14/10/2020

மனம்

மனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை...

தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்...

For more details : arivakam@gmail.com

28/04/2020

ஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன? 4

செல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

செல்லின் முக்கிய பகுதி உட்கரு. உட்கருவில் செல்லின் பணிகள் எப்படி நடக்க வேண்டும், எப்போது நடக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய டி.என்.ஏ.,க்கள் உள்ளன.

டி.என்.ஏ.,க்கள் ஏற்கனவே பணி நிர்ணயிக்கப்பட்ட இயந்திரம் போல செயல்படுகின்றன. நிர்ணயித்த செயல்களை நிர்ணயித்த நேரத்தில் டி.என்.ஏ.,க்கள் செய்கின்றன. டி.என்.ஏக்களை உயிரற்ற இயந்திரம் என்றே சொல்லலாம். அவை புதிதாக எதையும் செய்வதில்லை. ரோபோவுக்கும் டி.என்.ஏ.,வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

டி.என்.ஏ., என்பது கருவமிலத்தால் ஆனது. கருவமிலம் என்பது கார்பன் + ஹைட்ரஜன் + ஆக்சிஜன் + நைட்ரஜன் + பாஸ்பரஸ் என்ற 5 தனிமங்களால் ஆனது. இந்த 5 தனிமங்களும் இயந்திரவியலுக்கு உட்பட்டே இணைகின்றன, பிரிகின்றன. இயந்திரவியலை தாண்டிய எந்த அற்புதமும் டி.என்.ஏ.வில் நிகழ்வதில்லை.

டி.என்.ஏ., என்ற ரோபோவின் கட்டளைகளாக ஆர்.என்.ஏ., உள்ளது. ஆர்.என்.ஏ., உட்கருவுக்குள் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை. உட்கருவுக்கு வெளியே தான் மாற்றத்தை நிகழ்த்துகின்றது.

உட்கருவுக்கு வெளியே சைட்டோபிளாசத்தில் புதிய புரதங்களை உண்டாக்குகின்றன. இந்த புதிய புரதங்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஆர்.என்.ஏ., தகவல்படி தான் உண்டாகுகின்றன.

ஆர்.என்.ஏ., தகவல் அல்லாத புரதங்கள் தற்செயலாகவோ, தவறுதலாகவோ உண்டானால் உடனே அழிப்பு அமிலங்கள் அவற்றை அழித்து விடுகின்றன. அதுவம் டி.என்.ஏ., கட்டளைப்படியே நடக்கிறது.

டி.என்.ஏ., முதல் புரத உற்பத்தி வரையிலான பணிகள் அனைத்தும் ஏற்கனவே நீர்ணயிக்கப்பட்ட செயல்களே. இவற்றில் எந்த இடத்திலும் உயிர் இயக்கத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாது. எல்லாம் உயிரற்ற ஒரு ரோபோ போலவே செயல்படுகின்றன.

இந்த ரோபோக்களுக்கு தேவையான மின்னாற்றலை தரும் பணியை மைட்டோகான்ரியா செய்கிறது. ரோபோக்களுக்கு தேவையான மூலபொருட்களை செல் உணவு தருகிறது.

இங்கே செல் உணவு குறித்த சின்ன புரிதல் அவசியம்.

நமது உணவு பலதரப்பட்டது. அசைவம், சைவம் என்ற பிரிவில் ஏராளமானவற்றை அடுக்கலாம். ஆனால் செல்லின் உணவு ஒன்றே ஒன்று தான். அது புரோட்டீன்.

செல்சுவர் வழியாக மூன்று பொருட்கள் உள்ளே நுழையும். 1. ஆக்சிஜன், 2. கார்போஹைட்ரேட், 3.புரோட்டீன்

இதில் தாவர செல்களில் கார்பன்டையாக்சைடும், விலங்கு செல்களில் ஆக்சிஜனும் ஆற்றல் மூலக்கூறுகளாக நுழைகின்றன. கார்போஹைட்ரேட், புரோட்டின் போன்றவை உணவாக நுழைகின்றன.


ஆற்றலும், உணவும் உயிர்வாழ தேவையான மூலக்கூறுகளே அல்லாமல் உயிராக இல்லை. அதாவது செல்லில் ஆற்றல் தடைபட்டால் செல்லின் பணிகள் தடைபடுகின்றன. இதனால் செல் முடங்குகிறது. இது மின்சாரம் இல்லாத மின்பொருட்களின் நிலையே அல்லாமல் இதில் உயிர் என எதுவுமே இல்லை.

மின்சாரம் இல்லாவிட்டால் மின்பொருட்கள் இயங்காது. அதுபோலவே ஆற்றல் இல்லாவிட்டால் செல் இயங்காது அவ்வளவு தான்.

அடுத்து உணவு. உணவு என்பது வளர்ச்சிக்கு உதவுகிறதே அல்லாமல் உணவில் உயிர் இருப்பதாக எங்கும் கண்டறிய முடியவில்லை.

ஒரு தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் வந்தால் உற்பத்தி நடக்கும். மூலபொருட்கள் இல்லை என்றால் உற்பத்தி இருக்காது. இந்த அளவிலேயே செல்லில் உணவின் பயன்பாடு உள்ளது.

ஆற்றலும் உணவும் செல்லின் பணிகளுக்கு உதவுகின்றன. அல்லாமல் செல்லின் பணிகளை ஆற்றலோ, உணவோ தீர்மானிப்பது இல்லை. உட்கருவில் உள்ள ஜீன்களே செல்லின் பணியை தீர்மானிக்கின்றன.

இங்கு ஜீன், ஆர்.ஏன்.ஏ., டி.என்.ஏ., குரோமோசோம் என்பற்றிற்கான வேறுபாடு குறித்த சின்ன விளக்கம்

ஆர்.என்.ஏ., என்பது ஜீனின் துண்டாக்கப்பட்ட ஒரு பகுதி. ஜீன் என்பது டி.என்.ஏ.,வின் ஒரு பகுதி, டி.என்.ஏ., என்பது குரோமோசோமின் ஒரு பகுதி. ஏராளமான ஆர்.என்.ஏ.,க்கள் சேர்ந்தது ஒரு ஜீன். ஏராளமான ஜீன்கள் சேர்ந்தது ஒரு டி.என்.ஏ., ஏராளமான டி.என்.ஏ.,க்கள் சேர்ந்தது ஒரு குரோமோசோம்.

ஜீன் முதல் குரோமோசோம் வரையிலான மொத்த அமைப்பை மரபு பெட்டகம் என அழைக்கிறோம். ஜீன்களில் இருந்து பிரிந்து விட்ட தனி பகுதி என்பதால் ஆர்.என்.ஏ.,க்கள் மரபுபெட்டகத்தினுள் வருவது இல்லை.

மரபு பெட்டகம் என்பது ஏற்கனவே பணி நிர்ணயிக்கப்பட்ட ஒரு இயந்திரம் போல செயல்படுகிறது. மரபு பெட்டகத்தில் எங்குமே உயிருக்கான ஆரம்பம் இருப்பதாக தெரியவில்லை. இங்கே தான் சிக்கலும், உயிர் தேடலுக்கான திருப்பு முனையும் அமைகிறது.

உடல் எங்குமே உயிர் இல்லை. உடல்உறுப்புகள் எங்குமே உயிர் இல்லை. உறுப்புகளின் மூலமான திசுக்களிலும் உயிர் இல்லை. திசுக்களின் மூலமான செல்லிலும் உயிர் இல்லை. செல்லின் உட்கருவான மரபு பெட்டகத்திலும் உயிர் இல்லை. செல்லின் உட்கரு முதல் முழு உடல் வரை, அனைத்துமே உயிரற்ற ஒரு இயந்திரத்தை போலவே செயல்படுகிறது. அப்படியானால் உயிர் எங்கே?

இப்போது நமது தேடல் உடலை கடந்து,  மரபுபெட்டகத்தின் மரபுக்குள் செல்கிறது.

மரபு! - இது தாய்தந்தையரிடம் இருந்து வந்தது. அப்படியானால் உயிர் நம்மிடம் இல்லை. நமது தாய்தந்தையரிடம் தான் உள்ளது.

தாய்/தந்தையர் என்றால் இங்கே தேடல் இரு பெரும் பாதையாக பிரிகிறது. இந்த இரண்டில் எந்த பாதையில் தேடுவது? ஒரே நேரத்தில் இரண்டு பாதையிலுமே தேடுவது சாத்தியமா?

- அடுத்த இறுதி பகுதியில் ஒரு முடிவுக்கு வருவோம்.

உயிர்தேடல் தொடரும்...

26/04/2020

உயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன? 3

செல்லின் உட்கருவில் டி.என்.ஏ எனப்படும் மரபணு உள்ளது. டி.என்.ஏ.,வை மரபணு என குறிப்பிட்டாலும் உண்மையில் அது பல அணுக்களின் தொகுப்பு. எனவே மரபு மூலக்கூறு என்பதே பொருத்தமாக இருக்கும்.

உட்கருவுக்குள் மரபணு 4 முக்கிய கட்டங்களில் உள்ளது. 1. ஜீன் தமிழில் மரபு மூலக்கூறு, 2. டி.என்.ஏ., தமிழில் மரபு தொகுதி, 3. குரோமோசோம் தமிழில் மரபுதொகுப்பு. இந்த மூன்றுடன் டி.ஏன்.ஏ.,வில் இருந்து பிரிந்து உட்கருவுக்கு வெளியே செல்லும் ஆர்.என்.ஏ., தமிழில் மரபு தகவல் ஆகியவையும் உட்கருவில் உள்ளன.

1. ஜீன் தமிழில் மரபு மூலக்கூறு
2. டி.என்.ஏ., தமிழில் மரபு தொகுதி
3. குரோமோசோம் தமிழில் மரபு தொகுப்பு
4. ஆர்.என்.ஏ., தமிழில் மரபு தகவல்

ஜீன் முதல் ஆர்.என்.ஏ., வரை நான்கும் ஒன்று தான். ஜீன்களின் தொகுப்பு டி.என்.ஏ., டி.என்.ஏ.,க்களின் தொகுப்பு குரோமோசோம். டி.என்.ஏ.,வில் இருந்து சிறிய பகுதி பிரிந்து வந்தால் அது ஆர்.என்.ஏ.,

உட்கருவில் பொதிந்து வைக்கப்பட்டிக்கும் டி.என்.ஏ.,வில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆர்.என்.ஏ., பிரிந்து செல்லும். பிரிந்த ஆர்.என்.ஏக்கள் உட்கருவுக்கு வெளியே சைட்டோபிளாசத்திற்கு வரும்.

சைட்டோபிளாசத்தில் உள்ள புரதத்துடன் ஆர்.என்.ஏ., இணைக்கப்படும். இந்த இணைவில் ஆர்.என்.ஏ.,க்களின் தகவல் படி புதிய புரதங்கள் உருவாக்கப்படும். இந்த புரதங்களே செல்லின் வாழ்க்கையை நிலைநிறுத்தி செல்கின்றன.


செல்லுக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம். இனி செல் எதனால் ஆனது என்பதை தெரிந்து கொள்வோம். செல் எதனால் ஆனது என்பதை சரியாக புரிந்துகொண்டால் மட்டுமெ உயிரியக்கம் பற்றிய ஓரளவு புரிதல் நமக்கு கிடைக்கும்!

நமது வீடு செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், கம்பி என்ற மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டது. அதுபோல செல் 4 முக்கிய மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டது.

1. ஹைட்ரோ கார்பன் தமிழில் நீர்மகரிமம் (உயிர்)
2. கார்போஹைட்ரேட் தமிழில் கொழுப்பு
3. நியூக்ளிக் ஆசிட் தமிழில் கருஅமிலம்
4. புரோட்டின் தமிழில் புரதம்

ஒரு செல் இந்த நான்கு மூலப்பொருட்களால் ஆனது தான். இந்த நான்கை தவிர வேறு பொருட்கள் செல்லில் இல்லை. சரி இந்த நான்கு மூலப்பொருட்களிலும் என்ன இருக்கிறது என்பதை பார்போம்.

1. ஹைட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் தனிமங்கள் சேர்ந்த கலவை. இது தான் உயிருக்கு அடிப்படை. இந்த கலவை இல்லை என்றால் இந்த உலகில் உயிர்களே இல்லை எனலாம்.(விரிவாக பிற்பகுதியில் பார்க்கலாம்.)

2.கார்போஹைட்ரேட் என்பது ஹைட்ரோ கார்பனுடன் ஆக்சிஜன் தனிமமும் சேர்ந்தது. கார்பன் + ஹைட்ரஜன் + ஆக்சிஜன் ஆகிய மூன்று தனிமங்கள் சேர்ந்த கலவையை தான் கார்போஹைட்ரேட் என அழைக்கிறோம். இது தான் உயிப்புக்கு அடிப்படை. இந்த கலவை இல்லை என்றால் உயிரியக்கம் இல்லை எனலாம்.

