05/11/2019

ஒளி என்றால் என்ன? - விண்வெளியியல் 2

‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? ஏன் இருக்கிறது? வெளிச்சம் இல்லாவிட்டால் என்னதான் நிகழும்?

நம்மைப் பொருத்தவரை பகல் பொழுதில் சூரியனில் இருந்தும், இரவு பொழுதில் நிலா மற்றும் நட்சத்திரங்களில் இருந்தும் இயற்கையாக வெளிச்சம் கிடைக்கிறது. மழைக் காலங்களில் மின்னலின் வெளிச்சம் மின்னலாக வந்து போகிறது.

எதாவது ஒரு பொருளை எரிய வைப்பதால் செயற்கையாக நம்மால் வெளிச்சத்தை உண்டாக்க முடியும்.

முன்பு தீப்பந்தம், எண்ணெய் விளக்குகள், மின்னும் கற்கள் இவற்றின் உதவியுடன் செயற்கை வெளிச்சத்தை உண்டாக்கினர். தற்போது மின் விளக்குகள், கிரிஸ்டல் உப்புகள், லேசர்கதிர்கள் என செயற்கை வெளிச்ச புரட்சியே நடக்கிறது.

வெளிச்சம் உண்டாக இரண்டு பொருட்கள் வேண்டும். 1.எரியும் பொருள், 2.ஒளிரும் பொருள்.

எரியும் பொருள் தெரியும்., அது என்ன ஒளிரும் பொருள்? - இங்கே தான் வெளிச்சத்திற்கும் ஒளிக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சரியான தருணம் வருகிறது.

ஒரு பொருள் வெளிச்சத்தை ஏற்படுத்தினால் அது எரியும் பொருள். ஒரு பொருள் வெளிச்சத்தை ஏற்றுக்கொண்டால் அது ஒளிரா பொருள். 

குழப்பம் ஏற்படாமல் இருக்க மெதுவாக படியுங்கள்.

வெளிச்சத்தை ஏற்படுத்தும் பொருளும், வெளிச்சத்தை ஏற்கும் பொருளும் எதிர்எதிரே இருந்தால் அங்கு வெளிச்சம் ஏற்படாது. வெளிச்சத்தை ஏற்படுத்தும் பொருளும் வெளிச்சத்தை ஏற்கா பொருளும் எதிரெதிரே இருந்தால் அங்கு வெளிச்சம் ஏற்படும்.

மேற்சொன்ன விளக்கத்தை நிதானமாக ஆய்வு செய்தீர்களானால் ஒளி என்றால் என்ன? என உங்களுக்கு புலப்பட்டிருக்கும்.

எரியும் பொருள் ஏதோ ஒன்றை எறிகிறது(வீசுகிறது). வீசப்பட்டது ஏதிரே இருக்கும் பொருள் மீது மோதி எதிர்விளைவை ஏற்படுத்துகிறது என்றால் அங்கு வெளிச்சம் பிறக்கிறது. எதிர்விளைவை ஏற்படுத்தவில்லை என்றால் வெளிச்சம் எரியும் பொருளிலும் இல்லை. ஏற்ற பொருளிலும் இல்லை.

உதாரணமாக : நீங்கள் விளக்கை எரிய விடுகிறீர்கள். விளக்கை எரித்தால் மட்டும் வெளிச்சம் வந்து விடாது. வெளிச்சம் பட்டு பிரதிபளிக்க சுவரோ, மேசையோ, பேனாவா, கட்டிலோ, திரைச்சீலையோ என எதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும். எந்த பொருளுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் வெளிச்சத்தை பார்க்க முடியாது.

காற்றில் உள்ள சின்ன சின்ன தூசுகள் ஒளியை பிரதிபளிப்பதால் தான் ஒளிக்கதிர்கள் நமது கண்களுக்குத் தெரிகிறது.

ஒளியை வெளியிடும் ஒரு பொருள் வேண்டும். அதே போல ஒளியை பிரதிபளிக்கும் ஒரு பொருள் வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் மட்டுமே வெளிச்சத்தை நம்மால் பார்க்க முடியும்.

சரி ஒளிக்கும் வெளிச்சத்துக்குமான வித்தியாசத்திற்கு வருவோம்.

