13/11/2019

சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4

சூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நிலா உட்பட பல துணை கோள்களும் உள்ளன. - பள்ளி பாடபுத்தகத்திலேயே இதை பல முறை படித்து விட்டோம்.

20ம் நூற்றாண்டில் 9 கோள்கள் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் மட்டுமே சூரியனை சுற்றுவதாக கணிக்கப்பட்டு உள்ளது.

சூரியன் என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு எரியும் நட்சத்திரம். பிற கோள்கள் எரிந்து தீர்ந்த நட்சத்திரத்தின் துண்டுகள். பூமி உட்பட கோள்கள் சூரியனின் எரிவால் எறிந்து வீசப்பட்ட சூரிய துண்டுகளாக இருக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள், எரிகற்கள், எறியப்பட்ட பலகோடி துண்டுகள் என விண்வெளி எங்கும் கோடிக்கணக்கான பொருட்கள் உள்ளதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

கோடிக்கணக்கான பொருட்கள் இருந்தாலும், அத்துனை பொருட்களும் 94 தனிமங்களுக்குள் அடக்கம் என்பதும் அறிவியல் கணிப்பே.

(தனிமங்கள் மற்றும் அடிப்படை துகள்கள் குறித்து அறிய குவாண்டவியல் கட்டுரையை படிக்கவும்)

சூரியன் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தனிமத்தால் ஆனது. சூரியனில் மையத்தில் சுமார் 73% ஹைட்ரஜனும், வெளிபகுதியில் சுமார் 25% ஹீலியமும், கார்பன், ஆக்சிஜன், இரும்பு, நியான் போன்ற தனிமங்கள் சுமார் 2% இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

சூரியன் என்பது பிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருளாகும். எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் சூரியனில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வெளிப்படும் போட்டான் உட்பட அடிப்படை துகள்கள் விண்வெளியில் எறியப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்படி எறியப்படும் துகள்கள் விண்வெளியில் பல்வேறு தனிமங்கள் உண்டாக காரணமாக அமைகின்றன.


சூரியனின் மையப்பகுதியில் ஹைட்ரஜன் அணு உடைந்து போட்டான் உட்பட துகள்களை வீசி எறிகிறது. இவை சூரியனின் வெளிப்பகுதியில் மீண்டும் மாற்றி இணைந்து ஹீலியம் அணுவாக மாறுகின்றன. ஹலீயம் அணு உடைந்து போட்டான் உட்பட துகள்களை எறிகிறது. அவை விண்வெளியில் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் துகள்கள் விண்வெளியில் எற்கனவே உள்ள துகள்களோடு முட்டி மோதி அவற்றை பிரித்தும் சேர்த்தும் வெவ்வேறு தனிமங்களை உண்டாக்குகின்றன.

சூரியனில் இருந்து வீசப்படும் அடிப்படை துகள்கள் 18 வகையானவை என குவாண்டவியல் கணித்துள்ளது. 18 அடிப்படை துகள்கள் இருந்தாலும் இவற்றுள் விண்வெளி ஆய்வில் அதிகம் பயன்படுவது போட்டான் துகள்தான்.

போட்டான் துகளை தான் ஒளி என்கிறோம். ஒளி தான் விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளுக்கு உதவி உள்ளது.

பிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருட்கள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கின்றன. இந்த எரிதலில் அணுக்கரு இணைவும், பிளவும் இயல்பாக நிகழ்கிறது. அணுக்கரு இணைவு மற்றும் பிளவால் ஏற்படும் துகள் எறிதல் பல்வேறு பொருட்களை உருவாக்குகிறது. இப்படி உருவாகும் பொருட்கள் விண்வெளியில் தங்கள் இயல்பு நிலையில் தொடர்ந்து பயணிக்கின்றன.

பிளாஸ்மா நிலையில் உள்ள பொருட்களை சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் என்றும், 50%க்கும் மேல் எரிந்து தீர்ந்த பொருட்களை கோள்கள் என்றும், 70%க்கும் மேல் எரிந்து தீர்ந்த பொருட்களை துணைக் கோள்கள் என்றும். 100% எரிந்து தீர்ந்த பொருட்களை கருந்துளை என்றும் அழைக்கிறோம்.

அடிப்படைத் துகள்கள் எறிதலை ஆற்றல் என்றும், அடிப்படை துகள்கள் பிணைந்து இருக்கும் தன்மையை பொருள் என்றும் அழைக்கிறோம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்குமான இடைவெளியை விண்வெளி என்று அழைக்கிறோம்.

பொருளை நாம் 5 நிலைகளில் அறியலாம்
1. அடிப்படை துகள்கள் இறுக பிணைந்த நிலையில் அணு நிலை.
2. அணுக்களுக்கு இடையில் சிறு இடைவெளி இருந்தால் திடநிலை.
3. திடநிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் திரவ நிலை.
4. திரவ நிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் வாயு நிலை.
5. வாயு நிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் பிளாஸ்மா நிலை.

பிளாஸ்மா நிலையில் அணுத்துகள்கள் இடைவெளியை அதிகம் கொண்டு இருப்பதால் அவற்றின் ஆற்றல் எல்லை மிகப்பெரியதாக இருக்கிறது. அதனாலேயே பிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருட்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட இடைவெளியில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஆளுகைக்கு உட்படுத்துகின்றன.

சூரியனின் பிளாஸ்மா எல்லைக்குள் பூமி வருவதால், சூரிய இடைவெளியில் பூமி  சுழன்று கொண்டு இருக்கிறது. சூரிய பிளாஸ்மா எல்லைக்குள் வரும் கோள்கள், துணைக்கோள்கள், எறிகற்கள், பொருட்கள் அனைத்தும் சூரிய குடும்பம் என அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன.

சூரிய குடும்பம் போல பலகோடி சூரிய குடும்பங்கள் விண்வெளியில் இருப்பதாக அறிவியல் கணித்துள்ளது. வானில் நாம் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியக்குடும்பம் என்றால் எவ்வளவு சூரியக் குடும்பம் இருக்கும் என நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

தொடரும்...

No comments:

Post a comment