3. கருவமிலம் என்பது கார்போஹைட்ரேட்டுடன் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் தனிமங்கள் சேர்ந்த கலவை.
ஹைட்ரஜன் + கார்பன் + ஆக்சிஜன் + நைட்ரஜன் + பாஸ்பரஸ் சேர்ந்த கலவையாக கருவமிலம் உள்ளது. கருவமிலம் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையாக உள்ளது. கருவமிலம் இல்லை என்றால் இனப்பெருக்கம் நடைபெறாது எனலாம்.

4. புரோட்டின் என்பது கருவமிலத்துடன் வேறு 8 தனிமங்கள் தனித்தனியாகவோ, கூட்டாகவோ சேர்ந்த கலவை. உதாரணமாக : ஹைட்ரஜன் + கார்பன் + ஆக்சிஜன் + நைட்ரஜன் + பாஸ்பரஸ் + கால்சியம் சேர்ந்தது ஒருவகை புரோட்டின். இப்படி 8 வகை தனிமங்களுடன் சேர்ந்து பல புரோட்டீன்கள் உள்ளன.

கால்சியம், மாக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கந்தகம், இரும்பு, அயோடின், குளோரின் ஆகிய 8 தனிமங்கள் செல்லுக்கு தேவையான முக்கிய புரோட்டீன்களின் கலவையுள் அடங்குகிறது. புரோட்டின் கலவை தான் பரிணாமத்தின் அடிப்படையாக உள்ளது.

புரோட்டீன் இல்லை என்றால் உயிர் இருந்திருக்கும் ஆனால் பரிணாமம் இருந்திருக்காது. மனிதர்கள் தோன்றியிருக்க மாட்டோம். இந்த கட்டுரை வாசிப்பும் தேவையில்லாமல் இருந்திருக்கும்.

1.ஹைட்ரஜன், 2.கார்பன், 3.ஆக்சிஜன், 4.நைட்ரஜன், 5.பாஸ்பரஸ், 6.கால்சியம், 7.மாக்னீசியம், 8.பொட்டாசியம், 9.சோடியம், 10.கந்தகம், 11.இரும்பு, 12.அயோடின், 13.குளோரின் என்ற 13 தனிமங்களால் ஆனது தான் செல்.

உலகில் 94(இயற்கை) + 24(செயற்கை) = 118 தனிமங்கள் கண்டறிப்பட்டு இருந்தும் நமது மனித உடல் செல்லில் இருப்பது மேற்சொன்ன 13 தனிமங்கள் மட்டுமே.

செல்லில் என்ன இருக்கிறது? செல் எதனால் ஆனது என்பதை தெரிந்து கொண்டோம். அடுத்து செல் எப்படி ஆக்கப்பட்டிருக்கிறது?, எப்படி செயல்படுகிறது?, செல் செயல்பாட்டால் எப்படி உயிர் பிறக்கிறது?, உயிர் எப்படி பரிணமிக்கிறது?, என்பதைப் பற்றி எல்லாம் அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்.

உயிர்தேடல் தொடரும்...

25/04/2020

உயிரணு - உயிர் என்றால் என்ன? 2

பயோ செல் என்பதை தமிழில் உயிரணு என அழைக்கிறோம். உயிரணு 1. புற அமைப்பு, 2. உள் அமைப்பு, 3. உட்கரு அமைப்பு. என்ற மூன்று பகுதிகளை உடையது.

புற அமைப்பான செல்சவ்வு குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம். இங்கு உயிரணுவின் உள் அமைப்பு குறித்து பார்க்கலாம்.

நமது உடலின் உள் உறுப்புகள் போல செல்லின் உள்அமைப்பில் பல உறுப்புகள் உள்ளன. செல்சவ்வு புறத்தோல் மற்றும் உள்தோல் அமைப்பை கொண்டது. உடலில்ன் மேல்தோல், புறத்தோல் இருப்பது போல செல்லிலும் புறத்தோல், உள்தோல் அமைப்பு உள்ளது.

நீர் நிரப்பப்பட்ட பலூன் போல உள்தோல் செல்நீரால் நிரப்பப்பட்டு உள்ளது. செல் உட்கருவுக்கும், செல் உள்தோலுக்கும் இடையில் செல்நீர் உள்ளது. செல்நீரில் செல்லின் உறுப்புகள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

செல்லின் உட்தோலுக்கும், செல் உட்கருவுக்கும் இடைப்பட்ட செல்நீர் மற்றும் செல்உறுப்புகள் அடங்கிய பகுதி சைட்டோபிளாசம் எனப்படுகிறது. சைட்டோபிளாசத்தை தமிழில் செல்லின் உள் அமைப்பு என அழைக்கிறோம்.

இங்கு சைட்டோபிளாசத்திற்கும் புரோட்டோபிளாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள். உட்கருவையும் அடக்கிய செல்லின் உட்பகுதி புரோட்டோபிளாசம். உட்கருவை தவிர்த்த செல்லின் பிறஉட்பகுதி சைட்டோபிளாசம்.

நமது உடலை போல சைட்டோபிளாசமும் 70% நீரால் நிரப்பப்பட்டாதே. செல்நீரில் மிதந்த வண்ணம் உள்ள செல் உறுப்புகளில் செல்உட்கருவும் ஒன்று. ஆனால் செல்உட்கருவை நாம் கற்பதற்கு வசதியாக தனியாக பிரித்து உள்ளோம்.

செல்லை போல உட்கருவும் ஒரு தனி சவ்வால் மூடப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட செல்களை கொண்ட உயிரிகளை யுகேரியோட் செல்லினம் என பிரித்து அழைக்கிறோம். தமிழில் மெய்கரு உயிரிகள். உட்கரு தனிசவ்வால் மூடப்படாமல் இருந்தால் அவற்றை புரோகேரியோட் செல்லினம் என அழைக்கிறோம். தமிழில் நிலைகரு உயிரிகள். 

பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒருசெல் நுண்ணுயிரிகள் புரோகேரியோட் செல்லின வகைகளுள் அடங்குகிறது. மற்றவை எல்லாம் (தாவரம், விலங்கு, மனிதன்) யுகேரியோட் வகையை சேர்ந்தவை.


செல் உறுப்புகள் ஏராளமாக இருந்தாலும் மிக முக்கியமான உறுப்புகளாக 8 பட்டியலிடப்படுகிறது.

1. மைட்டோகான்ரியா. தமிழில் ஆற்றல் ஆக்கி.
2. சோலரோபிளாஸ்ட். தமிழில் பச்சையம். (இது தாரவ செல்களில் மட்டும் காணப்படுகிறது).
3. ரைபோசோம். தமிழில் பிணைப்பகம்.
4. என்டோபிளாசம். தமிழில் பகுப்பு வலை.
5. கோல்கி அப்பேரடஸ். தமிழில் தடுப்பு வலை.
6. இலைசோசோம். தமிழில் அழிப்பு அமிலம்.
7. வாக்குவல்ஸ். தமிழில் வெற்றிடம்.
8. சைட்டோ கிளாஸ்டன். தமிழில் கடத்தல் மென் சவ்வு.

இவை அல்லாமல் செல்லில் பல உறுப்புகள் உள்ளன. ஆனால் அவை குறித்த முழுமையான அறிதல்களோ, புரிதல்களோ இன்னும் அறிவியலாளர் மத்தியில் வரவில்லை. எனவே அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.

செல்லின் மற்ற உறுப்புகளை தவிர்த்தாலும் முக்கிய 8 உறுப்புகளின் செயல்பாடுகளை வைத்து செல்லின் உயிரோட்டத்தை விளக்கி விட முடியும்.

1.மைட்டோகான்ரியா செல்லுக்கான மின்னாற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த மின்னாற்றல் உற்பத்தியே செல்லின் அனைத்து உயிரோட்டத்திற்கும் அடிப்படை காரணமாக அமைகிறது. செல்லின் பயன்பாடு போக மீதமுள்ள மின்னாற்றல் உடல் செயல்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. (இதுகுறித்து தனிப்பகுதியில் பார்க்கலாம்.)

மைட்டோகான்ரியாவின் செயல்பாடு நின்றுவிட்டால் மின்சாரம் துண்டித்த தொழிற்சாலை போல செல் இயக்கம் முற்றிலும் நிற்கிறது, (சட் டவுன் ஆகிறது).

2.பச்சையம் என்பது தாவர செல்லில் மட்டும் காணப்படும் ஒரு உறுப்பு. குறிப்பாக தாவர இலைகளில் பச்சையங்கள் காணப்படுகிறது. பச்சையம் சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பணியை செய்கிறது. இதை மைட்டோகான்ரியாவின் முன்னோடி என அழைக்கலாம்.

பச்சையம் ஆற்றல் இல்லை என்றால் தாவரம் மட்டுமல்ல விலங்குளும் இல்லை. ஏனென்றால் உயிர்செல்லுக்கு அடிப்படையான மின்னாற்றல் துவக்கம் இங்கு தான் நடக்கிறது. இந்த நிகழ்வை உயிரின் துவக்கம் என்றும் சொல்லாம். (விரிவாக பிற்பகுதியில் பார்க்கலாம்.)

3.ரைபோசோம் உயிரின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்காற்றுகிறது. ரைபோசோம் செல் உட்கருவில் இருந்து வெளிவரும் மரபு தகவல்களை ஒருங்கிணைத்து, அதனுடன் தேவையான தகவல்களை பிணைத்து செல்லின் மேலாண்மை பணியை செய்கிறது.

4. எண்டோபிளாசம், 5.தடுப்பு வலை (கோல்கி) போன்றவை ரைபோசோம் பணிக்கு உதவுகின்றன.

6.இலைசோசோம், 7.வெற்றிடம் ஆகியவை செல்லில் எஞ்சும் தேவையற்ற கழிவுகளை சேகரித்து அழிக்கும் பணியை செய்கின்றன.

8.கடத்தல் மென்சவ்வு செல்சவ்வில் இருந்து நேரடியாக ரைபோசோமுக்கு பொருட்களை கடத்துகிறது. அதாவது செல்நீரில் நனையாதவாறு செல்லவேண்டிய பொருட்கள் கடத்தல் மென்சவ்வு வழி கடத்தப்படுகின்றன.

அடுத்த பகுதியில் செல்உட்கருவை தெரிந்து கொண்டு, உயிர் எப்படி உண்டாகிறது என்பதை கண்டறிவோம்.

உயிர் தேடல் தொடரும்...

24/04/2020

உயிர் என்றால் என்ன? - 1

உடலில் உயிர் எங்கு உள்ளது? இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது.

உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் அது உண்மை இல்லை. உடல் அல்லாத ஒரு உயிர் இதுவரை கண்டறியப் படவில்லை. உடலில் தான் உயிர் உள்ளது. உடல் இல்லாமல் உயிர் இல்லை.

உடலின் ஏதோ ஒரு மூலையில் உயிர் உள்ளதா? அல்லது உடல் முழுவதும் உயிர் உள்ளதா? இந்த கேள்விக்கான பதிலை தேட உடலை பற்றிய அறிமுகம் நமக்கு தேவை!

உடலுக்கும் உயிருக்கும் ஒரே சம்மந்தம் தான் உள்ளது! அது :- உயிர் இல்லாவிட்டால் உடல் இல்லை. உடல் இல்லாவிட்டால் உயிர் இல்லை. உடலும் உயிரும் வெவ்வேறு என்றாலும் ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

உயிரை பற்றிய பல குழப்பங்கள் நம்மிடம் உள்ளது. இதுதான் உயிர் என இதுவரை நம்மால் உறுதியாக கண்டறிய முடியவில்லை. உயிர் குறித்து ஆன்மீகத்தில் எவ்வளவு குழப்பங்கள் உள்ளதோ, அதைவிட அறிவியலிலும் குழப்பங்கள் உள்ளன.

சரி இங்கே உயிரை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். உயிரின் உற்ற தோழன் உடலை பற்றி கொஞ்சம் அலசிவிட்டு மீண்டும் உயிருக்கு வருவோம்.

உடல் பற்றிய தெளிவு அறிவியலில் தெள்ளத்தெளிவாக உள்ளது. உடல், உறுப்புகளால் ஆனது. உறுப்புகள் திசுக்களால் ஆனாது. திசுக்கள் செல்களால் ஆனது. செல்கள் ஒவ்வொன்றும் தனி உடல்கள். அந்த தனி செல் உடல்களுக்குள் ஏரளாமான செல் உறுப்புகள்.

உடல் - உடல் உறுப்பு - திசு - செல் - செல் உறுப்பு

ஒரு உயிரியின் மொத்த உடல் அமைப்பை தான் உடல் என்கிறோம். இறந்த உயிர்களை உடல் என அழைப்பது இல்லை. அவை பிணங்கள் அல்லது உயிரற்ற பொருட்கள் பட்டியலில் அடங்குகிறது.

உடல் என்பது உறுப்புகளின் தொகுப்பாக உள்ளது. உறுப்புகள், உயிருக்கு உயிர் வேறுபடும். உதாரணமாக கை, கால், கண், காது உட்பட புற உறுப்புகள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் உட்பட உள்ளுறுப்புகள் என அனைத்தும் உயிரினத்துக்கு உயிரனம் வேறுபாடு உடையது. அது எப்படி? ஏன்? எதற்கு? எதனால்? என்பது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

உறுப்புகள் பல வடிவங்களில், பல வகைளில் இருந்தாலும் அனைத்தும் திசுக்களால் ஆனாது. தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் திசுக்களால் ஆனது. 