எரியும் ஒரு பொருளில் இருந்து எறியப்படும் ஒன்று எதிரே உள்ள பொருளில் பட்டு பிரதிபளித்தால் அது ஒளி. அந்த பிரதிபளிப்பை நம் கண்கள் உணர்ந்தால் அது வெளிச்சம். வெளிச்சம் எல்லாம் ஒளியாகும். ஆனால் ஒளி எல்லாம் வெளிச்சம் ஆகாது. குறிப்பிட்ட ஒளியை மட்டுமே நமது கண்கள் உணர்கிறது. நமது கண்கள் உணரும் ஒளி வெளிச்சம் எனப்படுகிறது.

முதலில் வெளிச்சம் குறித்து தெரிந்து கொண்டு அடுத்து ஒளிக்குள் செல்வோம்.

உதாரணமாக வெளிச்சம் என்பது ஒரு நீர்த்துளி அளவு என்றால், ஒளி என்பது கடலின் அளவை விட அதிகமானது. அதனால் சிறுதுளியான வெளிச்சத்தை கொண்டே ஒளியை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நமது கண்கள் உணரும் ஒளியை வண்ணங்களாக வகைபடுத்தலாம்.

உதாரணமாக வானவில்லின் 7 வண்ணங்களை நமது கண்கள் நேரடியாக உணர்கிறது. அந்த 7 வண்ணங்களே இயற்கையின் அடிப்படை வண்ணங்கள். இந்த 7 வண்ணங்களை பல நூறு வண்ணங்களாக நாம் கலக்கிக்கொள்கிறோம்.


சிவப்பு, பழுப்பு, பச்சை, நீலம், ஊதா, மஞ்சள், வெள்ளை என்ற 7 நிறங்கள் தான் இயற்கையின் அடிப்படை நிறங்கள். இவற்றின் கலப்பட அளவிற்கு ஏற்ப நமது கண்களுக்கு பலநூறு நிறங்கள் தெரிகிறது. நமது கண்களுக்கு தெரியும் நிறங்களே அந்தந்த பொருளின் நிறங்களாக நாம் அறிகிறோம்.

சிவப்பு + பச்சை + நீலம் என்பவை நாம் செயற்கை தயாரிப்புகளுக்காக வைத்திருக்கும் அடிப்படை நிறங்கள். இந்த மூன்று நிறங்களைக் கொண்டு 255 நிறங்களை உருவாக்க முடியும். இந்த 255 நிற விளக்குகளில் தான் டி.வி முதல், செல்போன் ஸ்கிரீன் வரை தயாரிக்கப்படுகிறது. 
சிவப்பு + பச்சை + நீலம் RGB
எல்.ஈ.டி. எல்.சி.டி, டிஸ்ப்ளே திரைகள் எல்லாம் இந்த 255 நிற விளக்குகளின் துள்ளிய ஒளிர்வால் வருபவை தான்.

இயற்கை வண்ணங்கள் சிவப்பு முதல் வெள்ளை வரை இருக்கின்றன. ஆனால் நமக்கு எல்லாம் மிகவும் பிடித்த ஒற்றை நிறம் அதில் இல்லை என்பது உங்கள் கவனத்தில் வந்ததா?

வெளிச்சத்தில் இல்லாத ஒரே நிறம் கருப்பு. கருப்பில் வெளிச்சம் மட்டுமல்ல ஒளியும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் அதிகமாக உள்ள நிறம் கருப்பு தான். ஆனால் உண்மையில் கருப்பு ஒரு நிறம் அல்ல. எந்த நிறமும், எந்த வெளிச்சமும் இல்லாத ஒன்றிற்கு கருப்பு என பெயரிட்டுள்ளோம்.

கருப்பில் பொருள் கூட இல்லை. கருப்பான பொருள் பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை. பொருளே அல்லாத இந்த கருப்பை தான் வெளி என்கிறோம். பிரபஞ்ச வெளி எங்கும் கருப்பே நிறைந்திருக்கிறது. 

இந்த கருப்பு தான் கருந்துளையா?
கருப்பிடம் ஏன் ஒளி தோற்றுப்போகிறது?

தொடரும்...

No comments:

Post a comment