24/10/2019

குவாண்டவியல் 2

விதிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

இயற்பியல் உலகில் மட்டுமே விதிகள் உள்ளன. மீச்சிறு உலகம் எனப்படும் குவாண்டவியலிலும், மீப்பெரு உலகம் எனப்படும் வானியலிலும் விதிகள் இல்லை. கோட்பாடுகளே உள்ளன.

விதிகள் என்பது நிரூபிக்கப்பட்டவை. கோட்பாடுகள் என்பது நிரூபிக்கப்படாதவை.

குவாண்டவியல் உலகில் உள்ள அனைத்தும் விதிகள் அல்ல. கோட்பாடுகள் தான் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்!

இயற்பியல் உலகில் 0.1 மில்லிமீட்டர் விட்டத்திற்கு மேல் உள்ள பொருட்களை மட்டுமே நாம் கண்ணால் பார்க்க முடியும். அதாவது தூசை விட பெரிய பொருட்களை மட்டுமே பார்க்க முடியும்.

0.1 மி.மீ க்கும் குறைவான பொருட்களை நுண்ணோக்கி உதவியுடன் பார்க்கிறோம். இங்கிருந்து சிறிய உலகம் துவங்குகிறது. நுண்ணோக்கி வழியாக மூலக்கூறு நிலை வரை சிறிய பொருட்களை பார்க்க முடியும்.

0.1மி.மீட்டரில் இருந்து 100 மடங்கு சிறிதான பொருட்கள் வரை நுண்ணோக்கி வழியாக பார்க்கலாம். இதை நானோ மீட்டர் என மீச்சிறு(குவாண்டவியல்) உலகில் சொல்கிறோம்.

கண்ணால் பார்க்க கூடியவை பொருட்கள். நுண்ணோக்கியால் பார்க்ககூடியவை மூலப்பொருட்கள். மூல பொருட்களை தான் மூலக்கூறுகள் என்கிறோம். 

மூலக்கூறு என்றால் என்ன?

ஒரு பொருளில் அடங்கி உள்ள மூலப்பொருட்கள் தான் மூலக்கூறுகள். உதாரணமாக ஒரு காப்பியில் என்ன என்ன மூல பொருட்கள் இருக்கும்? சக்கரை, காபிதூள், தண்ணீர் இந்த மூன்றும் சேர்ந்த கலவை தான் காபி. இயல்பு உலகில் காபி கலவையில் உள்ள மூலக்கூறுகளை இப்படி தான் சொல்வோம். அதேபோல சிறிய உலகில் சிறிய பொருளின் கலவையை பிரித்து அதில் உள்ள பொருட்களை மூலக்கூறுகளாக பெயரிடுகிறோம். 
காபித்தூளில் 0.1 மில்லிமீட்டருக்கும் குறைவான ஒரு தூளை எடுத்து நுண்ணோக்கி வழி அதை பார்த்தால் அதில் நூற்றிற்கும் மேற்பட்ட தூள்கள் இருப்பது தெரியும். அந்த நூற்றிற்கும் மேற்பட்ட தூள்களில் ஒரே மாதிரி இருக்கும் தூள்களை மூலக்கூறுகளாக பிரிக்கிறோம். 


காபியில் எப்படி சக்கரை, காபிதூள், தண்ணீர் என்ற கலவை இருக்கிறதோ, அதே போல சிறிய பொருட்களில்  மூலக்கூறு கலவையாக இருக்கும்.

மூலக்கூறுகளை 118 வகைகளாக பிரித்து உள்ளனர். அந்த 118 வகைகளை தான் தனிமங்கள் என பெயரிட்டு அழைக்கிறோம்.

மூலக்கூறுகளை எப்படி 118 வகைகளாக பிரித்தார்கள். 118 தனிமங்கள் எப்படி வந்தன?

நுண்ணோக்கி வழி ஒரு பொருளை பார்த்தால் அதில் பல மூலக்கூறுகள் இருப்பது தெரியும். அந்த மூலக்கூறுகள் பலவாக இருந்தாலும் சிறுசிறு குழுக்களாக இருப்பதை காணமுடிந்தது.

