23/10/2019

குவாண்டவியல்

அறிவியல் உலகை மூன்றாக பிரிக்கலாம். 1. மீச்சிறுஉலகம், 2.கண்ணுறு உலகம், 3.மீப்பெரு உலகம்.

நமது கண்ணால் பார்க்கக்கூடிய பொருட்களும், இடைவெளிகளும் நிறைந்த உலகம் கண்ணுறு உலகம். உதாரணமாக சின்ன கடுகு முதல் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை காணும் கடல், பரந்து விரிந்த வானம், நட்சத்திரம், சூரியன் என அனைத்தும் இந்த கண்ணுறு உலகத்தில் அடங்கும். 
நியூட்டன்
இயல்பாக பார்ப்பதில் இருந்து மிகப்பெரிதாக காட்சியளிக்கும் பொருட்களை கொண்டது மீப்பெரு உலகம். உதாரணமாக நமது கண்களால் நிலவைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் நம் பார்வையில் படும் நிலவை தொலைநோக்கி வழியாக பார்த்தால் அது இயல்பை விட மிகப்பெரியதாக இருக்கிறது. அதே போலத்தான் நட்சத்திரங்கள், சூரியன் உட்பட விண்வெளியில் காணும் அனைத்தும். இவை எல்லாம் மீப்பெரு உலகமாக காட்சி அளிப்பவை.

மீச்சிறு என்பது நமது கண்களால் பார்ப்பதை விட மிகச்சிறிய பொருட்களை கொண்ட உலகம். நுண்ணோக்கி வழியாக நாம் பார்க்கும் பொருட்களின் உலகம்.

இந்த மூன்று உலகங்களிலும் அறிவியலின் அடிப்படை விதிகள் வெவ்வேறானவை!

இயல்பான உலகில் இயற்பியல் விதிகளை பயன்படுத்துகிறோம். நியூட்டனின் ஈர்ப்பு விசை, நீளம், நிறை, காலம் என நாம் பள்ளி பாடபுத்தகத்தில் படிக்கும் அத்தனை இயற்பியல் விதிகளும் கண்ணுறு உலகின் விதிகள் தான்.

மீப்பெறு உலகின் அறிவியல் விதிகள் வேறு. அங்கே நியூட்டனின் விதிகள், நீளம், நிறை, காலம் என எதுவுமே வேலை செய்யாது. அங்கே இருப்பது எல்லாம் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாங்கிங்கின் சார்பியல் தத்துவங்கள் தான். 

உதாரணமாக வானத்தில் நீளத்தை அளக்க முடியாது. திசையை தெரிய முடியாது. நிறையை உணர முடியாது. காலத்தை கணிக்க முடியாது. நமது இயல்பான உலகில் நாம் காணும், கேட்கும், எதுவும் அங்கே இருக்காது. எதுவுமே இல்லாமல் ஒன்றை எப்படி உணர்வது? இங்கே தான் சார்பியல் தத்துவம் தேவைப்படுகிறது. (சார்பியல் என்பது தத்துவம் தான் விதி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்)

விதி என்றால் மாற்ற முடியாதது. எங்கும் எப்போதும் ஒரே போல இருப்பது. தத்துவம் என்றால் இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப வகுத்துக்கொள்ளும் தற்காலிக விதி! அது அப்போதைக்கு சரியாக இருக்கலாம். முன்னரோ, பின்னரோ, மாறுபடலாம், மாறுபடாமலும் போகலாம்.

விதி என்பது உறுதியான உண்மை! தத்துவம் என்பது உறுதி செய்யப்படாதது.
ஐன்ஸ்டீன்
மீப்பெறு உலகத்தின் அறிவியல் விதிகளால் உறுதி செய்யப்படுவது இல்லை. மாறாக தத்துவங்களால் உறுதி செய்யப்படுகிறது. சூரியன் எரிதல், நட்சத்திரங்களின் மரணம், சூப்பர் நோவா, பிளாக்ஹோல், வாம் ஹோல், ஒளிஆண்டு இப்படி எல்லாமே தத்துவங்கள் அடிப்படையில் தான் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

ஆச்சரியமாக இருக்கலாம் பூமி உருண்டை என்பது கூட தத்துவத்தின் அடிப்படையில் தான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பூமியின் சுழற்சி, சூரியனின் சுழற்சி, கிரகங்கள் இயக்கம் இவைகள் கூட தத்துவங்களின் அடிப்படையில் தான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல.

பூமி உருண்டையானது, பூமி தன்னை தானே சுற்றுகிறது என்பதை எல்லாம் இயற்பியல் விதியில் நிரூபிக்க முடியாது. இது குறித்து இயற்பியல் விதிகள் பகுதியில் பார்க்கலாம். தற்போது குவாண்டவியல் கட்டுரைக்குள் நுழைவோம்.