அது என்ன திசு?

திசு என்பது செல்களின் தொகுப்பு! ஒரு செல் என்பது செல். இரண்டுக்கும் மேற்றபட்ட செல்கள் சேர்ந்து இருந்தால் திசு. அவ்வளவு தான் திசுவுக்கும் செல்லுக்குள் உள்ள வேறுபாடு.

செல் என்பது உயிரினங்களின் அடிப்படை உறுப்பாக அறியப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களின் தொகுப்பு திசு. ஒன்றுக்கும் மேற்பட்ட திசுக்களின் தொகுப்பு உறுப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் தொகுப்பு உடல்.

சரி இனி செல்லுக்குள் நுழைவோம்!

ஒரு உடலில் நிகழும் அத்தனை நிகழ்வுகளின் அடிப்படையும் ஒரு செல்லுக்குள் நிகழ்கிறது. உதாரணமாக செல் சுவாசிக்கிறது, செல் உணவு உட்கொள்கிறது, செல் கழிவை வெளியேற்றுகிறது, செல்லுள் காம(செக்ஸ்)நிகழ்வுகளும் நடக்கின்றன. 

இதெல்லம் எப்படி நடக்கிறது? செல் எப்படி காமத்தில் ஈடுபடுகிறது? இதை பற்றி தெரிந்து கொள்ள செல் உறுப்புக்களை பற்றிய அறிதல் வேண்டும்.

நமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் இருக்கிறது. செல்லுக்கு பல வடிவங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உள்ளது. உதாரணமாக ஒவ்வொருவர் உடலுக்கும் பல வடிவங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட அமைப்பை பெற்றிருக்கிறது. அதாவது புறத்தோல், புற உறுப்புகள், உள்தோல், உள்உறுப்புள் என உடலில் இருப்பதை போல செல்லுள்ளும் இருக்கின்றன.

செல்லின் அமைப்பை மூன்றாக பிரிக்கலாம்.

1. புற அமைப்பு, 2. உள்அமைப்பு, 3. உட்கரு அமைப்பு

செல்லின் புற அமைப்பில் செல்தோல் உள்ளது. செல்தோலை செல் சவ்வு என்று அழைக்கிறோம். செல்சவ்வு ஒரு இயந்திர கதவு போல பணியாற்றுகிறது. உள்ளே நுழைய அனுமதி உள்ளதை மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கிறது. அதுபோல செல்லுள் இருந்து வெளியே வர அனுமதி உள்ளதை மட்டும் வெளியே வர அனுமதிக்கிறது. அவ்வளவு தான் செல்சவ்வின் வேலை.

செல் சவ்வை காவலாளியுடன் ஒப்பிட முடியாது. அதே நேரத்தில் காவல் இயந்திரத்துடன் ஒப்பிடலாம். காவலாளி உணர்வுபூர்வமாக செயல்படுவார். ஆனால் இயந்திரத்திடம் உணர்வுபூர்வமாக ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் தந்திரமாக ஏமாற்றலாம். காவலாளி கடப்பவருக்கும் கடவுசீட்டுக்கும் வேறுபாடு இருந்தால் அனுமதிக்க மாட்டார். ஆனால் இயந்திரத்திற்கு கடவுசீட்டு மட்டும் போதும். கடவுசீட்டு உள்ள யாரும் இயந்திரத்தை ஏமாற்றி நுழைந்து விட முடியும். ஆனால் அந்த கடவுசீட்டை உண்டாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

கடவுசீட்டுடன் செல்லுக்குள் நுழைவது எப்படி?
செல்லுள் என்ன இருக்கிறது?
செல்லுள் உயிர் எங்கே இருக்கிறது? அடுத்த பதிவில்..

தொடரும்..

26/03/2020

ஓம் மந்திரம் - தியானம் 3

உடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே யோகாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஓகாசனம் மனதுக்கானது என்றாலும் அது மனதை போல கருத்தியல் தொடர்பானது அல்ல. ஓகாசனம் என்பது முழுக்க முழுக்க உடலியல் (பொருளியல்) தொடர்பானது.

உடல் ஆசன முறைகளில் ஒன்று தான் ஓகாசனம். உடலின் மூச்சை கையாளும் உடற்பயிற்சியே ஓகாசனம். மூச்சை கையாளும்போது நம் எண்ணங்களும் இயல்பாகவே ஒடுக்கம் பெறுகிறது. இதனாலேயே ஓகாசனத்தை மனதுடன் தொடர்புடையதாக குறிப்பிடுகிறோம்.

மற்ற உடல் ஆசனங்களை செய்யும்போது மனம் ஒடுக்கம் பெறுவது இல்லை. ஆனால் ஓகாசனம் செய்யும்போது மனம் இயல்பாக ஒடுக்கம் பெறுகிறது. மனதை அடக்கும் தந்திரமாக ஒகாசனம் அமைகிறது.

ஓகாசனத்தின் மந்திரமாக ஓம்காரம் வலியுறுத்தப்படுகிறது. ஓம்காரம் என்றால் அடங்கி போவது., அமைதியாவது., ஆமோதிப்பது., ஒத்துக்கொள்வது., அப்படியே என சம்மதிப்பது., என்ற அர்த்தங்கள் தமிழில் விவரிக்கப்படுகிறது.

ஆபிரகாமிய மதங்களின் ஆமேன் என்ற சொல்லும், ஓம் என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தையே குறிக்கின்றன. ஆமேன் என்றால், ஆமாம், அப்படியே, அதுதான் என ஒத்துக்கொள்ளும் மனநிலையையே குறிக்கிறது. இதே மனநிலை தான் ஒம் என்ற சொல்லிற்கும் உடையது.

ஓம் என்பது ஓங்காரம் என்ற சொல்லின் சுருக்க குறியீடாக உள்ளது. ஓம்காரம் என்பது அகங்காரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல். அகங்காரம் என்பது மனதின் பிறப்பு பெயர். ஒங்காரம் என்பது மனதின் இறப்பு பெயர். 

தமிழ் உயிர் எழுத்து வரிசையில் முதல் எழுத்தான ‘அ’ மனதின் பிறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. அ என்பதன் விரிவாக்கமே அங்காரம். அங்காரமே அகங்காரம் எனப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்து வரிசையில் இறுதி எழுத்தான ‘ஓ’ மனதின் இறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. ‘ஓ’ என்பதன் விரிவாக்கமே ஓங்காரம்.

தான் என்ற முதல் எண்ணத்திலேயே மனம் பிறக்கிறது. தான் என்ற எண்ணத்தை மனம் எப்போதும் விடுவதில்லை. தான், தன்னுடையது, தனக்கானது, என்ற அடிப்படையிலேயே மனதின் எண்ணங்கள் கட்டமைக்கப்படுகிறது. (மனம் குறித்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.)

தான், தனக்கு, தனக்குறியது என்ற மனதின் அடிப்படை எண்ணங்களை அகங்காரம் என்ற சொல்லில் அழைக்கிறோம். தான் என்ற மனதின் எண்ணங்கள் முழுமையாக ஒடுக்கப்படும் போது மனம் இறப்பை சந்திக்கிறது. மனதின் இறப்பை ஓங்காரம் என அழைக்கிறோம். 

ஒருவர் ‘தான்’ என்ற இறுதி சுயநினைவையும் இழக்கும் போது மனதால் இறந்தவராகிறார். அந்த இறப்பின் நிலையே ஓங்காரம்.

நான் ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவனே. என் மனதை இறைவனிடம் ஒப்படைக்கிறேன் என்பதன் குறியீட்டு சொல்லாக ஓங்காரத்தை சைவசித்தர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

சரி இனி ஓங்காரத்திற்கும் ஓகாசனத்திற்கும் என்ன தொடர்பு என்பதை பார்த்து விடுவோம்.

ஓகாசனம் என்பது மூச்சு பயிற்சியை குறிக்கிறது. மூச்சு பயிற்சியின் போது சிந்தனை முழுவதும் மூச்சின் மீது கவனமாக இருக்க வேண்டும். இயல்பாகவே இது சாத்தியப்படும். மூச்சு பயிற்சியின் போது வேறு சிந்தனைகள் வராது. அப்படி வந்தால் மூச்சின் ஆளுகை இயல்பாகவே கைவிடப்படும்.
மூச்சு ஆசனத்தின் போது மனம் இயல்பாகவே ஒற்றை சிந்தனையில் ஒடுங்குகிறது. எனவே மன ஒடுக்கத்தின் பெயரையே மூச்சு ஆசனத்திற்கு பெயராக சூட்டி உள்ளனர் சித்தர்கள். மன ஒடுக்கத்தின் ஓங்காரமே மூச்சு ஆசனத்தின் ஓகாசனமாக பெயர் பெற்றுள்ளது அவ்வளவே.

இனி ஓம் என்ற சொல்லிற்கான விளக்கத்தை பார்ப்போம்.

ஓம் என்ற சொல்லிற்கு இந்துமத நூல்கள் பல விளக்கங்கள் தருகின்றன. அ.உ.ம என்ற எழுத்துக்களின் சுருக்கமாக ஓம் விவரிக்கப்படுகிறது.

ஓம் என்பது உயிர் மூச்சின் பிறப்பாகவும், உயிர் மந்திரமாகவும், மந்திரங்களுக்கும், சொல்லுக்கும், ஒலிக்கும் முதன்மையானதாகவும் கூறப்படுவது தவறான கருத்து. உண்மையில் ஓம் என்பது துவக்க ஒலியோ, துவக்க மந்திரமோ அல்ல. ஓம் என்பது இறுதி ஒலியும், இறுதி மந்திரமாகவுமே சித்தர்கள் விளக்கி உள்ளனர்.

தன் எல்லாவித எண்ணங்களையும் கைவிட்டு இறைநிலை என்ற ஒற்றை எண்ணத்தில் இருப்பதற்கான மந்திரமாகவே ஓம் வலியுறுத்தப்படுகிறது. ஒம் என்ற இறுதி எண்ணத்தில் நிலைத்திருப்பதையே தியானம் என சித்தர்கள் விளக்கி உள்ளனர்.

ஓம் என்ற ஒற்றை எண்ணம் மனதின் இறுதி எண்ணமாக கொள்ளப்படுகிறது. ஓம் என்ற இறுதி எண்ணத்தில் தொடர்ந்து மனதை நிலை நிறுத்துவதையே தியானம் என்கிறோம்.

மனதில் ‘தான்’ என்ற எண்ணம் அகன்று ஓம் என்ற எண்ணத்தை நிலைநிறுத்தம் கலையையே வீடுபேறு, சமாதி என்ற சொற்களில் அழைக்கிறோம்.

மனதில் ‘தான்’ எனும் எண்ணம் அகலும் போது உடல் மீதான எண்ணம் இல்லாமல் போகிறது. இதனால் உயிர் பயமும் அற்றுப்போகிறது. உயிர் பயம் இல்லாத போது பிறப்பு-இறப்பு என்ற கவலை இல்லை. இந்த நிலையை வீடுபேறு என சித்தர்கள் வியம்புகின்றனர்.

தியானம் செய்வதால் ‘தான்’ எனும் எண்ணத்தை தற்காலிகமாக ஒடுக்க முடியும். ஆனால் அது ஒரு மாயை மட்டுமே. இது போதை, மயக்கம் மற்றும் தூக்கம் போன்றது. போதை, தூக்கம், மயக்கம் தீர்ந்ததும் உடல்வலியும், மனவலியும் திரும்ப வந்துவிடும்.

தியானத்தால் கிடைக்கும் வீடுபேறு வெற்று மாயை. தியானத்திற்கும் அறத்திற்கும் தொடர்பே இல்லை. அறத்தை பேணி தியான நிலையை அடைவதை விட, போதையை பேணி தியான நிலையை அடைவது எளிது. இந்த குறுக்கு வழியே சித்தர்கள் தியானத்தை கைவிட காரணமாக அமைந்தது.

அந்த குறுக்குவழி சுவாரசியத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

தொடரும்...

22/03/2020

நான் எப்படி மீண்டேன் கொராணாவில் இருந்து? - சிறப்பு கட்டுரை

கொராணாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம் அடைந்தவன் என்ற அனுபவ திமிரில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் கொராணாவால் பாதிக்கப்பட்டடேன். பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் மீண்டேன். சரியாக 21 நாட்கள் நான் எடுத்துக்கொண்ட அறிவுபூர்வமான மருந்துகள் என்னை மீட்டது.

கொராணா என்றால் என்ன? அது ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும். எப்படி சரி செய்வது என்பவற்றை வரிசையாக பார்க்கலாம்.

கொராணா என்பது தற்போது கண்டறியப்பட்ட வைரஸ் அல்ல. அது 1960லேயே கண்டறிப்பட்டு விட்டது. தற்போது பரவிக்கொண்டு இருப்பது கொராணா வைரஸ் குடும்பத்தை சார்ந்த கோவிட் 19 என்ற வைரஸ். பொதுவாக கொரோணா என அழைக்கிறோம்.

முதலில் வைரஸ் என்றால் என்ன என தெரிந்து கொள்ளுங்கள்.

