23/09/2019

பிராமணர்களின் முகத்திரையை கிழிப்போம் - இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 5

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் என்றால் தமிழர்களை விட முதலில் எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் தான். இந்த சூட்சமம் புரியாமல் இன்று வரை தமிழர்கள் சமஸ்கிருதத்தை எதிர்த்து வருகின்றனர்.

தமிழர்கள் சமஸ்கிருத எதிர்ப்பை கைவிட்டு, பிராமண எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது தான் இந்த கட்டுரை தொடர்.

இப்போதும் பலருக்கும் குழப்பமாக இருக்கலாம்.

பிராமண எதிர்ப்பும் சமஸ்கிருத எதிர்ப்பும் ஒன்று தானே. பிராமணர்களின் மொழி தானே சமஸ்கிருதம். அந்த சமஸ்கிருதத்தில் தானே வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் உள்ளது. சமஸ்கிருதத்தை எதிர்ப்பதன் வழி பிராமணத்தை தானே எதிர்க்கிறோம்!. - இப்படி நினைத்தால் நீங்கள் இன்னும் பிராமணியத்திற்கு அடிமையாகவே இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பிராமணியம் வேறு சமஸ்கிருதம் வேறு! - இந்த அடிப்படை வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சமஸ்கிருதம் என்பது பிராமணர்களின் மொழி அல்ல. இந்தி தான் பிராமணர்களின் மொழி!,  பார்சி தான் பிராமணர்களின் பூர்விக மொழி!, பார்சி மொழியில் இருந்து வந்து தான் உருது. உருதில் இருந்து வந்தது தான் இந்தி!. இந்த இந்தியை தான் தற்போது பிராமணர்களின் இறுக பிடித்து உள்ளனர்.
சமஸ்கிருதம் என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அந்தணர் மொழி!. இதை மறை மொழி, இரகசிய மொழி, இறைமொழி, குறிமொழி என்று பல பெயர்களில் சங்க காலத்தில் அழைத்துள்ளனர். இது குறித்து சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழி என்ற கட்டுரையில் விளங்கி உள்ளேன்.

சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல. அது ஒரு குறியீடு. கணிதம் எப்படி ஒரு மொழி அகாதோ, அது போல சமஸ்கிருதமும் ஒரு மொழி ஆகாது. சமஸ்கிருதம் கணிதம் போல ஒரு குறியீடாக தான் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கிரந்தம் என்றாலே குறியீடு என்றுதான் அர்த்தம். 

குறியீட்டு மொழியை மக்கள் பேச்சு மொழியாக எந்த காலத்திலும் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. மக்களால் பேச முடியாத ஒரு மொழியை எப்படி 130 கோடி மக்களின் தேசிய மொழியாக முடியும்?

சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என இந்த கட்டுரை வலியுறுத்துவதன் காரணம் இது தான். சமஸ்கிருதம் என்ற மொழி எது என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்! இந்த அடிப்படை கேள்வியை ஒட்டுமொத்த தமிழர்ளும் கேட்க வேண்டும். இது இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும்!

இந்தி தான் சமஸ்கிருதம் என்ற மாயையை முதலில் உடைத்தெறிய வேண்டும்! இந்தி என்பது சமஸ்கிருதம் அல்ல. இந்தி என்பது உருது என்பதை வெட்டவெளிச்சமாக்க வேண்டும்!
 
சமஸ்கிருதம் தான் இந்தியாவின் பூர்விக மொழி என்றால் அதை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவியுங்கள்! எங்கிருந்தோ வந்த இந்தியை எப்படி தேசிய மொழியாக அறிவிக்க முடியும்? இந்தி வேறு சமஸ்கிருதம் வேறு என்பதை இந்துமதத்தை பின்பற்றும் மக்களுக்கு புரிய வையுங்கள்!

உருது ஒருபோதும் சமஸ்கிருதம் ஆகாது. உருதுக்கும் இந்திக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இதை இந்துமதத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தி என்ற போர்வையில் பிராமணர்கள் சமஸ்கிருதத்தை வளர்க்கிறார்கள் என்ற பார்வையே தவறு! சமஸ்கிருதம் என்ற போர்வையில் பிராமணர்கள் வாழ்கிறார்கள் என்ற பார்வை தான் சரியானது. 

சமஸ்கிருதம் என்ற போர்வைக்குள் பிராமணர்கள் அன்றும் இன்றும் சுகமாக வாழ்கிறார்கள். இது இனியும் தொடர கூடாது! சமஸ்கிருதம் வேறு! பிராமணர்கள் வேறு! இந்த உண்மையை முதலில் வெளிக்கொண்டு வர வேண்டும்.

சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி அல்ல. பார்சி தான் பிராமணர்களின் மொழி! உண்மையில் பார்சி மொழியில் எழுதப்பட்டது தான் ரிக் வேதம். பின்னாளில் அது ரோமனாக்கப்பட்டது. ரீக்வேதம் இன்று வரை சமஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? 

தேவநாகரி எழுத்துக்களை தான் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்., நாகரி எழுத்துக்களை பற்றி நீங்கள் கேள்விபட்டதில்லை. அங்கே தான் பிராமணியம் வெற்றி பெற்று இருக்கிறது. நாகரி எழுத்துக்களை தான் தேவநாகரி என பெயர்சூட்டிக் கொண்டனர். நாகரி எழுத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் தான் வடமொழி இலக்கியங்கள்!

வடஇந்தியா முழுவதும் பரவி இருந்த நாகரி மொழி எது? அந்த நாகர்கள் யார்? சட்ட மேதை அம்பேத்கார் தேடினார். அவரின் தேடல் முடிவையே இந்த கட்டுரைத் தொடரின் முடிவுரையாக வைக்கிறேன். 

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் என்ற அம்பேத்கரின் கூற்றில் துவங்கிய இந்த கட்டுரைத் தொடரை,  நாகர்கள் யார்? என்ற அம்பேத்கரின் ஆய்வில் முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

முற்றும்! நன்றி.
.
முந்தைய பதிவுகளை படிக்க :

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 1

பாகிஸ்தானின் மொழி இந்தி - 2

திக்குவாய் மொழி பேசும் பிரதமர் மோடி -  3

பிராமணர்களின் சொப்பன சுந்தரி உருது - 4

No comments:

Post a comment