14/09/2019

அழியா ஓலைச்சுவடி - சோதிடத்தின் எதிர்காலம் 4

சித்த மருத்துவத்தின் நாடி குறிப்புகளே நாடிசோதிடமாக மேம்பாடு அடைத்தது.

நாடியை கொண்டு கணிக்கப்பட்ட உடல்சார்ந்த குறிப்புகளை வைத்து மனதையும் கணிக்க முடியும். உடல் மன ஓட்டத்திற்கு தகுந்தாற்போல அவரவர் எதிர்காலத்தை கணிக்கலாம் என்பதே நாடி சோதிடம்.

நாடி சோதிடத்தை ஓலைச்சுவடிகளில் எழுதிவைக்கும் பழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது. இந்த ஓலைச்சுவடிகள் என்பது பொதுவான தகவல்களை தருபவை. இவற்றை ஒப்புமைப்படுத்தி தனிமனிதர்களின் வாழ்வை கணிக்கும் கலையே நாடிசோதிடம்.

கைரேகை சோதிடம் வேறு நாடிசோதிடம் வேறு! கைரேகை என்பது நாடிசோதிடத்தின் ஒரு சிறு பகுதியாக இருக்கலாமே தவிர நாடிசோதிடம் அல்ல.

மனதை மகிழ்விக்க செய்யப்படும் ஒரு யுக்தியாக தான் கைரேகை சோதிடம் பார்க்கப்படுகிறது. இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது நாடிசோதிடம்.

நாடிசோதிடம் பொதுவாக புறவியல் வாழ்வியலை சொல்வதில்லை. அகவாழ்வு மற்றும் உடல்சார்ந்த கணிப்புகளை தருவதே நாடிசோதிடம்.

இதன் அடிப்படையிலேயே பழங்கால ஓலைச்சுவடிகளும் எழுதப்பட்டிருக்க வேண்டும். தற்போது 99% ஓலைச்சுவடிகளும் அழிந்து விட்டது என்றே கூறலாம். மீதம் 1% இருக்கிறது என்பதும் ஐயமே.

நாடிசோதிட ஓலைச்சுவடிகளை யாராவது காகித அச்சில் பதித்து உள்ளார்களா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதன் நம்பகத் தன்மை மற்றும் தற்போதைய புரிந்து கொள்ளல் சரியாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே!

எனவே ஓலைச்சுவடி நாடிசோதிடம் முழுமையாக அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. அங்கு நாடிசோதிட நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் நாடிசோதிட கலையை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர், என்பவை எல்லாம் நம்பகத்தன்மை அற்றவை என்றே சொல்வேன்.

அவர்கள் ஓலைச்சுவடியை பார்த்து கணிப்பது என்பது ஒரு மாய வித்தை. பிறந்த நேரம், நட்சத்திரம் வைத்தே கணிக்கின்றனர். இது குறித்து முந்தைய கட்டுரையில் விளக்கி உள்ளேன்.

ஓலைச்சுவடிகள் அழிந்து விட்டது என்றால் நாடிசோதிட கலையும் அழிந்துவிட்டதா? என்றால் இல்லை என்பதே பதில்.

நாடிசோதிடத்திற்கு ஓலைச்சுவடி என்பது ஒரு கைடு(வழிகாட்டி) மட்டுமே. அதாவது மருத்துவத்தில் நோயாளியின் கேஸ்கிஸ்டரி புத்தகம் போல நாடிசோதிடத்தில் ஓலைச்சுவடிகள் ஒரு கேஸ் கிஸ்டரி அவ்வளவே.

கேஸ்கிஸ்டரி என்பது மருத்துவருக்கான கையேடு. நோயாளிக்கு அளிக்கப்பட்ட மருத்துவம், மருந்துகளை மறக்காமல் இருக்க மருத்துவருக்கு உதவும் கையேடு தான் கேஸ்கிஸ்டரி. இதே போல தான் நாடிசோதிடர்களுக்கு ஒலைச்சுவடி என்பது ஒரு கையேடு போன்றது.

இந்த இந்த நாடி உள்ள நபர்களுக்கு இந்த இந்த மனநிலை இருக்கும் என ஒப்பீடு கணிப்புக்காக பயன்படுத்தும் கைடு தான் ஓலைச்சுவடி. 

அது எல்லாம் அழிந்து விட்டது. இந்த நூற்றாண்டில் பழைய ஓலைச்சுவடியை வைத்து நாடிசோதிடம் சொல்கிறேன் என்பது எல்லாம் வடிகட்டிய பொய்.

சரி நமக்கான ஓலைச்சுவடி விசயத்துக்கு வருவோம்.

நமக்கான அழியா ஓலைச்சுவடி நமது உடல் தான். நமது உடலை வைத்து நமக்கான முழுமையான நாடிசோதிடத்தை புத்தகத்தில் எழுதி விட முடியும். இது நம்மால் முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

நாடிசோதிடம் என்பது சுயமாக பார்த்துக்கொள்வது அல்ல. அதே போலத் தான் மருத்துவமும். இன்று சுய மருத்தும் என்பது பிரபலமாகி வருகிறது. இது மிகப்பெரிய முட்டாள் தனம். இதுகுறித்து வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்.

சோதிடமும், மருத்துவமும், சட்டவாதமும் சுயமாக பார்க்க கூடாது. எனென்றால் மூன்றும் மனதுடன் தொடர்புடையவை. நமது மனம் என்பது நமக்காக வாழ்வது இல்லை. நம்மை சார்ந்தவருக்காக தான் வாழ்கிறது. நம்மை சார்ந்தவரே நமக்காக வாழ்கிறார். புறிந்து கொள்ள கடினமான விசயம் தான். இங்கு விளக்கினால் சோதிடத்தில் இருந்து விலகி வேறு விசயத்திற்கு போய்விடுவோம். எனவே மனம் குறித்த விளக்கத்தை தவிர்க்கிறேன்.

நமக்கான நாடிசோதிடத்தை கைதேர்ந்த ஒரு சித்த மருத்துவரால் எழுதிவிட முடியும். நவீன மருத்துவத்திலும் இது சாத்தியம் தான். இதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நவீன இயந்திரங்கள் நாடிசோதிடத்தை துள்ளியமாக கணிக்கும் காலம் வந்துவிட்டது.

அது எப்படி என்பதை அடுத்த இறுதி பகுதில் பார்க்கலாம்.

நாடி பிடித்தல் தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க: 

சோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1

நிலவு தான் கடவுள் - சோதிடத்தின் எதிர்காலம் 2

மருத்துவ வேதமே நாடிசோதிடம் - சோதிடத்தின் எதிர்காலம் 3


No comments:

Post a comment