வைரஸ் என்பது ஒரு சூழியல் உயிரி. சிறிது சூழல் மாறினாலும் உயிரற்ற பொருளாகிவிடும். மீண்டும் அதே சூழல் ஏற்பட்டால் உயிர்பெற்றுவிடும். அதேபோல வைரஸ் என்பது வளர்ச்சி இல்லா உயிரி. வைரஸ் எப்போதும் ஒரே அளவிலேயே இருக்கும். அது வளராது. அதே நேரத்தில் இனபெருக்கம் செய்யும். தன்னளவிலேயே பலவற்றை பெருக்கும். எவ்வளவு பெருக்கினாலும் அவையால் சூழியலை எதிர்கொள்ள முடியாது.

வைரஸ்கள் வரண்ட சூழலில் உயிரற்ற பொருளாகவும், ஈரப்பத சூழலில் உயிருள்ள பொருளாகவும் இருக்கும். வைரஸ்களை அழிக்க முடியாது. ஆனால் கொல்ல முடியும். கொராணா கோவிட்19 ம் ஒரு வைரஸ் தான்.

ஒரு வாரத்திற்கு மேல் நீண்டு நிற்கும் எல்லா சளி காய்ச்சலும் நுண்ணியிரிகளால் தான் ஏற்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் என்பவையே நுண்ணுயிரிகள்.(இவை குறித்து நுண்ணுயிரிகள் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். தற்போது கொரோணா குறித்து மட்டும் பார்ப்போம்.)

கொரணா வைரஸ் என்பது இரத்தம் மூலமாக பரவாது. இரத்தத்தில் வாழும் திறன் கொரோணா வைரசுக்கு இல்லை. அதனால் தான் இரத்த பரிசோதனையில் கொரோணா வைரஸ் தாக்கத்தை கண்டறிய முடியாது. கொரோணா வைரஸ் நமது நுரையீரல் சூழலில் வாழும் திறன் பெற்றது. நுரையீரல் சளியில் கொராணா எளிதாக தாக்குபிடிக்கும்.

பொதுவாக நுண்ணியிரிகள் சளிபடலத்தால் சூழப்பட்டால் இறப்பை சந்திக்கின்றன. ஆனால் கொரோணா சளியை தாக்குபிடித்து உயிருடன் இருக்கும் திறனை பெற்றுள்ளது.

நுரையீரல் சளியை எதிர்கொள்ளும் திறன் இருப்பதால் அங்கு கொரோணா பல்கி பெருகுகிறது. இதனால் நுரையீரல் சளியின் அளவு கூடுகிறது. சளி அதிகரிக்கும் போது இருமல், தும்மல், மூச்சு திணறல் ஏற்படுவது இயல்பு. மூச்சு திணறலை எதிர்கொள்ள இயலாதவர்கள் இறப்பை சந்திக்கின்றனர். அவ்வளவு தான் கொரோணா நோயின் மொத்த வரலாறு.

உண்மையில் கொராணா வைரசால் உலகில் யாரும் இறக்கவில்லை. விழிப்புணர்வு என்ற பெயரில் அதீத பயத்தை நோயாளியின் மீது திணித்துள்ளனர். கொராண பயத்தால் இறந்தவர்கள் தான் அதிகம். 

சரி மூச்சு திணறலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1. முதலில் சளியின் அளவை குறைக்க வேண்டும். 2. சளியை மூச்சுபாதை அல்லாத மாற்று பாதையில் வெளியேற்ற வேண்டும். 3. மூச்சின் சமநிலையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இறப்பை தவிர்க்கலாம். இது கொராணாவுக்கு மட்டுமல்ல எல்லா சளி காய்ச்சலுக்கும் பொருந்தும்.

இதுவரை ஒரு இந்தியருக்கும் கூட கொரோணா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்படவில்லை. எல்லாம் அறிகுறிகளை வைத்தே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அறிகுறிகள் குறைந்தவுடன் வீட்டு காவலில் இருந்து விடைபெறுகின்றனர். ஆனால் அச்சமும் பீதியும் சாதாரண காய்ச்சல் உள்ளவர்களை கூட மூச்சுதினற வைக்கிறது.


உண்மையில் கொரோணா வைரஸை கண்டறியயும் மருத்துவ முறைகள் போதிய அளவில் இந்தியாவில் இல்லை. அதே நேரத்தில் கொரோணா பாதிப்பை எதிர்கொள்ளும் மருந்துகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.

உதாரணத்திற்கு டெங்கு காய்ச்சலுக்கு இன்றுவரை அலோபதி மருத்துவத்தில் மருந்து இல்லை. ஆனால் பப்பாளி இலை சாறு, நிலவேம்பு கசாயம் இரண்டின் உதவியுடன் டெங்குவை எளிதாக எதிர்கொண்டு வருகிறது தமிழகம். தற்போது கூட கொரோணா அறிகுறியுள்ள ஒருவரை முற்றிலும் குணப்படுத்தி உள்ளது தமிழகம்.

ஜனவரி இறுதி வாரம் முதல் தமிழகம் எங்கும் ஒருவித விச காய்ச்சல் பரவியது. அதில் நானும் பாதிக்கப்பட்டேன். பொதுவாக காய்ச்சலுக்கு நான் எடுத்துக்கொள்ளும் மருந்து பாரசிட்டமால். ஆனால் இந்த முறை பாரசிட்டமால் மாத்திரை, ஊசி எதுவும் பலன் தரவில்லை.

இருமல், தும்மல், மூச்சு திணறல், நெச்சில் கடுமையான குளிர்ச்சி என உடல் தொடர்ந்து சோர்வடைந்து வந்தது. இரத்த பரிசோதனையில் எந்த கிருமி தாக்கமும் இருப்பது தெரியவில்லை. டாக்டர் கொரோணாவாக இருக்குமோ என்று கிண்டல் செய்தார். அப்படியானால் நான் தமிழக சுகாதார துறையின் ஸ்பெசல் கெஸ்ட் என பதில் கிண்டலுடன் விடைபெற்றேன்.

நிலவேம்பு கசாயம், மணிக்கு ஒரு முறை சூடான கஞ்சி, ஆவிபிடிக்கும் மாத்திரை, நாட்டுகோழி சூப், நண்டு சூப், துளசி சாறு, தூதுவளை ரசம், இவற்றை எடுத்துக்கொண்டேன். நெஞ்சு பகுதியை தொடர்ந்து வியர்க்க வைத்துக்கொண்டே இருந்தேன். இதனால் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படவில்லை. உடலின் நீர்சத்தை சமநிலையாக வைத்தேன். சரியாக 21 நாளில் முழுமையாக மீண்டு விட்டேன். இதே மருந்துகள் தான் என் மகனுக்கும் மனைவிக்கும்.

என் சளி இருமலுக்கு காரணம் கொராணாவா என்பது தெரியாது. ஆனால் இன்று கொராணாவுக்கு கூறப்படும் அத்தனை அறிகுறிகளும் இருந்தது.

டெங்கு காய்ச்சல் நிலவேம்பின் முன்பு சாதாரண காய்ச்சலாக தோற்றது. அப்படியே ஆகட்டும் கொராணாவுக்கும். 

தயவுகூர்ந்து விழிப்புணர்வு என்ற பெயரில் பயத்தை பரப்பாதீர்கள். கொராணாவில் யாரும் இறக்கவில்லை. உலகம் முழுவதும் பயத்தால் தான் பத்தாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டு உள்ளது.

முற்றும். நன்றி.

21/03/2020

பதஞ்சலி யோகா சூத்திரம் - தியானம் 2

தியானம் குறித்து பல இலக்கிய நூல்கள் இருந்தாலும் முதன்மையாக கருதப்படுவது பதஞ்சலி யோக சூத்திரம். பதஞ்லி யோக சூத்திரம் நாத்திகர்களால் பின்பற்றப்படுவது.

ஆன்மா, ஒற்றை கடவுள், தேவலோகம் இவற்றின் அடிப்படையில் அமைந்தது வேத மதங்கள். இவற்றை ஆபிரகாமிய மதங்கள் என்றும் அழைக்கிறோம். இந்த ஆபிரகாமிய மதங்களை பின்பற்றுபவர்கள் ஆத்திகர் எனப்படுகின்றனர். வேதத்தை பின்பற்றாமல் பல கடவுள் கொள்கையை பின்பற்றுபவர்கள் நாத்திகர்கள் எனப்படுகின்றனர்.

அதன் அடிப்படையில் பதஞ்சலி யோக சூத்திரம் நாத்திக கொள்கைகளை தாங்கி நிற்கிறது.

பதஞ்சலி யோக சூத்திர நூல் மோட்சம் அடைய தேவையான தியானத்தை வலியுறுத்துகிறது. இங்கு மோட்சம் என்பது தமிழ் இலக்கியங்கள் வியம்பும் வீடுபேற்றை வலியுறுத்துகிறது. 

வேத மதங்கள் மோட்சம் என தேவலோகத்தை வலியுறுத்துகின்றன. பைபிள், குறான், பகவத்கீதை உட்பட வேதங்கள் மோட்சம் என கடவுளின் உலகை குறிக்கின்றன. பூமியில் மனிதர்களுக்குள் பிறப்பு எடுத்துள்ள ஆன்மா, மரணத்திற்கு பின்னர் கடவுளின் உலகிற்கு செல்கிறது என்பதே வேத மதங்களின் மோட்சம் சார்ந்த கொள்கை.

இந்திய பூர்வீக மக்களின் மோட்சம் சார்ந்த கொள்கை மத வேதங்களில் இருந்து வேறுபட்டது. மோட்சம் என கடவுளின் தேவலோகத்தை பூர்வகுடி இந்தியர்கள் ஏற்பதில்லை. மாறாக வீடுபேறு என்ற கொள்கை உடையவர்களாக உள்ளனர். மனிதர்கள் மரணத்திற்கு பின்னர் மீண்டும் வேறு ஒரு உயிராக பிறக்கின்றனர். தொடந்து இவ்வாறு பிறப்பு எடுப்பவர்கள். பிறவாமல் இருப்பதை வீடுபேறு என அழைக்கின்றனர்.


பிறவா நிலையை அடைவதையே பதஞ்சலி முனிவரும் மோட்சம் என குறிப்பிடுகிறார். பதஞ்சலி யோக சூத்திரத்தில் மோட்சம் கைவல்யம் என்ற பெயரில் வியம்ப பட்டு உள்ளது. கைவல்யத்தை கைலாசம் என்று விளக்கிக்கொள்வோரும் உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரம் சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பிரிவுகளில் 8 நிலைகளில் தியானத்தை போதிக்கிறது.

1.தவிர்க்க வேண்டியவை,(யமக), 2.கடைபிடிக்க வேண்டியவை(நியமக), 3.இருக்கை(ஆசனம்), 4.மூச்சை கையாளல்(பிரணாயாமம்), 5.புலன்களை கையாளல்(பிரத்தியாகாரம்), 6.மனதை கையாளல்(தாரணம்), 7.தவம்(தியானம்), 8.வீடுபேறு(சமாதி) என்ற 8 நிலை தியானத்தை பற்றி பேசுவதே பதஞ்சலி யோக சூத்திரம்.

1. உயிர்களை துன்புறுத்தல், பொய், திருட்டு, காமம், ஆசை இந்த ஐந்தையும் தியானம் செய்பவர் தவிர்க்க வேண்டும்.

2. துய்மை, நிறைவு, பொறுமை, அறிவு, பக்தி இந்த ஐந்தையும் தியானம் செய்பவர் கடைபிடிக்க வேண்டும்.

3. எப்படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசனம் பகுதியில் விளக்கப்படுகிறது. உடல் தூய்மையும், முழுமையான உடல் திறனும் தியானம் செய்பவருக்கு இருக்க வேண்டும். அமரும் இருக்கை கிடைமட்டமாக சமமாக இருத்தல் வேண்டும். கை, கால்கள், முதுகுதண்டு, கழுத்து, தலை உட்பட ஐந்து உடல் பகுதிகள் திடத்துடன் இருக்கும்படி அமர வேண்டும் என்பது பற்றி ஆசனம் பகுதியில் விளக்கப்படுகிறது.

4. சரியான ஆசனத்தில் அமர்ந்தவர் உடலின் உள்ளுருப்புகளை நிலைநிறுத்துவம் வகையில் எவ்வாறு மூச்சு பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து பிரணாயாமம் பகுதியில் விளக்கப்படுகிறது. சூழலுக்கு ஏற்ப மூச்சை வேகமாக, மெதுவாக, சீராக உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடும் பயிற்சியே பிராணாயமம். மூச்சை கையால்வதால் சூழியல் காற்றால் தியானத்திற்கான தவம் தடைபடாது என்கிறார் பதஞ்சலி முனிவர்.

5. தியானத்தின் போது புலன் உறுப்புகளை கையாளுதல் பற்றி பிரத்தியாகாரம் பகுதியில் விளக்கப்படுகிறது. கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐம்புலன்களை நற்செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், காமத்திற்கு பயன்படுத்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் தியானம் தடையின்றி நடைபெற உதவும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.

