20/09/2019

பிராமணர்களின் சொப்பன சுந்தரி உருது - இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 4

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க குரங்கு மாதிரி வெப்பாட்டி எதற்கு? இந்த பழமொழி இந்திய மொழி கொள்கைக்கு தாராளமாக பொருந்தும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு காஷ்மீரை விட உருதுமொழி தான் சொப்பன சுந்தரியாக இருந்தது. உருதை யார் வைத்துக்கொள்வது என்பதில் தான் இரு நாட்டினருக்கும் கட்டிப்பிடி சண்டை நடந்தது.

பிரிட்டீஷ் இந்தியாவில் ஆங்கிலத்துடன் உருது அரசு மொழியாக இருந்தது. ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள், அரசு ஆவணங்கள் என எல்லாம் உருதில் தான் இருந்தன.

சுதந்திரத்தின் போது பாகிஸ்தான் உருது மொழியை தனதாக்கி கொண்டது. உருது மொழியை பெறுவதில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது.

உலகிலேயே அதிக உருது பேசும் மக்கள் இந்தியாவில் தான் உள்ளனர். பாகிஸ்தானில் 8% குறைவான மக்களே உருது மொழியை பேசுகின்றனர். பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி பஞ்சாபி மொழி. இந்தியாவில் 50% மக்கள் உருது மொழி பேசுகின்றனர்.

அதிக மக்கள் பேசும் மொழி அடிப்படையில் பார்த்தால் பாகிஸ்தானுக்கு பஞ்சாப்பியும். இந்தியாவிற்கு உருதும் தான் தேசிய மொழியாக இருக்க முடியும்.

இந்தியாவின் பெரும்பான்மை மொழியான உருதை பாகிஸ்தான் பிடுங்கி கொண்டது. காரணம் உருது இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைய மொழியாக கருதப்பட்டது. உருதுமொழிக்காக இந்தியா பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மதத்தின் பேரில் அடித்துக்கொண்டனர்.

அப்போது தான் அம்பேத்கர் சொன்னார் தேசிய மொழியாக இந்திய மொழியான சமஸ்கிருதம் போதும் என. ஆனால் நேரு தலைமையிலான அரசியல் குழுவினர் பாகிஸ்தான் தட்டிப்பறித்த உருதின் மீதே காதல் கொண்டிருந்தனர்.
 
சமஸ்கிருதம் என்ற அழகிய மனைவி இருக்கும் போது பிராமணர்கள் உருது என்ற சொப்பன சுந்தரிக்கு ஆசைப்பட்டது ஏன்? அங்கே தான் ஆரிய இச்சை வெளியே வருகிறது.
சமஸ்கிருதம் ஆரிய மொழி அல்ல என்பது பிராமணர்களுக்கு நன்றாகவே தெரியும். சமஸ்கிருதத்தை ஒருகாலமும் மக்கள் பேச்சு மொழியாக கொண்டு வர முடியாது என்பதும் பிராமணர்களுக்கு தெரியும். இப்போது அவர்களுடைய தேர்வு உருது.

உண்மையில் உருது மொழி தான் பிராமணர்களை வாழ வைத்தது. சமஸ்கிருதம் என்பது தென்னிந்தியாவில் அந்தணர்கள் பயன்படுத்தும் ஒரு வட்டார மொழியாக மட்டுமே இருந்தது.

சமஸ்கிருதமும், உருதும் பிராமணர்களுக்கு தாய்மொழி அல்ல. பிராமணர்கள் தத்துக்கொண்ட மொழிகள். பிராமணர்களுக்கு தாய்மொழி என ஒன்று இல்லை. அவர்கள் அரசர்களை அண்டி பிழைத்ததால் அரச மொழிகளையே தங்களின் பேச்சுமொழியாக கொண்டனர்.

பிராமணர்கள் ஒருகுடும்பம், ஒருதார முறை, ஓரிடம், ஓர் அரசு என ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர். அவர்கள் பெரும்பாலும் நாடோடிகளாகவே இருந்தனர். பிராமணர்களுக்கு மனைவி என்பதே கிடையாது. தானம் கிடைக்கும் பெண்களை தற்காலிக மனைவியாக வைத்துக்கொள்ளும் வழக்கமே பிராமணர்களிடம்  இருந்தது. 

இங்கே பிராமணர்களுக்கும் அந்தணர்களுக்கும் வேறுபாடு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தற்போது சாதி அடிப்படையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்போர் எல்லாம் அந்தணர் பிரிவில் வருவர். இதுகுறித்து ரிக்வேதம் யாருடையது கட்டுரையில் விளக்கி உள்ளேன்.

சரி மொழி கொள்கைக்கு வருவோம்.

இந்தியாவில் பல்வேறு அரசுகளின் காலத்தில் உருதே அரசு மொழியாக இருந்தது. ரிக் வேதம் உட்பட பல சாஸ்திரங்கள் உருதில் தான் எழுதப்பட்டு இருந்தது.  அரசுகளை அண்டிபிழைத்த பிராமணர்கள் உருதை கச்சிதமாக கட்டிப்பிடித்துக் கொண்டனர். உருது இலக்கியங்களை களவாடிய பிராணர்களுக்கு இஸ்லாம் மதம் மட்டும் கசந்தது.

1948க்கு முன்னர் இந்துஸ்தானி என்றே உருது மொழி அழைக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்தி என்ற மொழியே இல்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இந்துஸ்தானி தான் இருந்ததே தவிர இந்தி என்பது இல்லவே இல்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தான் முதன்முதலில் இந்தி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அன்று முதலே இந்தி என்ற மொழியும் உருவாக துவங்கியது. உருதை விடவும் முடியாமல், சமஸ்கிருதத்தை ஏற்கவும் முடியாமல் பிராமணர்கள் எடுத்த இரட்டை நிலைபாட்டின் அடையாளம் தான் இந்தி!

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க தமிழர்கள் முதல்குரல் கொடுக்க வேண்டும்! - அது ஏன்?

அடுத்த இறுதி பகுதியில் பார்க்கலாம். 

- இந்தி எதிர்ப்பு தொடரும்.

பின் குறிப்பு : கருத்தின் வீரியத்தை சொல்லவே சொப்பன சுந்தரி என்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது. யார் மனதையும் புண்படுத்த அல்ல.

முந்தைய பதிவுகளை படிக்க :

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 1

பாகிஸ்தானின் மொழி இந்தி - 2

திக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி -  3

No comments:

Post a comment