25/10/2019

குவாண்டவியல் 3

கண்ணால் 0.1 மில்லி மீட்டர் வரையுள்ள துகள்களை பார்க்கிறோம். அதற்கும் குறைவான பொருட்களை நுண்ணோக்கி வழி பார்க்கிறோம். அப்படி பார்க்கும் போது மூலக்கூறுகள் தெரிகிறது. இந்த மூலக்கூறுகளையும் உடைத்து இன்னும் சிறிதாக பார்க்க முடியுமா? 
அந்த முயற்சியில் கிடைத்தது தான் எலக்ட்ரான் நுண்ணோக்கி. எலக்ட்ரான் நுண்ணோக்கி வழி மூலக்கூறுகளின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.
மூலக்கூறுகளில் உள்ள தனிமங்களை தனிமைப்படுத்தி, தனிமங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை எலக்ட்ரான் நுண்ணோக்கி வழி பார்த்தார்கள்.
தனிமங்களுக்குள் 3 வகை பொருட்கள் இருப்பதை காண முடிந்தது. நடுவில் ஒன்றும் அதை ஒட்டி ஒன்றும் நடுவில் இருந்து தொலைவு வட்டமாக ஒன்றும் இருப்பது தெரிந்து.
நடுவில் இருப்பதற்கு நியூட்ரான் என பெயர் வைத்தனர். அதை ஒட்டி இருப்பதற்கு புரோட்டான் என பெயர் வைத்தனர். தொலைவு வட்டமாக இருப்பதற்கு எலக்ட்ரான் என பெயர் வைத்தனர்.
எலக்ட்ரான் நுண்ணோக்கி
வெறும் கண்ணால் பார்த்த தூசியை 100 மடங்கு சிறிதாக உடைத்து பார்த்தபோது மூலக்கூறு தென்பட்டது. மூலக்கூறுகள் 94 வகைகளாக இருந்தன. 94 வகைகளை தனிமங்கள் என பெயரிட்டனர். தனிமங்களை உடைத்து பார்த்த போது அதில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று பொருட்கள் இருப்பது தெரிந்தது.
94 தனிமங்களையும் தனித்தனியாக உடைத்து பார்த்த போதும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று பொருட்கள் தான் இருந்தன.
இப்போது அறிவியலாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். தனிமங்கள் 94 வகையாக இருந்தாலும், எல்லா தனிமங்களும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று அடிப்படை பொருட்களால் உண்டானவைகள். இந்த மூன்று அடிப்படை பொருட்கள் தான் எல்லா தனிமங்களிலும் இருக்கிறது. இந்த மூன்று அடிப்படை பொருட்களின் அளவை பொருத்தே தனிமங்கள் வேறு வேறாக வேறுபடுகின்றன. அளவு தான் வேறு படுகிறதே தவிர அடிப்படை பொருள் என்னவோ இந்த மூன்றும் தான். எனவே எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்றும் தான் அடிப்படை பொருள்கள் என முடிவுக்கு வந்தனர்.
எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்ற மூன்று அடிப்படை பொருட்களும் சேர்ந்த அமைப்பை அணு என பெயரிட்டு அழைத்தனர்.
அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று அடிப்படை பொருட்கள் இருக்கும். இந்த மூன்று பொருட்களின் அளவை பொருத்து அணுகள் வேறுபடும். அப்படி 94 வகையான தனிமங்கள் உலகில் உள்ளது. 94 தனி தனிமங்களும் தனித்தும் சேர்ந்தும் மூலக்கூறு நிலையில் உள்ளன. மூலக்கூறுகள் சேர்ந்த மொத்த அமைப்பு பொருட்களாக காட்சி அளிக்கிறது.
0.1மில்லி மிட்டருக்கும் பெரிதான பொருட்களை நம்மால் கண்களால் பார்க்க முடிகிறது.
எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்று துகள்களால் ஆனது அணுக்கள். அணுக்களால் ஆனது தனிமங்கள். தனிமங்களால் ஆனது மூலக்கூறுகள். மூலக்கூறுகளால் ஆனது பொருட்கள். பொருட்களால் நிறைந்தது பிரபஞ்சம்.
நாம் கண்ணால் பார்க்கும், புலன்களால் உணரும் பொருட்களை 3 வகையாக பிரிக்கிறோம். 1.திடம், 2.திரவம், 3.வாயு. இந்த மூன்றும் நமது இயல்பு உலகில் இருப்பவை. திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளோடு அணுநிலை, பிளாஸ்மா நிலை என்ற இரண்டு நிலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
அணுநிலை என்பது மீச்சிறு உலகம் எனப்படும் குவாண்டவியலில் உள்ள நிலை. பிளாஸ்மாநிலை எனப்படுவது மீப்பெரு உலகம் எனப்படும் வானியலில் உள்ள நிலை.
1. அணுநிலை, 2.திடநிலை, 3.திரவநிலை, 4.வாயுநிலை, 5.பிளாஸ்மா நிலை இந்த ஐந்து நிலைகள் தான் பொருளின் நிலைகள். இதை அறிவியலின் பஞ்சபூதம் என்று கூட சொல்லலாம்.
திடம், திரவம், வாயு நிலைகள் எல்லோருக்கம் தெரியும். நாம் அன்றாடம் இந்த நிலைகளில் உள்ள பொருட்களை நேரடியாகவே பயன்படுத்துகிறோம். திடமாக உள்ள உணவை உண்கிறோம். திரவமாக உள்ள தண்ணீரை குடிக்கிறோம். வாயுவாக உள்ள காற்றை சுவாசிக்கிறோம். 
திடநிலை - திரவநிலை - வாயுநிலை
இதில் திடம் மற்றும் திரவத்தை தான் கண்ணால் பார்க்க முடியும். வாயுவை நுகர(மணம் பிடிக்க) முடியும்.

அணுநிலை மற்றும் பிளாஸ்மா நிலைகளை பார்க்கவோ, நுகரவோ, கேட்கவோ, ருசிக்கவோ, உணரவோ முடியாது. ஏனென்றால் இந்த இரண்டும் நம் இயல்பு உலகில் இல்லை. திடம், திரவம், வாயு இந்த மூன்று நிலைகள் தான் நமது இயல்பு உலகில் உள்ளது. இயல்பு உலகில் இல்லாத ஒன்றை நம்மால் நேரடியாக ஐம்புலன்கள் வழி அறிய முடியாது.
பார்க்க முடியாது, கேட்க முடியாது, மணக்க முடியாது, ருசிக்க முடியாது, தொட்டு உணர முடியாது. முதலில் அப்படிப்பட்ட ஒன்று உள்ளதா? ஆம் என்றால் அதை நம்மால் எப்படி அறிய முடிந்தது? அது எப்படி நம்மை பாதிக்கிறது? அது எப்படி நமக்கு பயன்படுகிறது?
இங்கே தான் குவாண்டவியல் துவங்குகிறது. 

கணிணி, இணையம், தொலைகாட்சி, செல்போன், செயற்கைகோள், மின்சாரம் என நாம் சொகுசாக பயன்படுத்தும் அனைத்தும் குவாண்டவியலின் நன்கொடை தான்

தொடரும்...

No comments:

Post a comment