்தாற் போல உடலில் இரத்த ஓட்டம் இருக்கும். இரத்த ஓட்டத்தின் தன்மைக்கு ஏற்ப உடல் நிலை மற்றும் மனநிலையையும் கணிக்க முடியும்.

இரத்த ஓட்டம் என்பது உடல் சார்ந்த விடயம் மட்டுமல்ல. மனம் மற்றும் புறசூழல் சார்ந்தே இரத்த ஒட்டம் அமைகிறது. பதட்டமான ஒரு நிகழ்விடத்தில் நமது உடலிலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. பருவ காலங்களுக்கு தகுந்தாற்போல இரத்த ஓட்டத்தில் மாற்றம் இருக்கும். இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. இரத்த ஓட்டத்தை தான் நாடிதுடிப்பு என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர்.
சித்தமருத்துவத்தில் வாதம், பித்தம், கபம், இவற்றை பொருத்து நாடிதுடிப்பு கணிக்கப்படுகிறது. நாடி சோதிடத்தில் அண்டம், விந்து, கரு, பால், சித்தம் இவற்றை பொருத்து ஒலைச்சுவடி எழுதப்படுகிறது. இத்தகு ஓலைச்சுவடிகள் வழி எதிர்காலத்தை கணிக்கின்றனர். அந்த கணிப்பு 99% துள்ளியமாக இருப்பது தான் நாடி சோதிடத்தின் உச்சகட்ட சாதனை.
 
நவீன மருத்துவத்தில் அதிநவீன கருவிகள், தலைசிறந்த மருத்துவர்கள், துள்ளியமான மருந்துகள் உள்ளன. ஆனால் நவீன மருத்துவம் வெற்றி பெற முதல் காரணம் கேஸ் கிஸ்டரி எனப்படும் நோயாளியின் மருத்துவ குறிப்புகள் தான். வளர்ந்த நாடுகளில் கேஸ் கிஸ்டரிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கேஸ் கிஸ்டரி தான் நாடி சோதிடம்.

நவீன மருத்துவத்தில் குழந்தை பிறந்தது முதல் தான் கேஸ் கிஸ்டரி எழுதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஸ்டெம்செல், பரம்பரையில் இருந்தும் கேஸ்கிஸ்டரிக்கு உதவி நாடப்படுகிறது. இந்த கேஸ்கிஸ்டரி முறையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் நாடிசோதிடமாக பயன்படுத்தி உள்ளனர்.

இது மருத்துவத்திற்கு சாத்தியப்படும். சோதிடத்திற்கு சாத்தியப்படுமா? என்ற ஐயம் வருவது நியாயமே! அதை சாத்தியப்படுத்தியதே நாடிசோதிடத்தின் வலிமை.

சித்த மருத்துவத்தையும் நாடிசோதிடத்தையும் இரண்டாக பிரித்ததன் விளைவு தான் இரண்டும் அழிந்தற்கான காரணம். இது குறித்து விரிவான விளக்கங்கள் புத்தகத்தில் தந்துள்ளேன்.

நாடி சோதிடம் என்றால் உடனே நினைவுக்கு வருவது மயிலாடுதுறை அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் தான். இங்கு ஓலைசுவடிகளை வைத்து நாடிசோதிடம் சொல்லப்படுகிறது. நமது கைரேகையை கொடுத்தால் 30 நிமிடத்தில் நமக்கான ஓலைசுவடியை கண்டுபிடித்து முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என மூன்று பிறவிக்கும் நம்மை பற்றி சொல்லி விடுவார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை என்றால் பதில் இது தான். நாடிசோதிடம் சரியானது அது தற்போது சொல்லப்படும் விதம் தவறானது.

பெரும்பாலான நாடிசோதிடர்கள் நமது பிறந்த நேரத்தை கண்டறிவதிலேயே கவனம் செலுத்துவார்கள். அவர்கள் கேள்விகளும் அதை சார்ந்தே இருக்கும். ஒருவழியாக நமது பிறந்த நேரத்தை கண்டுபிடித்துவிட்டால், பின்னர் சோதிடம் எளிதாகிவிடுகிறது.

பிறந்தநாள், நட்சத்திரம் பார்த்து சோதிடம் தெரிய ஓலைசுவடியை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பஞ்சாங்கம் படித்தாலே போதும்.

சரி நேர்மையாக நாடிசோதிடம் படிப்பது எப்படி? கைரேகை முறையில் நமக்கான ஓலைசுவடியை கண்டுபிடித்து விட முடியுமா? உண்மையில் அப்படி ஒரு ஓலைச்சுவடி இருக்கிறதா? இன்று பிறந்திருக்கும் எனக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓலைசுவடி எழுதப்பட்டு உள்ளது என்பது சாத்தியமா?

நமக்கு மட்டுமல்ல இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் நெடுங்காலம் முன்பே ஓலைச்சுவடிகள் எழுதப்பட்டு விட்டன. அதுவும் துள்ளியமாக. ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. நமக்கான ஓலைச்சுவடியை சரியாக கண்டுபிடித்து விட்டால் போதும். நமது எதிர்காலத்தை எளிமையாக கணித்து விட முடியும்.

அந்த ஓலைச்சுவடியை கண்டுபிடிப்பது எப்படி?

நாடிபிடித்தல் தொடரும்... 

முந்தைய கட்டுரைகளைப் படிக்க : 

சோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1

நிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2

No comments:

Post a comment