18/09/2019

திக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி - தேசிய மொழி சமஸ்கிருதம் 3

இந்தியாவின் அரசு மொழி உருதா, சமஸ்கிருதமா? இந்த கேள்விக்கு இந்திய அரசால் நேரடியாக பதில் சொல்ல முடியாது.

உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி உருது தான்! உருதை தான் இந்தி என்ற பெயரில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பலருக்கும் உருது, இந்தி, இந்துஸ்தானி சஸ்கிருதம் என ஒரே குழப்பமாக இருக்கும்.

எளிமையான ஒரு விளக்கம் மூலம் குழப்பத்தை தீர்க்க முற்படுகிறேன்.

நம்ம ஊரில் புதிதாக ஆங்கிலம் பேசுபவர்கள் எப்படி பேசுவார்கள் தெரியுமா?

 "கம் யா, கோ யா, காலேஜ் போயிட்டு புக்ஸ் படிச்சிட்டு லஞ்ச் சாப்டிட்டு" இப்படி பெயர் சொற்களை ஆங்கிலத்திலும் வினை சொற்களை தமிழிலும் பேசுவார்கள். ஆங்கிலத்தில் பெயர் சொற்கள் தான் அவர்களுக்கு தெரியும். வினை சொற்கள் பேச தெரியாது.

அது தான் இந்தியிலும் நடக்கிறது.

சமஸ்கிருதத்தின் பெயர் சொற்களோடு உருதின் வினை சொற்களை சேர்த்து இந்தி என்று பெருமையாக பேசி வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்னும் இந்தி தெரியாத பலரும் இந்தியை இப்படி தான் பேசுகின்றனர்.


ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுவார்களோ, அப்படித் தான் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஸ்போக்கன் இந்தி பேசி பெருமை பட்டுக் கொள்கின்றனர்.

வினைச்சொற்கள் இல்லாமல் பெயர்சொற்களை வைத்து மட்டுமே ஒரு மொழியை பேசிவிட முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்தி!

இந்தியில் இருந்து உருது வினைச்சொற்களை எடுத்துவிட்டால் அது திக்குவாயன் பேசும் மொழியாக தான் இருக்கும். அந்த இந்தியை 130கோடி மக்களின் தேசிய மொழியாக அறிவிப்பது எவ்வளவு அபத்தம். 130கோடி இந்தியர்களும் திக்குவாய் மொழி பேச வேண்டும் என்பது தான் தேசிய மொழி கொள்கையா? 

உருது வினை சொற்கள் பயன்படுத்தாமல் ஒரேஒரு நபர் இந்தி பேசட்டும். அது முடியும் என்றால் இந்தியை தேசிய மொழியாக ஏற்கலாம். ஒருநபரால் கூட பேச முடியாத ஒரு மொழியை 130கோடி மக்களின் தேசிய மொழி என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

இந்தியை உருது வினைச்சொற்கள் இல்லாமல் பேச முடியுமா? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது இந்தியை விரும்பும் வேறு யாராக இருந்தாலும் சரி. இந்த சவாலை ஏற்க தயாரா?

சமஸ்கிருதத்தில் பெயர்சொற்களே அதிகம். வினைச்சொற்கள் மிகமிக குறைவு. அதனாலேயே அது மக்கள் பேசும் மொழியாக எந்த காலத்திலும் மாறவில்லை. சமஸ்கிருதத்தை பிறமொழி வினைச்சொற்கள் இன்றி பேசமுடியாது. இதேநிலை தான் இந்திக்கும். உருதின் வினைச்சொற்கள் இல்லாமல் இந்தியை பேச முடியாது.

சமஸ்கிருத பெயர் சொல் + உருது வினைச்சொல் = இந்தி.இது தான் இந்தியின் பார்முலா. இது தான் இந்தியாவின் அலுவல் மொழி. இதற்கு நம்ம ஊர் ஆதிவாசி மொழி எவ்வளவோ பரவாயில்லை.

மத்திய அரசின் இந்தியை இந்தி பேசும் மக்களே புரிந்து கொள்ள சிரமப்படுவது இதனால் தான். அவர்கள் பேசும் இந்தியில் இருந்து மத்திய அரசின் இந்தி முற்றிலும் வேறுபட்டு உள்ளது. அதனால் தான் வடஇந்தியர்கள் நம்மை விட மத்திய அரசின் இந்தியை கடுமையாக எதிர்க்கின்றனர்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி இலங்கை தமிழை சென்னை தமிழுக்கு மொழிபெயர்க்கும் திரைப்பட காட்சியை மனதில் கொண்டு வாருங்கள். அது தான் பிரதமரின் இந்தி உரைகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தியிலேயே மொழி பெயர்ப்பதன் ரகசியம்.

மார்னிங் எழுந்து, பாத் பண்ணீட்டு டிபன் சாப்டிட்டு, வாட்டர் குடிச்சிட்டு இப்படி ஆங்கிலம் பேசினால் கோபம் தானே வரும். ஒன்று தமிழில் பேசு, அல்லது ஆங்கிலத்தில் பேசு என்போம்.

அது போல தான் இந்தியாவின் அலுவல் மொழி இந்தி உள்ளது. ஒன்று சமஸ்கிருதத்தில் பேச வேண்டும். அல்லது உருதில் பேச வேண்டும். இரண்டும் இல்லாமல் உளறி தள்ளுகிறார்கள். இந்த உளறல் இந்தியை தான் வட இந்தியர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பஞ்சாப்பியை கொன்ற பாகிஸ்தான்! பழிதீர்த்த இந்தியா!!, 
 - கொலைவெறியில் பிறந்த இந்திய மொழிக்கொள்கையின் ஆக்கிரமத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

- இந்தி எதிர்ப்பு தொடரும்... 

முந்தைய பதிவுகளை படிக்க :

பாகிஸ்தானின் மொழி இந்தி - 2

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 1

No comments:

Post a comment