உதாரணமாக ஒரு கல் துண்டை பிரித்து பார்பதாக வைத்துக்கொள்வோம். கல்லை நுணுக்கி 0.1மில்லி மீட்டர் அளவுள்ள ஒரு துகளை எடுத்து நுண்ணோக்கி வழி பார்க்கிறோம். 0.1 மில்லி மீட்டர் உள்ள ஒரு துகள் நுண்ணோக்கியில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய 100 துகள்களாக தெரிகிறது. 100 துகள்களாக இருந்தாலும் அவை சிறு சிறு குழுக்களாக உள்ளன.

உதாரணமாக 60 துகள்கள் ஒரே மாதிரியாகவும், 30 துகள்கள் ஒரே மாதிரியாவும், 6 துகள்கள் ஒரே மாதிரியாவும், 3 துகள்கள் ஒரே மாதிரியாவும், 1 துகள் ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. இதில் 60 துகள்களுக்கு ஒரு பெயர் இடுகிறோம். உதாரணமாக கார்பன் என வைத்துக்கொள்ளுங்கள். 30 துகள்களுக்கு சோடியம் என பெயரிடுகிறோம். 6 துகள்களுக்கு இரும்பு என பெயரிடுகிறோம். 3 துகள்களுக்கு வெள்ளி என பெயரிடுகிறோம். 1 துகளுக்கு தங்கம் என பெயரிடுகிறோம்.

ஒரு வீட்டில் உள்ள 10 பிள்ளைகளுக்கு 10 பெயர் இட்டு அழைப்பது போல, ஒரு பொருளில் உள்ள பல்வேறு மூல பொருட்களுக்கு தனித்தனி பெயர் இட்டு அழைக்கிறோம். அவ்வளவு தானே தவிர தனிமம் என்றால் ஏதோ பூதம் அல்ல.

உலகில் உள்ள மொத்த பொருட்களையும் 118 வகைகளாக பிரித்துள்ளனர் அறிவியலாளர்கள். அந்த 118 வகைகள் தான் 118 தனிமங்கள். 

ஒரு குப்பை தொட்டியில் உள்ள பொருட்களை பிரிக்கிறீர்கள். அதை வகைவகையாக பிரிக்கிறீர்கள். ஒரே மாதிரி இருப்பதை எல்லாம் ஒரு பெட்டியில் போடுகிறீர்கள். இப்படி பிரித்ததில் 118 வகையான பொருட்கள் 118 பெட்டிகளில் வந்துள்ளது. இப்போது இந்த 118க்கும் 118 பெயர் வைக்கிறீர்கள்.

இப்படி உலகில் உள்ள எல்லா பொருட்களையும் 118 பிரிவுகளாக பிரித்து பெயரிட்டு உள்ளனர். அந்த 118 தான் 118 தனிமங்கள். இதில் 94 இயற்கையாக இருப்பவை. மீதம் 24 செயற்கையாக நாம் தயாரிப்பது. செயற்கை என்பது இயற்கையில் இருந்து தான் வருகிறது என்பதால் 94 வகையான தனிமங்கள் இந்த உலகில் உள்ளது.

தனிமம் என்றால் தனித்தன்மை உடையது. அதை மேலும் தனிமைப்படுத்த முடியாது. பிரிக்க முடியாது. சேர்மம் என்றால் சேர்ந்து இருப்பது. பல தனிமங்கள் சேர்ந்து இருப்பது சேர்மம். 

மூலக்கூறு என்றால் தனிமம் அல்லது சேர்மங்கள் கொத்தாக இருப்பது. நம்மால் நுண்ணோக்கி வழி இந்த கொத்தை தான் பார்க்க முடியுமே தவிர தனிமங்களை தனியாக பார்க்க முடியாது. அதனால் தான் மூலக்கூறு, மூலக்கூறு என அழைக்கிறோம்.

தொடரும்...

No comments:

Post a comment