27/10/2019

குவாண்டவியல் 4

1.அணுநிலை, 2.திடநிலை, 3.திரவநிலை, 4.வாயுநிலை, 5.பிளாஸ்மாநிலை. இந்த 5 நிலைகளில் பொருட்கள் உள்ளன.

இவற்றுள் திடம், திரவம், வாயு மூன்று நிலைகளையும் நாம் நமது புலன் உறுப்புகள் வழி அறிகிறோம். ஏனென்றால் திடம், திரவம், வாயு நிலைகள் நமது இயல்பு உலகில் உள்ளவை.

நமது இயல்பு உலகில் இல்லாத அணுநிலையையும், பிளாஸ்மா நிலையையும் நம்மால் நேரடியாக புலன்களை கொண்டு அறிய முடியாது. ஆனால் கருவிகளின் துணையுடன் அறியலாம். அப்படித் தான் அறிந்தும் வருகிறோம்.

கருவிகளை கொண்டு அணுநிலையை அறிந்து, அணுநிலையில் பொருட்களை கையாளும் துறைதான் குவாண்டவியல்.

எந்த ஒரு பொருளையும் நம்மால் ஐந்து புலன்களால் மட்டுமே அறிய முடியும். 1. கண்ணால் பார்க்க வேண்டும், 2. காதால் கேட்க வேண்டும். 3. மூக்கால் மணக்க வேண்டும். 4.நாக்கால் ருசிக்க வேண்டும். 5. உடலால் தொட்டு உணர வேண்டும். இந்த 5ல் ஏதாவது ஒரு புலனிலாவது நாம் அறிந்தால் மட்டுமே ஒரு பொருளை நம்மால் அறிய முடியும்.

ஐம்புலன்களில் எந்த புலனாலும் உணரப்படாத ஒன்றை நம்மால் அறிய முடியாது. அப்படி ஒரு பொருள் நமது இயல்பு உலகில் இல்லை .
பூனை கண்ணை மூடி விட்டால் உலகம் இருண்டு விடுமா? நம்மால் உணரமுடியவில்லை என்பதற்காக வேறு பொருட்கள் இல்லை என்று சொல்வது சரியா?

நம்மால் உணரமுடியாத பொருட்களும் இருக்கின்றன என்பது கோட்பாடு படி சரியாக இருக்கலாம். ஆனால் விதிப்படி நம்மால் உணரமுடியாத பொருட்கள் பிரபஞ்சத்தில் இல்லை என்பது தான் உண்மை!

நம்மால் உணர முடியாத பொருள் இந்த பிரபஞ்சத்தில் இப்போதும் இல்லை. எப்போதும் இருந்தது இல்லை. இது தான் அறிவியல் உண்மை.

நமது உலகில் இருப்பது எல்லாம் பொருட்கள் மட்டுமே. ஆற்றலுக்கு இங்கு வேலையே இல்லை. பொருட்களை நம்மால் உணரமுடியாத நிலைக்கு பெயர் தான் ஆற்றல்.

உதாரணமாக மின்சாரம் என்பது ஆற்றல். அதை நம்மால் உணர முடியாது. மின்சாரத்தை உணர எதாவது ஒரு பொருள் வேண்டும். எந்த பொருளும் இல்லாமல் மின்சாரத்தை நம்மால் உணர முடியது. மின் விளக்காக, மின் விசிறியாக, கணிணியாக, செல்பேசியாக என எதாவது ஒரு இயந்திரத்தின் வழியாகவே மின்சாரத்தை உணர முடியும்.
ஸ்டீபன் ஹாக்
அதே போல தான் இயக்கமும். ஒரு பொருள் இல்லாமல் எந்த இயக்கத்தையும் நம்மால் உணர முடியாது. ஒரு தூசாவது(Dust) இருந்தால் மட்டுமே காற்றை கூட நம்மால் அறிய முடியும்.