6. தியானத்திற்கு மன ஒருமுகம் மிக முக்கியம். பல சிந்தனைகளை தவிர்த்து ஒற்றை சிந்தனையில் மனதை கையாள வேண்டும். இதற்கு மனதை எதாவது ஒரு பொருளின் மீது குவித்தல் வேண்டும். மனதை எப்படி ஒருமுக ப்படுத்துவது என்பது குறித்து மனதை கையாளல் பகுதில் விளக்கப்படுகிறது. மனதின் சிந்தனையை நிலையான ஒரு பொருளின் மீது (உதாரணத்திற்கு கடவுள் சிலை, சூரியன், நிலா, மலை) மட்டும் வைத்திருப்பது மன ஒருமுகம் எனப்படுகிறது.

7. மன ஒருமுகத்தில் தொடர்ந்து பொறுமையாக இருத்தல் தியானம் எனப்படுகிறது. சுய மற்றும் சூழியல் எண்ணங்கள் தவிர்த்து, ஒற்றை பொருள் சிந்தனையில் தொடர்ந்து இருத்தல் தியானம் எனப்படுகிறது.

8. ஒற்றை பொருள் சிந்தனையில் இருக்கும் தொடர் தியானம் ஒரு கட்டத்தில் அந்த பொருளோடு நம்மை ஒன்றிவிடுகிறது. அந்த பொருள்வேறு நாம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே என்ற ஒற்றை நிலையை மனம் அடைகிறது. அப்படி அடையும் ஒற்றை நிலையை சமாதி என்கிறார் பதஞ்சலி முனிவர்.

இப்படி ஒற்றை நிலையை அடைவதால் நாமும் பிரபஞ்சமும் ஒன்றாகிப்போகிறோம். இந்த நிலையே கைவல்யம், இதுவே மோட்சம், இதுவே சமாதி. 

இந்த நிலையில் நமது மனதில் வேறு புதிய எண்ணங்கள் பிறப்பது இல்லை. எண்ணங்களால் வரும் பொருள்கள் இருப்பது இல்லை. எண்ணங்களால் வரும் புதிய வித்துகள் பிறப்பது இல்லை. வித்துக்களே இல்லாத நிலையில் உயிர்களோ, பொருட்களோ இல்லை என பதஞ்சலி யோக சூத்திரத்தை முடிக்கிறார் பதஞ்சலி முனிவர்.

இப்படி சமாதி அடைவது சாத்தியமா? சமாதி அடைந்தால் என்னதான் பயன்?

அடுத்த பகுதியில்.. தொடரும்... 

15/03/2020

யோகாசனமா? ஓகாசனமா? - தியானம் 1

தியானம் என்றதும் நினைவுக்கு வருவது புத்தர், விவேகானந்தர், பதஞ்சலி.

தியானம் குறித்து வடஇந்திய இலக்கியங்களே அதிகமாக பேசுகிறது. தமிழ் இலக்கியங்கள் தியானத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை.

ஆபிரகாமிய மதங்கள், புத்தம், சைனம், போன்றவை தியானத்தை வலியுறுத்துகின்றன. இந்து மதத்தில் தியானம் என்பது பொறுமையோடு நின்றுவிடுகிறது. தியானத்தால் பெரிய மாற்றங்களை பெற முடியாது என்பதே இந்து மத கோட்பாடு.

தியானம் என்றால் என்ன? தியானம் எதற்கு பயன்படுகிறது? தியானத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பவை குறித்த அடிப்படை புரிதல் அவசியம். இந்த புரிதல் இருந்தால் தியானத்திற்காக இழக்கும் நேரத்தையும், தியானத்தின் பெயரில் ஏமாற்றப்படும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.

தியானம் என்ற சொல்லுக்கு பொறுமை என்று அர்த்தம். ஆனால் இன்றைய உலகில் மனிதர்களால் அவ்வளவு பொறுமையாக இருக்க முடியாது. அதனால் தியானத்தை விட்டு யோகம், மற்றும் பக்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். தியானத்தை விட யோகம் அதிக வருவாய் ஈட்டுவதால் யோக பயிற்சி மையங்கள் புற்றீசலாக பெருகி வருகின்றன.

பக்தி போரடித்து போனவர்களுக்கு தியானம் உயர்வாக தெரிந்தது. தியானத்திற்கான பொறுமை இல்லாதவர்களுக்கு யோகம் எளிதாக தெரிந்தது. யோகத்தில் திருப்தி அடையாதவர்கள் மோட்சத்திற்கான இடம் தேடுகிறார்கள். ஆக எல்லாமே ஒரு வித மன உளைச்சலையே மிச்சப்படுத்துகின்றன. 

அது என்ன தியானம், பக்தி, யோகம், மோட்சம்? தியானத்திற்கும் பக்திக்கும், யோகத்திற்கும் மோட்சத்திற்கும் என்ன தொடர்பு?

தியானத்தை பற்றி ஆய்வு செய்யும் போது முதலில் வந்து நிற்பது பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல். பதஞ்சலி யோக சூத்திரம் முழுக்க முழுக்க தியானத்தை பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தற்போது பதஞ்சலி யோகத்தை  உடற்பயிற்சியுடன் தொடர்புபடுத்தி வியாபாரம் செய்கின்றனர்.

ஆசனம் வேறு! தியானம் வேறு! முதலில் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஆசனம் என்பது உடற்பயிற்சி தொடர்புடையது. தியானம் என்பது மனபயிற்சி தொடர்புடையது.

உடற்பயிற்சிக்கும் மனபயிற்சிக்கும் நீண்டநெடிய வேறுபாடு உண்டு. உடற்பயிற்சி என்பது எதார்த்தமானது. மனபயிற்சி என்பது மாயையானது, போலியானது.

பதஞ்சலி யோக சூத்திர நூல் மோட்சம் அடைய தேவையான தியானத்தை வலியுறுத்துகிறது. சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பிரிவுகளில் 8 நிலைகளில் தியானத்தை போதிக்கிறார் பதஞ்சலி முனிவர்.


பதஞ்சலி யோகசூத்திரத்தில் ஆசன நிலைகள் விளக்கப்படுவதில்லை. மோட்சம் அடைய தியானம் உதவுகிறது. தியானத்திற்கு யோகாசனம் உதவுகிறது என மட்டுமே பதஞ்சலி யோக சூத்திரம் குறிப்பிடுகிறது. ஆசன நிலைகள் தமிழக சித்தரியல் இலக்கியங்களிலேயே விளக்கப்பட்டு உள்ளன.

யோகசனம் என்பது ஓகாசனம் என்ற தமிழ்சொல்லின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. சித்தர்கள் மூச்சுபயிற்சியை ஓகாசனமாக குறிப்பிட்டு உள்ளனர். ஓகாசனம் என்பது பல ஆசனங்களில் மூச்சுபயிற்சி என்ற ஒரு ஆசனம் மட்டுமே. இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு ஓகாசனத்திற்கும், யோகாசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்.

இன்று யோகசனம் என்ற பெயரில் வட இந்தியாவில் ராம்தேவும், தென்னிந்தியாவில் ஜக்கி வாசுதேவும் செய்வது வெற்று கூத்துக்களே. (இந்த வார்த்தைகள் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் ஓகாசனத்திற்கும் யோகசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளும்போது உங்களுக்கே இந்த ரௌத்திரம் வந்துவிடும்.)

யோகம் என்றால் தவம் என்று பொருள், தவம் என்றால் தியானம் என்று பொருள். அல்லாமல் யோகம் என்றால் ஆசனம் என்று பொருள் அல்ல! ஆசனம் வேறு! யோகம் வேறு! ஆசனம் என்பது உடற்பயிற்சி தொடர்புடையது. யோகம் என்பது தியானம் என்ற மனப்பயிற்சியுடன் தொடர்புடையது.

தியானம் செய்வதற்கான படிப்படியான நிலைகளில் ஒன்று மட்டுமே யோகாசனம். அதாவது ஓகாசனம். இன்னும் தெளிவாக சொன்னால் மூச்சு பயிற்சி! சமஸ்கிருதத்தில் பிரணாயாமம்! அவ்வளவு தான். மூச்சு பயிற்சி அல்லாமல் வேறு எந்த ஆசனங்களும் பதஞ்சலி யோகாசனத்தில் இல்லை. 

மூச்சு பயிற்சி மட்டுமே யோகாசனம். அல்லாமல் பிற உடல் பயிற்சிகள் யோகாசனம் ஆகாது. பிற உடற்பயிற்சிகள் ஆசனம் என்ற பெயரில் சித்தர் இலக்கியங்களில் ஏராளம் உள்ளன.

உதாரணத்திற்கு சிரசாசனம், பத்மாசனம், சிம்மாசனம் என பல ஆசனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் யோகாசனம் என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்குவது மடத்தனம். அந்த மடத்தன ஆசனத்தின் மீது அமர்ந்தே இன்று உலகம் முழுவதும் பல யோகா பயிற்சி மையங்கள் கொடிகட்டி பறக்கின்றன.

ஆசனத்திற்கும் யோகாசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியாபார உலகின் வித்துக்களாக மாறிவிட்டனர்.

வித்துக்களாக மாறக்கூடாது என்பதே பதஞ்சலி யோகத்தின் கடைசி சூத்திரம். ஆனால் அதுவே புரியாமல் பதஞ்சலியின் பெயரில் யோகா மையங்கள் செயல்படுவது உச்சகட்ட கேலிகூத்து. 

உண்மையில் பதஞ்சலி யோக சூத்திரம் என்றால் என்ன?

ஓம் என்ற மூச்சில் யோகாசனம் என்ற தியான நிலையை அடைவது எப்படி?

அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

தொடரும்...

13/03/2020

மரணத்தை வெல்லும் மருந்து - நவீன சித்த மருத்துவம் 5

மருந்துவத்தை விட மருந்து மிக முக்கியமானது. சரியான மருந்தை கொடுத்துவிட்டால் உடல் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளும்.

மருந்தை மூன்றாக பிரிக்கலாம். 1. உணவு வழி மருந்து, 2. இரத்த வழி மருந்து, 3. காற்று வழி மருந்து.

வாய்வழியாக உட்கொள்ளும் உணவு, தண்ணீர், மாத்திரைகள், மருந்துகள் எல்லாம் உணவு வழி மருந்தைச் சார்ந்தவை.

ஊசி வழி செலுத்தப்படும் மருந்துகள், காயங்களுக்கு மேல் பூசப்படும் ஆயில்மெண்ட், கிரீம், பொடி, உட்பட வகை மருந்துகள் இரத்தத்தின் வழி மருந்தைச் சார்ந்தவை.

ஆவிபிடித்தல், புகைபிடித்தல், சுவாசித்தல் ஆகியவை காற்றின் வழி செலுத்தும் மருந்துகள்.

சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துகள் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. ஆங்கில மருத்துவத்தில் ஊசியின் வழி செலுத்தும் மருந்துகளுக்கு இணையானது சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துக்கள். 

ஊசி மருந்துகளை போல காற்றுவழி மருந்துகள் உடனடி நிவாரணத்தை தருகின்றன. அதே நேரத்தில் ஊசியைப் போல் பக்கவிளைவுகளை தருவதில்லை.

சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துகள் முறைப்படுத்தப் படாமல் உள்ளன. குறிபிட்ட சில மருந்துவர்கள் மட்டுமே இதை செய்கின்றனர்.

சாம்பிராணி புகை, வரமிளகாய்+குறுமிளகு+உப்பு+துளசி புகை, வேப்பிலை ஆவிபிடித்தல் போன்றவை பொதுவான காற்றுவழி மருந்துகள்.

மூலிகைகளை மருத்துவர் தன் வாயில் மென்று காற்றை நோயாளியின் மூக்கு மற்றும் காதுகளில் ஊதுதல் மற்றொருவகை காற்று மருந்து. இப்படி பலவகை காற்று மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவை அடிப்படை அளவில் கூட முறைப்படுத்தப் படாமல் உள்ளன.

சித்த மருத்துவத்தில் இரத்த வழி மருந்துகள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. இரத்த வழி மருந்துகளுக்கு மாற்றாக காற்று மற்றும் நிணநீர் வழி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருந்துவத்தில் இரத்தம் சார்ந்த மருந்துகள் நிணநீர் வழியாகவே செலுத்தப்படுகிறது. காயங்களில் வழியும் நிணநீர்கள் மீது மருந்தை பூசுவதால் அவை இரத்தத்தில் கலக்கின்றன. நிணநீருடன் இணைந்து கலப்பதால் பக்கவிளைவுகள் குறைக்கப்படுகிறது.

நிணநீரையே மருந்தாக பயன்படுத்தும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயாளியின் இரத்த உறவினரின்  எச்சில், சிறுநீர் இவற்றுடன் தாவர சாம்பலை சேர்த்து நிணநீர் மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.

காற்று, நிணநீர் மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும் உணவு மருந்தே சித்த மருத்துவத்தின் முக்கிய மருந்தாக உள்ளது. ‘‘உணவே மருந்து’’ என்பதே சித்தமருத்துவத்தின் சித்தாந்தம். அந்த வகையில் அன்றாட உணவுடன் மருந்தை இணைத்தே உண்கின்றனர் தமிழர்கள்.
கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். நவீன சித்த மருத்துவம் குறித்து சுருக்கமாகப் பார்த்து நிறைவு செய்யலாம்.