மீப்பெறு உலகத்தை போல மீச்சீறு உலகமும் வித்தியாசமானது. மீச்சிறு உலகத்திற்கும் இயற்பியல் விதிகள் பொருந்தாது. ஒரு கடுகிற்கு நாம் கொடுத்து வைத்துள்ள இயற்பியல் விதிகள் கடுகின் மூலக்கூறுகளுக்கோ, அணுக்களுக்கோ, பொருந்தாது.

கடுகு வேறு, கடுகின் அணுக்கள் வேறு. அணுத்துகள்களின் உலகில் நமது அடிப்படை இயற்பியலின் எந்த விதிகளும் வேலை செய்யாது. அங்கே நீளம், நிறை காலம் என எதையும் நிர்ணயிக்க முடியாது. நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் விதிகள் இங்கு செல்லாக் காசுகள். ஹைசன் பெர்க்கின் நிச்சயமில்லா கோட்பாடு தான் மீச்சிறு உலகை ஆட்சி செய்கிறது.

இப்படி மூன்று உலகத்திலும் மூன்று வெவ்வேறு அறிவியல் விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கான வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல் குவாண்டவியலையோ வானியலையோ படிக்க முடியாது. இந்த மூன்று உலகங்களின் விதிகளின் வேறுபாட்டை நமக்கு பள்ளி/கல்லூரி பாடங்கள் சொல்லித் தருவது இல்லை. அதனால் தான் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கே குவாண்டவியலும், சார்பியல் தத்துவங்களும் குழப்பமாக இருக்கிறது.

ஹைசன் பெர்க்
பள்ளி/கல்லூரியில் படித்த, தெரிந்த அறிவியலுக்கும், குவாண்டவியலுக்கும் துளியும் தொடர்பு இல்லாமல் இருக்கும். இதுதான் பல மாணவர்களும் குவாண்டவியலை புரிந்து கொள்ள திணற காரணம்.
 
இயற்பியலை விட குவாண்டவியல் எளிமையான உலகம். ஆனால் கணித சமன்பாடு என்ற பழைய கல்வி முறையால் குவாண்டயலை புரியாத புதிராகவே வைத்திருக்கிறார்கள்.

இன்றய கல்வி முறை இயற்பியல் விதிகளை நமக்கு எளிமையாக சொல்லித்தருவது இல்லை.

கணிதமும் அறிவியலும் வேறு வேறு துறைகள். ஆனால் நமக்கு கணிதத்தின் வழிதான் அறிவியலை சொல்லித் தருகிறார்கள். இயற்பியல் விதிகளை கணித சமன்பாடுகளில் சொல்லித் தருவது தவறான கல்வி முறை. 

தொழில்நுட்பம் மேம்படாத 18ம் நூற்றாண்டில் கணித சமன்பாடுகள் வழி அறிவியலை கற்று தந்தார்கள். ஆனால் தற்போது தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இப்போதும் அதே கணித சமன்பாடுகள் வழி அறிவியலை கற்றுத் தருவது மாட்டுவண்டியில் பயணம் செய்வது போன்றது.

எக்ஸ், ஒய் சமன்பாடுகள் இன்றி நேரடியாக குவாண்டவியலை கற்பிக்கும் சிறுமுயற்சி தான் இந்த கட்டுரைத் தொடர்.

தொடரும்...

அறிவியல் என்பது பொழுதுபோக்கோ, சுவாரசிய கதைகளோ அல்ல. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சி! அடுத்த தலைமுறைக்காக நாம் செய்யும் ஒரு வித தியாகம். பல அறிவியலாளர்களின் இரவு/பகல் ஆராய்ச்சியால் தான் நாம் இப்போதைய நவீனத்தை அனுபவிக்கிறோம்.

நமது ஆராய்ச்சி எதிர்கால பிள்ளைகளுக்கு உதவலாம். ஆய்வு செய்ய நேரத்தை ஒதுக்குங்கள். எளிய தமிழில் அறிவியலை கற்பிக்கும் இந்த முயற்சியில் நீங்கள் பங்காற்றலாம்.

அறிவியல் கற்பதில், ஆய்வு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் கருத்துக்களை பகிருங்கள். விவாதியுங்கள். விருப்பம் உள்ளவர்கள் வாட்சப், பேஸ்புக், யூடியூப்பில் எங்களுடன் இணையலாம். வாட்சப் குழு எண் : 9787678939. மின்னஞ்சல் : arivakam@gmail.com

No comments:

Post a comment