29/10/2019

குவாண்டவியல் 5

ஒளி என்பது ஆற்றல் அல்ல. ஒளி என்பது ஒரு பொருள். இது தான் குவாண்டவியலின் தலையங்கமும் சுருக்கமும். ஒளி என்பது துகள்! - இது தான் நவீன குவாண்டவியலின் ஒப்பற்ற கண்டுபிடிப்பு.

குவாண்டவியலை வரலாற்று ரீதியில் மூன்றாக பிரிக்கலாம். 1.பழைய குவாண்டவியல்(19ம் நூற்றாண்டு). 2. பொது குவாண்டவியல்(20ம் நூற்றாண்டு). 3.நவீன குவாண்டவியல்(21ம் நூற்றாண்டு).

அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள் உள்ளன. இந்த துகள்களை மேலும் உடைக்க முடியாது என்ற அணுவியல் கோட்பாட்டை தகர்த்து 19ம் நூற்றாண்டில் குவாண்டவியல் கோட்பாடு பிறந்தது.

அணுத்துகள்களான எலக்ட்ரான், புரோட்டான் என்பவற்றை மேலும் உடைக்க முடியும் என்றார் குவாண்டவியலின் ஆரம்பத்திற்கு வித்திட்ட ராபர்ட் ஹூக்.

அப்போதைக்கு அது யாருக்கும் புரியவில்லை. புகழ்பெற்ற ஐன்ஸ்டீன் உட்பட விஞ்ஞானிகளே குவாண்டவியலை புரிந்துகொள்ள திணறினர்.

எலக்ட்ரான், புரோட்டான் இடையிலான ஈர்ப்பு விசையை உடைக்க முடியும். ஆனால் எலக்ட்ரான், புரோட்டானையே எப்படி உடைக்க முடியும்? அது எப்படி சாத்தியம்? அது முடியவே முடியாது. எலக்ட்ரான், புரோட்டான் என்பவை அதற்கு மேலும் உடையது. அப்படி உடைக்க முற்பட்டால் அவை ஆற்றலாக மாறி விடுகின்றன. இது தான் பழைய குவாண்டத்திற்கு 19ம் நூற்றாண்டில் தந்த விளக்கம்.

இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே E=MC^2 சமன்பாடு புகழ் பெற்றது. அதன் அடிப்படையிலேயே அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. இன்று பல அணு உலைகளும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

எலக்ட்ரான் உடைப்பை ஆற்றலாக ஏற்பதற்கு சில விஞ்ஞானிகள் தயங்கினர். இந்த தயக்கத்தின் விளைவாக மீண்டும் ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அது தான் நிச்சயமில்லா கோட்பாடு.

ஒளி ஒத்த நேரத்தில் துகளாகவும் இருக்கும் அலையாகவும் இருக்கும் என்பதே நிச்சயமில்லா கோட்பாடு.

ஒரு எலக்ட்ரானை தடுப்பு ஒன்றின் மீது மோத விடுகின்றனர். தடுப்பில் மோதிய எலக்ட்ரான் காணாமல் போகிறது.  இங்கு எலக்ட்ரான் உடைந்து ஆற்றலாகி விட்டது என்ற கோட்பாடு ஒத்து போகிறது.

அடுத்து அதே தடுப்பில் எலக்ட்ரான் அளவை விட சிறிய ஒரே ஒரு துளை இடுகின்றனர். இப்போது எலக்ட்ரானை மோத விட்டடோது எலக்ட்ரான் எளிதாக அந்த துளையில் நுழைந்து மறுபக்கம் வருகிறது. தடுப்பில் மோதிய எலக்ட்ரான் ஆற்றலாக மாறாமல் சிறிய துளைவழியாக நுழைந்தது என்?

அடுத்து அதே தடுப்பில் இரண்டு துளை இடுகின்றனர். இரண்டு துளை உள்ள தடுப்பில் ஒரு எலக்ட்ரானை மோத விடுகின்றனர். மறுபக்கம் இரண்டு துளைகள் வழியாகவும் எலக்ட்ரான் வருகிறது. இது எப்படி சாத்தியம்? ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் ஒரு துளையாக தானே வரவேண்டும். ஒரு எல்ட்ரான் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு துளைகள் வழியாக வந்தது?