ஆங்கில மருத்துவம் பொது மருத்துவமாக அங்கீகாரம் பெற முக்கிய காரணம் அதன் வெளிப்படை தன்மையும், காலத்திற்கு ஏற்ப நவீனப்படுவதும் தான்.

சித்தமருத்துவத்திலும் வெளிப்படை தன்மையும், நவீனமும் மிக அவசியமாக உள்ளது. சித்த மருத்துவம் என்பது நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவமோ, இரகசிய நோய்களுக்கான மருத்துவமோ அல்ல. அது உலகின் பொது மருத்துவம். ஆங்கில மருத்துவத்திற்கு இணையான எல்லா நவீன தன்மையும் கொண்டதே சித்த மருத்துவம்.

90% நோய்கள் பொதுவான நோய்கள் தான். பொதுவான நோய்களுக்கான மருந்துக்கள் ஆங்கில மருத்துவத்தில் நவீனமாகவும் வெளிப்படை தன்மையுடனும் உள்ளது.

உதாரணமாக காய்ச்சலை அடக்க பாரசிட்டாமால் மருந்து வெளிப்படையாக உள்ளது. மாத்திரை, மருந்து, ஊசி, காற்று என அனைத்திலும் நவீன முறையில் கிடைக்கிறது. பாரசிட்டாமால் மருந்தின் வேலையை சித்த மருந்துக்களான துளசியும் நிலவேம்பும் எளிதாக செய்கின்றன.

இன்று தமிழகத்தின் எல்லா மருந்து கடைகளிலும் வெளிப்படையாக கிடைக்கிறது நிலவேம்பு பொடி. மாத்திரை, மருந்து, பொடி என நவீன வடிவங்களில் நிலவேம்பு கிடைக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர் வரை நேரடியாக பயன்படுத்தும் நவீனத்தை பெற்றுள்ளது நிலவேம்பு.

சின்னச் சின்ன காய்ச்சல்களுக்கு மருத்துவரை அணுகாமல் பாரசிட்டமால் பயன்படுத்துவதை போல நிலவேம்பை பயன்படுத்த முடிகிறது. பழக்கப்பட்டவர்கள் பாராசிட்டமாலை தவிர்த்து நிலவேம்பையே பயன்படுத்த துவங்கி விட்டனர். இது சித்தமருத்துவத்தின் மகத்தான சாதனைகளுள் ஒன்று.

நிலவேம்பு போல பொது நோய்களுக்கான அனைத்து சித்த மருந்துகளும் நவீனபட வேண்டும். சித்த மருத்துவத்தின் பொது மருந்துகளை வெளிப்படை தன்மைக்கு கொண்டுவர வேண்டும். எல்லா மருத்துக்களையும் முறைப்படுத்தி, நவீனப்படுத்தி, வெளிப்படையாக வைக்க வேண்டும். இது நிகழுமானால் அதுவே மரணத்தை வெல்லும் மருந்தாக அமையும்.

சித்த மருத்துவத்தை நவீனப்படுத்த அரசு முன்வர வேண்டும். தனியார் ஆராய்ச்சிகள் வெளிப்படையாக வேண்டும். அவற்றிற்கான அங்கீரத்தை தர மக்கள் முன்வர வேண்டும். இது நிகழ்ந்தால் ஆங்கில மருத்துவத்தின் பெரியண்ணன் போக்கு மாறும். சித்த மருத்துவமும் பொது மருத்துவத்தின் ஒரு அங்கமாகும்.

முற்றும். நன்றி...

07/03/2020

மருத்துவ முறைகள் - நவீன சித்த மருத்துவம் 4

நோய்களை தீர்க்க இரண்டு வழிகளை கையாளலாம்.
1. மருந்து, 2. மருத்துவம்

மருத்துவத்தை மூன்றாக பிரிக்கலாம்.

1. மருந்து வழி மருத்துவம், 2. அறுவை சிகிச்சை மருத்துவம்,
3. உடலியல் மருத்துவம். 

இதில் மூன்றையுமே தன்னகத்தே கொண்டது சித்த மருத்துவம். தற்போது சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை கைவிடப்பட்ட ஒன்றாக உள்ளது. காரணம் உலகளாவிய மருத்துவ கட்டுப்பாடுகள் தான்.

மருந்து வழி மருத்துவமானது சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் உட்பட எல்லா மருத்துவ முறைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்தை 1. உணவு வழியாக, 2. இரத்தத்தின் வழியாக, 3. நேரடியாக செலுத்துதல் என்ற அடிப்படையில் மருந்து வழி மருத்துவம் செயல்படுகிறது.

அறுவை சிகிச்சை என்பது நோயுற்ற உடலின் பாகங்களை அறுத்து அகற்றுதல் அல்லது அறுத்து சீர்செய்தல் என்ற அடிப்படையில் செயலாற்றுகிறது.

அறுவை சிகிச்சை என்பது சித்த மருத்துவம் உட்பட எல்லா மருத்துவ முறைகளிலும் நடைமுறையில் இருந்த ஒன்று தான். ஆனால் அரிய மருத்துவ முறை என்பதால் அறுவை சிகிச்சை பொது மருத்துவத்தில் இருந்து தனித்துவம் ஆக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் கருதுவது போல அறுவை சிகிச்சை என்பது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டும் உரியது அல்ல. ஆங்கில மருத்துவத்தில் இருந்து தனித்துவப் படுத்தப்பட்டது தான் அறுவை சிகிச்சை. 

அறுவை சிகிச்சை என்பது தனி மருத்துவ முறை. உடல் உறுப்புகளை நீங்குதல் மற்றும் சேர்த்தல் என்பது மனிதகுல வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரக் கூடியது. இது மதசட்டங்களுடனும் முரண்பாடு கொண்டது. இந்த தனித்துவ காரணங்களால் சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் உட்பட உலகின் அனைத்து மருத்துவ முறைகளில் இருந்தும் அறுவை சிகிச்சை பிரித்து வைக்கப்பட்டு உள்ளது. 


உடலியல் மருத்துவமானது மருந்தில்லா மருத்துவம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. சில உடல் அசைவுகள் வழி உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை துண்டுதலே உடலியல் மருத்துவம் எனப்படுகிறது.

உடலுக்கு ஒய்வு அளித்தல் உடலியல் மருத்துவத்தின் முதன்மை மருத்துவமாக பார்க்கப்படுகிறது.

நன்னம்பிக்கை, உடற்பயிற்சி, மனஅமைதி, ஆழ்ந்த உறக்கம் என்பவை உடலியல் மருத்துவத்தின் படிநிலைகள்.

மருந்து மருத்துவமா? அறுவை மருத்துவமா? உடலியல் மருத்துவமா? மூன்றில் எது சிறந்தது என்றால் மூன்றுமே தேவையானது தான்.

சித்த மருத்துவத்தை பொருத்தவரை பொதுவாக வாத நோய்களுக்கு உடலியல் மருத்துவம் சிறந்த பலனை தருகிறது. பித்த, கப நோய்களுக்கு மருந்து மருத்துவம் நல்ல தீர்வாக உள்ளது. அறுவை சிகிச்சை என்பது அரிதிலும் அரிதாக செய்யப்படுகிறது.

மருத்துவத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இனி மருந்தை குறித்தும் சுருக்கமாக பார்த்து சித்த மருத்துவத்தின் இறுதிக்கு கடந்து விடலாம்.

மருத்துவத்தை போல மருந்தையும் மூன்றாக பிரிக்கலாம். 1. உணவு வழி மருந்தை செலுத்துதல், 2. இரத்தத்தில் நேரடியாக செலுத்துதல், 3. சுவாச காற்றின் வழி செலுத்துதல்.

சித்த மருத்துவத்தில் பொதுவாக உணவு வழி மருந்து பயன்பாடே அதிகமாக உள்ளது. உணவின் வழி மருந்தை தருவதால் மருந்தின் அளவு துள்ளியமாக இருக்கிறது. அதிகப்படியான மருந்தை கழிவாக வெளியேற்றுவது எளிதாக உள்ளது. மருந்து உணவின் ஒரு பகுதியாக இருப்பதால் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகிறது.

ஆங்கில மருத்துவத்தில் வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகள், உணவு மருத்தின் ஒரு அங்கம் தான். ஆங்கில மருந்து மாத்திரைகள் பதப்படுத்தப்பட்டவை. சித்த மருத்துக்கள் பதப்படுத்தப்படாதவை அவ்வளவு தான் வேறுபாடு. மற்றபடி பாரசிட்டாமால் மாத்திரைக்கும், துளசிச்சாருக்கும் எந்த வித்தியசமும் இல்லை.

ஆங்கில மாத்திரைகள் கெமிக்கல்., சித்த மருத்துவம் இயற்கை என்பது எல்லாம் வெற்றுப்பேச்சுகளே. நாம் இயற்கை உணவாக உண்டாலும், கெமிக்கலாக உண்டாலும் உடலுக்கு கெமிக்கல்கள் தான் தேவை.

உணவில் உள்ள தேவையான கெமிக்கல்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை கழிவாக உடல் வெளியேற்றி விடும். எனவே மருந்து உணவா? கெமிக்கலா என்று விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை. 

இரத்தத்தின் வழி மருந்தை செலுத்துதல் கொஞ்சம் அபாயகரமானது. இயன்றவரை தவிர்க்கலாம். சித்த மருத்துவத்தில் அரிதினும் அரிதாகவே இரத்தத்தின் வழி மருந்து கொடுக்கப் படுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் இதுவே முதன்மையாக உள்ளது.

ஊசி மூலம் மருந்தை செலுத்துவதால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. அதே நேரத்தில்  பக்கவிளைவுகளும் உடனடியாக வந்து விடுகின்றன.

ஊசி வழி மருந்தை செலுத்துவதால் சிறுநீரகத்திற்கு அதிகப்படியான வேலைப் பளுவை தருகிறோம். மேலும் நிணநீர் பாதைகளும் பாதிக்கப்படுகின்றன. அதிகப்படியான மருந்து உடலியல் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கின்றன.  இதனாலேயே சித்த மருத்துவத்தில் ஊசி தவிர்க்கப்பட்டு உள்ளது.

காற்றின் வழி மருந்தை தருவது சித்த மருத்துவத்திற்கே உரிய தனிச்சிறப்பாக உள்ளது.

அது என்ன காற்று மருத்துவம்?

ஆங்கில மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை தரும் சித்த மருத்துவத்தின் காற்றுமருந்து குறித்து அடுத்த இறுதிபகுதியில் பார்க்கலாம்.

தொடரும்...

29/02/2020

நோய் எப்படி வருகிறது? - நவீன சித்த மருத்துவம் 3

காற்றின் மூலம் வரும் நோய்கள் வாத நோய்கள். உணவின் மூலம் வரும் நோய்கள் பித்த நோய்கள். நீரின் மூலம் வரும் நோய்கள் கப நோய்கள்.

மூக்கு வழியாக நுழையும் காற்று, நுரையீரலை அடைகிறது. நுரையீரல், காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்து இரத்தத்தின் வழியாக செல்களுக்கு அனுப்புகிறது.

வாய்வழியாக செல்லும் உணவு வயிற்றை அடைகிறது. இங்கு உணவு புரதமாக மாற்றப்பட்டு குடலை அடைகிறது. குடல் உரிஞ்சிகள் புரதத்தை இரத்தத்தின் வழி செல்களுக்கு அனுப்புகின்றன.

மூக்கு, வாய் மற்றும் தோல் காயங்கள் வழி நுழையும் நீர், நிணநீர் மற்றும் இரத்தத்தில் கலந்து செல்களை அடைகின்றது.

நமது உடல் மூன்று வகையான ஆற்றல்களால் இயங்குகிறது. 1. மின்னாற்றல், 2. இயந்திர ஆற்றல, 3. வெப்ப ஆற்றல். 

(மின்னாற்றல், இயந்திர ஆற்றல், வெப்ப ஆற்றல் குறித்து தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன்.)

செல்களில் நிகழும் கார்போஹைட்ரேட் உடைப்பால் மின்னாற்றல் கிடைக்கிறது. இதயத்தின் இயக்கத்தால் இயந்திர ஆற்றல் கிடைக்கிறது. நிணநீர் உறுப்புகளால் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது.

மின், இயந்திரம், வெப்ப ஆற்றல் சீரின்மைகளால் உடலியல் செயல்பாடுகளில் தோய்வு ஏற்படுகிறது. இந்த தோய்வு நோய்களுக்கான வாசல்களை திறந்து விடுகிறது.

மூச்சின் வழியாக உடலுக்கு ஆக்சிஜன் மட்டுமே தேவை. காற்றில் உள்ள மற்ற தனிமங்களை நுரையீரல் வடிகட்டி திரும்ப அனுப்பி விடுகிறது. உடலியல் ஆற்றல் குறைவாக இருக்கும்போது இந்த வடிகட்டலில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜனுடன் பிற தனிமங்களும் சிறிதளவில் கலந்து விடுகின்றன. இந்த தனிமங்கள் தேவையற்ற பொருளாக இரத்த ஒட்டத்தில் சுற்றுகின்றன. சிறுநீரகத்தை அடைந்ததும் இவை பிரிக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு வெளியேற்றப்படாமல் நிணநீர் சுழற்சியிலோ, அல்லது இரத்தத்திலோ அவை தொடர்ந்தால் வாத நோய்கள் வருகின்றன.