எந்த ஒரு பொருளும் இல்லாமல் வெளிச்சத்தை நம்மால் உணர முடியாது. பொருள் இல்லாமல் வெப்பத்தை நம்மால் உணர முடியாது. பொருள் இல்லாமல் ஆற்றலையோ, இயக்கத்தையோ, விசையையோ, திசையையோ, நீளம், நிறை, காலம் என எதையுமே நம்மால் உணர முடியாது.

எல்லாவற்றிற்கும் பொருள் தேவை. நம்மால் பொருளை மட்டுமே உணர முடியும். இதுவே நமது இயல்பு உலகின் அடிப்படை விதி. இயல்பு உலகில் மட்டுமல்ல அணுவியல் உலகிலும், வானியல் உலகிலும் இது தான் அடிப்படை விதி.

20ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் பொருள் அல்லாத ஒன்று பிரபஞ்சத்தில் உள்ளது. அதுவே எல்லாவற்றையும் இயக்குகிறது என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதற்காக அவர்கள் ஆற்றலை அறிமுகப்படுத்தினர். ஆற்றல் தான் பொருளாக இருக்கிறது என்ற கோட்பாட்டை உறுதியாக பதிய வைத்தனர்.

பொருளை இரண்டாம்பட்சமாக்கி ஆற்றலை முதன்மை படுத்தி புகழ்பெற்ற கோட்பாடு தான் E=MC^2 சமன்பாடு.

ஐன்ஸ்டின் வந்தவுடன் நியூட்டனை ஓரம்கட்டி விட்டனர் அறிவியலாளர்கள். ஆனால் இது மிகப்பெரிய வரலாற்று பிழை என்றே தோன்றுகிறது. ஆற்றலை விட பொருளே முக்கியம் என்ற சிந்தனை இருந்திருந்தால் அறிவியல் வளர்ச்சி  இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம். சரி இப்போதைக்கு அதை பற்றி பேசி குழம்பிக்கொள்ள வேண்டாம். குவாண்டவியலுக்குள் வருவோம்.

20ம் நூற்றாண்டு முழுவதும் ஆற்றல் ஆராய்ச்சிகளே கொடி கட்டி பறந்தன. ஒளியை ஆற்றலாக கருதி ஆயிரக்கணக்கான வானியல் நிகழ்வுகளை கண்டு பிடித்தனர். பிக்பேங் தியரி முதல், இன்றைய பிளாக்ஹோல், வாம்ஹோல், டைம் டிராவல் வரை ஆற்றல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் தான்.

கணிணி, இணையம், செயற்கைகோள், செல்போன், 3ஜி, 4ஜி, 5ஜி என எல்லாம் ஆற்றல் ஆராய்ச்சியால் நமக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். இப்படித்தான் இன்று வரை எல்போரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அறிவியலாளர்களும் ஆற்றலை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை.

அறிவியலாளர்களின் ஆற்றல் கொண்டாட்டம் ஆபத்தானது. கடவுளை கண்மூடித்தனமாக நம்புங்கள் என்கிற ஆன்மீகவாதிகளுக்கும், ஆற்றல் கோட்பாடுகளை நம்புங்கள் என்கிற அறிவியலாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆற்றல் என்ற மாயையின் பின்னால் போன அறிவியலாளர்கள் கோட்பாடுகளை தான் புற்றீசலாய் பெற்று தள்ளுகிறார்களே தவிர, அறிவியலின் அடிப்படை "விதிகள்" என்பதை மறந்து விட்டார்கள்.

நமக்கு தேவை கோட்பாடுகள் அல்ல. நமக்கு தேவை நிரூபிக்கப்படும் விதிகள். கண்ணுக்கு தெரியாத ஆற்றல் என்பதற்கும், கண்ணுக்கு தெரியாத கடவுள் என்பதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை!

20 ம் நூற்றாண்டின் ஆற்றல் மாயையை உடைத்து, 21ம் நூற்றாண்டில் அறிவியலாளர்களை மீண்டும் பொருள் அறிவியலுக்கு திருப்பிய துறை தான் நவீன குவாண்டவியல்.

தொடரும்.

No comments:

Post a comment