இந்த குழப்பத்தை தீர்க்க ஹைசன் பர்க் நிச்சமில்லா கோட்பாடை முன்மொழிந்தார். எலக்ட்ரான் ஒரே நேரத்தில் அலையாகவும் இருக்கும் துகளாகவும் இருக்கும். அதனாலேயே இரண்டு துளைகள் வழியாகவும் ஒரு எலக்ட்ரானால் ஒரே நேரத்தில் நுழைந்து வர முடிந்தது. எலக்ட்ரானை மேலும் உடைக்கும் போது அது துகளா/ஆற்றலா என நிர்ணயிக்க முடியாது.  ஒரே நேரத்தில் துகளாவும் இருக்கலாம், அலையாகவும் இருக்கலாம். அதை துள்ளியமாக கணிக்க முடியாது.

குவாண்டவியலை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு நிச்சயமில்லா கோட்பாடு ஓரளவு உதவியது.

எலக்ட்ரானின் ஆற்றல் தன்மைக்கு போட்டான் என்றும், துகள் தன்மைக்கு நியூட்ரினோ என்றும், ஆற்றல் துகள் நிச்சயமில்லா தன்மைக்கு போசன் என்றும் பெயர் வைத்தனர். 

இப்போது குவாண்டவியல் ஆராட்சி சூடுபிடிக்க துவங்கியது. நிச்சமில்லா கோட்பாடே 20ம் நூற்றாண்டு இறுதி வரை குவாண்டவியலை ஆட்சி செய்தது. நிச்சமில்லா கோட்பாடு அறிவியலாளர்களை மட்டுமல்ல ஆன்மீகவாதிகளையும் வெகுவாக கவர்ந்தது. அனைத்து மதத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு நிச்சமில்லா கோட்பாட்டு தங்கள் புனித வேதங்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என ஆதாரங்களை அடுக்கி தள்ளினர்.

இந்தியாவில் நாதம்&விந்து, சிவம்&சக்தி, உடல்&ஆன்மா என நிச்சயமில்லா இரட்டை தன்மையை இந்து/ஆரிய வேதங்கள் உரிமை கொண்டாடடிக் கொண்டன.

கடவுள் மறுப்பு விஞ்ஞானிகளே கொஞ்சம் அசந்து போய் விட்டனர். ஒருவேளை கடவுள் இருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவர்களுக்குள் சின்னதாய் உதித்து விட்டது.

இந்த மாயையை 21ம் நூற்றாண்டு துவக்கம் உடைத்து எரிந்தது. எலக்ட்ரான் எப்போதும் ஆற்றலாக மாறுவது இல்லை. ஆற்றாலாக கருதப்படும் போட்டான் என்பதும் ஒரு துகள் தான்! என 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் நிரூபித்தனர்.

அதுவரை ஆற்றல் தான் கடவுள் என்று நம்பிக்கொண்டிருந்த அறிவியலாளர்கள், துகள் தான் கடவுள் என்ற இறுதி முடிவுக்கு வந்தனர்.

2008ம் ஆண்டில் ஹிக்ஸ் பொசான் என்ற உச்சகட்ட அறிவியல் சோதனையை கண்டு உலகமே வியந்தது. ஆம்! கடவுள் துகள் என்றே அதற்கு பெயரிட்டனர். கடவுளின் ஆற்றல் என்பதை தூக்கி வீசிவிட்டு கடவுளின் துகள் என்ற கோட்பாட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். இத்துடன் துகள்/அலை நிச்சயமில்லை என்ற பொது குவாண்டவியல் முடிவுக்கு வந்தது.

துகள் தான் எல்லாமும். துகளை கொண்டு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை நிரப்பவும் முடியும், விளக்கவும் முடியும் என்பதே நவீன குவாண்டவியல்.

நவீன குவாண்டவியலை அடுத்து தனி கட்டுரையாக விளக்குகிறேன்.

முற்றும்.

No comments:

Post a comment