ஈர காற்றில் உள்ள நுண்ணியிரிகள் மூச்சின் வழியாக நுரையீரலை அடைகின்றன. நுரையீரலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் நுண்ணியிரிகளை சூழ்ந்து சளியாக வெளியேற்றுகின்றன. இவ்வாறு நிகழாமல் நிணநீரில் நுண்ணுயிரிகள் எதிர்நீச்சல் போட்டால், அவை விச காய்ச்சல் எனும் பித்த நோய்களாக தொடர்கிறது.

வாய்வழியாக உணவினூடே செல்லும் நுண்ணியிரிகள் வயிற்றில் நடக்கும் செரிமானத்தில் இறக்கின்றன. இங்கு மீளும் நுண்ணியிரிகள் குடலில் வடிகட்டப்படுகின்றன. குடல் வடிகட்டலையும் மீறி இரத்தத்தில் கலக்கும் நுண்ணியிரிகள் பித்த நோய்களுக்கு வழி வகுக்கிறது.

உணவின் வழி குடலில் தங்கும் ஒட்டுண்ணிகளால் கபம் சார்ந்த நோய்கள் வருகிறது. இது போக தோல் காயங்கள், மலத்துளை, சிறுநீர் துளை, வாய், உள்ளங்கை, பாத வெடிப்புகள், இவற்றின் மூலம் நுழையும் நுண்ணியிரிகளால் கபம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.

உடலினுள் நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் நுழைவது தவிர்க்க முடியாதது. நாள் ஒன்றிற்கு ஆயிரம் முறை கை கழுவினாலும், பார்த்து பார்த்து உணவு உண்டாலும், காற்றை வடிகட்டி சுவாசித்தாலும், நுண்ணியிரிகளும் ஒட்டுண்ணிகளும் உடலில் நுழைவதை தடுக்கவே முடியாது. அது இயற்கை., அது இயல்பு!

உடலுள் நுண்ணியிரிகள், தாதுக்கள் நுழைவது இயல்பு. அதே போல அவற்றை இலகுவாக உடல் வெளியேற்றுவதும் இயல்பு.

மூச்சு, உணவு, காயங்கள் வழி இரத்தத்தில் கலக்கும் நுண்ணியிரிகள், தாதுக்கள் சிறுநீர் வழி வெளியேறுகின்றன. உணவில் உள்ள தேவையற்றவை தாதுக்கள், நுண்ணியிரிகள் மலத்தின் மூலம் இயல்பாக வெளியேற்றப்படுகிறது.

இப்படி நுண்ணியிரிகள், தாதுக்கள் உடலில் நுழைவதும் வெளியேறுவதும் சாதாரண இயல்பான நிகழ்வு. ஆனால் உடலின் மின், இயந்திர, வெப்ப ஆற்றல்கள் சரியாக இல்லாத போது இந்த இயல்பு நிகழ்வில் தோய்வு வருகிறது. இந்த தோய்வு நோய்க்கு அடித்தளம் அமைக்கிறது.

நோய் வர ஒரே ஒரு காரணம் தான். அது உடலில் மின், இயந்திர, வெப்ப ஆற்றல் சீராக இல்லை என்பது தான். ஆற்றல் சீராக இல்லாத போது சிறுநீரகம் மற்றும் நிணநீர் வெளியேற்றம் தோல்வி அடைகிறது. இந்த தோல்வி நோயுக்கு அடித்தளம் அமைக்கிறது.

இரத்தத்ததில் உள்ள தேவையற்ற நுண்ணியிரி, தாதுக்களை சிறுநீரகம் பிரித்து விடுகிறது. சிறுநீரகம் தோல்வி அடையும்போது அவை நீணநீருக்கு மாற்றப்படுகின்றன. நிணநீர் வெளியேற்றும் தோல்வி அடையும் போது அவை திசுக்களுக்குள் புதைக்கப்படுகின்றன. அவையும் தோல்வி அடையும் போது உறுப்பு செயலிழப்பு, புற்று போன்ற கொடிய நோய்கள் வெல்கின்றன.

நோய் ஏன் வருகிறது? நோய் எப்படி வருகிறது? என்பதை பார்த்தோம். இனி நோய்க்கான தீர்வுகளை பார்க்கலாம்.

நோய் வருவதற்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் நோய் தீர்வுகளுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. 1. மருத்துவம், 2. மருந்து. 

மருத்துவத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டிய நோய்களுக்கு மருந்து தீர்வாகாது. மருந்து மூலம் தீர்க்க கூடிய நோய்களுக்கு மருத்துவம் தீர்வாகாது. 

மருந்து, மருத்துவத்திற்கான வேறுபாடு தெரியாமையால் தான் ஆங்கில மருத்தும் அதிக பக்கவிளைவுகளை தருவதாக உள்ளது. அதே போல சித்த மருத்துவம் பொதுமருத்துவமாக மாறாமல் உள்ளது.

அப்படி என்ன தான் மருந்துக்கும் மருத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொடரும்...

26/02/2020

நோய் ஏன் வருகிறது? - நவீன சித்த மருத்துவம் 2

வாழ்க்கையில் நோய் என்பது அழையா விருந்தாளி. நோயற்ற வாழ்வு வாழ்ந்த மனிதர்கள் இல்லை.

வாழ்க்கையில் நோய் என்பது தவிர்க்கவே முடியாதது. ஆனால் கொடிய நோய்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். கொடிய நோய்களுடன் வாழ்வது கொடிதினும் கொடிது என்பது அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.

காய்ச்சல், சளி போன்ற இயல்பான நோய்கள், வாதம், வலி போன்ற நாள்பட்ட நோய்கள், புற்று, உறுப்பு செயலிழப்பு போன்ற கொடிய நோய்கள் என எதுவானாலும் அவை மூன்று காரணங்களால் தான் வருகிறது.

1. நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், 2. ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், 3. செல்லியல் மாற்றாங்களால் ஏற்படும் நோய்கள்.

இந்த 3 வகை நோய்களும் உடலில் தேவையில்லாமல் நுழையும் புற காரணிகளாலேயே ஏற்படுகின்றன.

நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவையே நோய்களை ஏற்படுத்தும் புறக் காரணிகள். இந்த மூன்று காரணிகள் தான் சாதாரண காய்ச்சல் முதல் மரண நோய்கள் வரை ஏற்படுத்துகின்றன.

நுண்ணுயிரிகள் என்பது நம் கண்ணிற்கும், இயல்பறிவுக்கும் புலப்படாதவை. உடல்உறுப்புகள் அற்ற ஒருசெல் உயிரிகளைத் தான் நுண்ணுயிரிகள் என அழைக்கிறோம்.

நுண்ணுயிரிகளை மூன்றாக பிரிக்கலாம்
1.வைரஸ் 2.பாக்டீரியா 3.பூஞ்சைகள். 

ஒட்டுண்ணிகள் என்பது நமது உடலை சார்ந்து வாழும் உயிரிகள். ஒட்டுண்ணிகள் நமது உடலின் உள்ளிலும் வெளியிலும் ஒட்டிக்கொண்டு வாழ்பவை.

இத்தகு உயிர்களுக்கு உடலே உணவாகிறது. உடல்வழியாக நமது உணவை ஒட்டுண்ணிகள் பங்குபோட்டு கொள்கின்றன. பங்கீட்டு பிரச்சனை நோயாக நம்மை சோர்வடைய செய்கிறது.
 
ஒட்டுண்ணிகளை மூன்றாக பிரிக்கலாம்
1. உடலுள் வாழும் ஒட்டுண்ணிகள், 2. உடலுக்கு வெளியே வாழும் ஒட்டுண்ணிகள், 3. உணவு ஒட்டுண்ணிகள்.

உடல் செல்லியல் மாற்றம் என்பது செல்லின் பணிகளில் ஏற்படும் தோய்வு அல்லது அதீதம் இவற்றால் ஏற்படுகிறது.

உடலுள் செல்லியல் மாற்றங்களை மூன்றாக பிரிக்கலாம். 
1.இயல்பு மாற்றம் 2.தாதுக்களால் ஏற்படும் மாற்றம் 3.சூழியல் மாற்றம்

சரி நோய் எப்படி ஏற்படுகிறது என பார்க்கலாம்

உடலுள் நுழையும் தேவை அற்ற நுண்ணுயிரிகள் மற்றும் தாதுக்கள் செல்களின் அடிப்படை செயல்களை பாதிக்கின்றன. செல்களின் பணிகள் பாதிக்கப்படும் போது உடல் நோய்வாய்ப்படுகிறது.

தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் உடல் துளைகள் வழியாக செல்களை அடைகின்றன

உடலின் துளைகளை மூன்றாக பிரிக்கலாம்
1.முக்கு வழியான சுவாச பதை, 2.வாய் வழியான உணவுப்பாதை 3.தோல், மலம், சிறுநீர் வெளியேற்று துளைகளை உள்ளடக்கிய கழிவு வெளியேற்றுப் பாதை.

இந்த மூன்று பாதைகளில் நுழையும் நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவை மூன்று ஊடகங்கள் வழியாக செல்களை அடைகின்றன.

உடலின் ஊடக சுழற்சியை மூன்றாக பிரிக்கலாம்
1.சுவாச காற்று சுழற்சி, 2.இரத்த சுழற்சி, 3.நிணநீர் சுழற்சி.

இந்த ஊடகங்களில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் உடல் செல்லின் இயங்கியலை பாதிக்கின்றன. இந்த பாதிப்பை பொருத்து நோய்கள் பிரிக்கப்படுகின்றன.


என்னடா சித்தமருத்துவம் பற்றிய கட்டுரையில் ஆங்கில மருத்துவம் பற்றி விவரிக்கிறாரே என்ற சலிப்பு வரலாம். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை விசயங்களே சித்த மருத்துவத்திலும் அடிப்படையாக உள்ளது.

ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் ஒன்று தான். இரண்டிற்கான மருந்துகள் தான் வேறு வேறு! - இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள மேற்சொன்ன ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைகளை அறிதல் அவசியம்.

ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையான ஆக்சிஜன் சுழற்சியையே வாதம் என சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகிறோம். சுவாசக்காற்றில் நுழையும் தேவையற்ற நுண்ணுயிரி மற்றும் தாதுக்களால் வாதநோயகள் வருகின்றன.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் இரத்த சுழற்சி(இரத்த அழுத்தம்) என்பதையே சித்த மருத்துவத்தில் பித்தம் என அழைக்கிறோம். பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் இரத்தத்தில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரி மற்றும் தாதுக்களால் வருகிறது.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் நிணநீர் சுழற்சியையே சித்த மருத்துவத்தில் கபம் என அழைக்கிறோம். நிணநீரில் ஏற்படும் நுண்ணுயிர் மற்றும் தாதுக்களின் ஏற்ற தாழ்வு கபம் சார்ந்த நோய்களை தீர்மானிக்கின்றன.

சுவாச சுழற்சி = வாதம், இரத்த சுழற்சி = பித்தம், நிணநீர் சுழற்சி = கபம் என்ற அடிப்படையில் ஆங்கில மருத்துவத்தின் முன்னோடியாக சித்த மருத்துவம் திகழ்கிறது.

டெதஸ்கோப் பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை இந்த மூன்றிலும் முறையே காற்று, இரத்தம், நிணநீர் இவைகளில் உள்ள தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் கணக்கிடப்படுகின்றன. இதையே வாதம், பித்தம், கபம் என்ற விகிதத்தில் சித்த மருத்துவத்தில் கணிக்கின்றனர்.

மருத்துவத்தில் கணக்கீடுக்கும் கணிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒன்றுதான். ஆங்கில மருத்துவத்தில் கணக்கிடும் கணக்கீடும் சராசரி கணிப்பு முறையை சார்ந்தது தானே தவிர துல்லியம் அல்ல. அதையே தான் சித்த மருத்துவத்தில் கணிப்பாக செய்கின்றனர்.

இந்த கணிப்புகள் மூலம் எப்படி நோய்களை துல்லியமாக கண்டறிகின்றனர்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொடரும்...

20/02/2020

மருந்தா, மருத்துவமா? - நவீன சித்த மருத்துவம் 1

காலப்பயணம் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்.
 ‘‘சித்த மருத்துவத்தை நவீன மருத்துவத்துவத்தின் வேகத்திற்கு கொண்டு சேர்த்தால் காலப்பயணம் சாத்தியமாகும்.’’ 

சித்தர்களுக்கே உள்ள சிறப்பு புதிராய் சில புதினங்களை விட்டுச்செல்வது. புதிர் என்றால் என்ன? புதினம் என்றால் என்ன? என்பதையே இன்றைய தலைமுறைக்கு விளக்க வேண்டி உள்ளது.

புதிர் என்றால் எளிமையான விடையை தாங்கிய ஒரு கேள்வி. அந்த கேள்விக்கான பதில் அந்த கேள்விக்குள்ளேயே இருக்கும். நாம் கொஞ்சம் சிந்தித்தால் பதிலை கண்டுபிடித்து விடலாம். அத்தகு கேள்விகளைத் தான் புதிர் என்கிறோம்.

புதினம் என்றால் செய்தியை நேரடியாக சொல்லாமல் மறைமுக உவமைகளோடு(உதாரணங்களோடு) சொல்வது. அப்படி புனைந்து சொல்வதைத் தான் புதினம் என்கிறோம்.

சித்தர்கள் அருளிய எல்லா சித்த மருத்துவ குறிப்புகளும் இப்படி புதிரான புதினங்களாகத் தான் இருக்கின்றன. புதிரும் தெரியாமல், புதினமும் புரியாததால் சித்த மருத்துவத்தை போலி மருத்துவமாக பார்க்கிறோம்.

இன்று தமிழகம் எங்கும் சித்தமருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசும் சித்தமருத்துவத்தை பயன்பாட்டில் வைத்துள்ளது. சித்த மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்துகடைகள் என சித்த மருத்துவம் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் அது ஒரு மூன்றாம் தர மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அலோபதி என்கிற ஆங்கில மருத்துவம் தான் முதன்மையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தேடி மக்கள் செல்கின்றனர். முன்றாவது இடத்திலேயே சித்த மருத்துவம் உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் சித்த மருத்துவத்தை பின்னுக்கு தள்ளி அக்குபிரசர் மருத்துவம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிடும் போல.

உலகில் ஏராளமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்தியாவில் 6 வகையான மருத்துவ முறைகள் பிரபலமாக உள்ளன. 1.ஆங்கில மருத்துவம், 2.ஆயுர்வேத மருத்துவம், 3.சித்த மருத்துவம், 4.ஹோமியோ மருத்துவம், 5.யுனானி மருத்துவம், 6.அக்குபிரசர் மருத்துவம்.

(யோகசனம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் அடங்கி  விடுகிறது. இது குறித்து தனி கட்டுரையில் விவரிக்கிறேன்.)


இதில் இந்திய பாரம்பரிய மருத்துவம் என்பது ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். கேரளாவில் தோன்றியது ஆயுர்வேதம். தமிழகத்தில் தோன்றியது சித்த மருத்துவம். ஹோமியோபதி ஜெர்மனிய மருத்துவம். யுனானி என்பது அரேபிய மருத்துவம். அக்குபிரசர் என்பது சீன மருத்துவம்.

இன்று உலகில் பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டில் இருப்பது அலோபதி மருத்துவம். இந்திய அரசின் முதன்மை முக்கியத்துவம் பெற்றிருப்பதும் இந்த அலோபதி மருத்துவம் தான்.

ஆங்கில மருத்துவம் அல்லாத மற்றவைகளை மாற்று மருத்துவ முறை என்றே அழைக்கிறோம். மாற்று மருத்துவ முறைகள் மக்களிடம் இன்னும் போதிய நம்பகத் தன்மையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆங்கில மருத்துவம் போன்று அவை முறைப்படுத்தப் படாமல் இருப்பதே.

ஆங்கில மருத்துவத்திற்கு உலக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மாற்று மருத்துவ முறைகள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

மாற்று மருத்துவத்திற்கான முறையான ஆராய்ச்சிகள் எங்கும் நடப்பது இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அவை அங்கீகாரம் பெறுவது இல்லை.

உண்மையில் ஆங்கில மருத்துவத்திற்கும் சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கும் இடையில் ஒற்றை வேறுபாடு தான் உள்ளது. மருந்து ஒன்று தான். மருத்துவ முறைகள் தான் வேறு! - இது பலருக்கும் புரிவதில்லை.

நம் நாட்டில் மெடிக்கலுக்கும் மெடிசனுக்குமே வித்தியாசம் புரிவதில்லை. படித்த டாக்டர்கள் முதல் பாமரர்கள் வரை இதே நிலை தான். மெடிக்கல் என்றால் மருத்துவம், மெடிசன் என்றால் மருந்து. மருந்து கடைகளை மெடிசன் சென்டர் என்பதற்கு பதில் மெடிக்கல் சென்டர் என்றே அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

மருத்துவம் வேறு, மருந்து வேறு! ஆங்கில மருத்துவம் மிகபெரிய வளர்ச்சி அடைய மருந்து-மருத்துவ வேறுபாட்டை கடைபிடித்ததே காரணம். மருத்துவம் பார்ப்பவர் வேறு, மருந்தை தயாரிப்பவர் வேறு! 

ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு மருத்துவம் பார்க்கத் தான் தெரியுமே தவிர, மருந்தை பற்றிய எதுவும் தெரியாது. அதனால் தான் அன்றைய மக்கள் ஆங்கில மருத்துவருக்கும் கைராசி மருத்துவர் என்ற புனிதர் பட்டத்தை தந்தனர். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பான்மை ஆங்கில மருத்துவர்கள் மருந்துகளை நம்பியே மருத்துவம் பார்க்கின்றனர்.

கருவிகளும், மருந்துகளுமே ஒட்டுமொத்த ஆங்கில மருத்துவத்தை ஆட்சி செய்கின்றன. இதே நிலை தான் மாற்று முறை மருத்துவ முறைகளிலும் தொடர்கிறது.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்ற அடிப்படை விசயமே போலி மருத்துவர்கள் உருவாகக் காரணம்.

எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும் மருத்துவம் வரவில்லை என்றால் நிச்சயம் அவர் போலி மருத்துவர் தான். அதே நிலை தான் சித்த மருத்துவத்திலும் நிலவுகிறது.

பல சித்த மருத்துவர்கள் மருந்தை வைத்திருக்கிறார்கள்., ஆனால் மருத்துவம் தெரிவதில்லை. சிலருக்கு மருத்துவம் தெரிகிறது ஆனால் மருந்து கிடைப்பதில்லை. சித்த மருத்துவம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்க இதுவே முதன்மை காரணம்.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஆங்கில மருந்தும் சித்த மருந்தும் எப்படி ஒன்றாகும்?

அடுத்த பதிவில் ...

தொடரும்....

12/02/2020

எல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5

இந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவுளாக அல்ல, கடவுளாக கூட ஏற்பது இல்லை.

ஆரிய மதம் சிவனை ருத்திரன் என்கிறது. ருத்திரர் என்பவர் கடவுள் அல்ல. தேவ உலகத்தில் கடவுளுக்கு சேவை செய்பவர்களே ருத்திரர்கள். தேவ உலகில் ரிஷிகள், ருத்திரர்கள், மருந்துக்கள், அதிதிகள் என பலவகை தேவர்கள் உள்ளதாக ஆரியமதம் குறிப்பிடுகிறது.

ஆரியத்தில் இருந்து பிறந்த சனாதனம் தேவலோகத்திலும் வர்ணங்களை(சாதிகளை) பிரிக்கிறது. அதில் பூலோகத்தின் சூத்திர சாதிக்கு இணையானவர்கள் ருத்திரர்கள். அந்த ருத்திரர்களின் தலைவனே ருத்திரன். இந்த ருத்திரனை தான் சிவன் என அறிவிக்கிறது பிராமணங்கள். 

திருமாலை விஷ்ணுவாக உள்வாங்கிக்கொண்ட இந்திய மக்கள், சிவனை ருத்திரனாக ஏற்கவில்லை. இந்து மதத்ததை பொருத்தவரை சிவன் தான் முழுமுதல் கடவுள். அதற்கு பின்னவர்கள் தான் விஷ்ணுவும், பிரம்மாவும்.

சிவனா/விஷ்ணுவா என்ற கேள்வியில் உடைகிறது இந்துமதத்தின் ஒற்றுமை. இந்த ஒற்றை கேள்வியில் சனாதனமும் ஓடி ஒழிந்து கொள்கிறது.

ஆரியருக்கு முந்தைய இந்தியாவில் சிவன்(சேயோன்), திருமால்(பெருமால்-மாயோன்), முருகன்(வேந்தன்), மேகலை(வருணன்), அம்மன்(பகவதி-கொற்றவை) என்ற நிலம் சார்ந்த கடவுள்களே இருந்தனர். இந்த கடவுள்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் இருந்தது.

ஆனால் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் ஊடுருவிய ஆரியர்கள் காட்டின் மக்களை பல பிரிவுகளாக பிரித்தனர். காட்டு மக்களின் ஒற்றை கடவுளான திருமாலை பல அடுக்குகளில் திரித்து சனாதனம் என்ற சதிவேலையை செய்தனர்.

திருமாலின் முதன்மை பெயரை பெருமால் என்று அழைக்கின்றனர் மலைவாழ்மக்கள். பெருமாலின் கிளை பெயர்கள் தான் நாராயணன், கண்ணன், கண்ணையா, கிருஷ்ணன், ஐயனார், அய்யாசாமி, கருப்பசாமி, மதுரைவீரன், ஐயப்பன் என்பதெல்லாம்.

வேதங்களில் இருந்த ஆரிய மதம் வேதாந்தங்கள் வழி பிரம்ம மதமாக மாறியது. பிரம்மமதம் பிராமணங்கள் வழி சனாதன மதமாக மாறியது. சனாதனம் வைணவம் வழி இந்து மதமாக மாறியது.

இங்கே கொஞ்சம் உண்ணிப்பாக படித்தால் மட்டுமே மதமாற்றத்தின் காலக்கோடு உங்களுக்கு புரியும்.

ஆரிய மதத்தின் கடவுளுக்கு பெயரில்லை. யூத மதத்தின் யகோவா போல, இஸ்லாமிய மதத்தின் அல்லா போல பெயரற்ற, உருவமற்ற கடவுளே ஆரியமத கடவுள். இத்தகு கடவுளை அடைய வழிகாட்டிகளாக மீட்பர்கள் வருவார்கள். மீட்பர்கள் வழி கடவுளை அடையலாம் என்பதே ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடு.

ஆபிரகாம் மதங்கள் தோன்றலுக்கு முன்பாக உலகெங்கும் உருவவழிபாடு முறையே இருந்தது. உருவங்களை வழிபடும் முறையை விலக்கி பிறந்தது தான் ஆபிரகாமிய மதங்கள். அந்த வழித் தோன்றலில் வந்தது தான் யூதம், ஆரியம், பிரம்மம், ஜைனம், புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாமியம், சனாதனம், பாரசீகம், சீக்கியம் என்பது எல்லாம்.

மேற்சொன்ன மதங்கள் எல்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. உடல் பொய்யானது ஆன்மாவே நிந்தரமானது என்ற கொள்கை உடையவை.

ஆன்மாவை போற்றும் மதங்களுக்கு எதிர்திசையில் இருப்பது உடலை போற்றும் மதங்கள். தமிழகத்தில் தோன்றிய சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், சைவம், கௌமாரம், சக்தி போன்றவை உடலை போற்றும் மதங்கள். உடலை தாண்டி கடவுள் இல்லை என்கின்றன இந்த மதங்கள்.

உடல் தான் எல்லாம். ‘‘உடலே கோயில், உள்ளமே கடவுள்’’ என்ற கோட்பாட்டை உடையவை தென்னிந்திய மதங்கள். உடலை போற்றும் விதமாக உருவ வழிபாட்டை பின்பற்றுகின்றன இந்த மதங்கள்.

கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். இனி மிக சுருக்கமாக முடிக்க வேண்டி உள்ளது. 

கி.பி துவக்க நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் குப்தர்கள் தென் இந்தியாவில் பல்லவர்கள் கூட்டாட்சி அமைத்திருந்தனர். இந்த காலகட்டத்தில் வடஇந்திய பிராமணர்கள் மற்றும் தென்னிந்திய அந்தணர்கள் இணைந்து சனாதன மதத்தை கட்டமைத்தனர். 


தென்னிந்திய அந்தணர்கள் வழிபட்ட திருமால், சிவன், முருகன், சாத்தன்(கருப்பசாமி), மாரி(அம்மன்), பிள்ளையார்(கணபதி) ஆகிய தெய்வங்களை வேதாந்தங்களோடு இணைத்துக் கொண்டனர். இப்படி இணைக்கையில் ஆரிய பிராமணர்களுக்கும், தென்னிந்திய அந்தணர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. முழுமுதல் கடவுள் யார் என்பதில் தான் அந்த சண்டை.

திருமாலை விஷ்ணுவுடனும், சிவனை ருத்திரனுடனும், முருகனை சுப்பிரமணியனுடனும், சாத்தன், மாரி, பிள்ளையார் இவர்களை காவல் தெய்வங்களுடனும் இணைத்தனர்.

இணைப்பை ஏற்ற மக்கள் கடவுளுக்குள்ளும் சனாதனம் இருக்கிறது என்பதை ஏற்கவில்லை. சனாதனத்தை உடைத்து உண்டான ஆறு மதங்களை தான் இந்து மதம் என இன்று அழைக்கிறோம். 

விஷ்ணுவை பிராமணியத்தின் வழி வழிபடுபவர்கள் வடகலை பிராமணர்கள் எனவும், விஷ்ணுவை கண்ணனாக, நாராயணனாக, பெருமாலாக வழிபட்டவர்கள் தென்கலை பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ் இருவினரும் வைணவர் என்ற மதத்திற்குள் அடைபட்டனர்.

சிவனை முழுமுதல் கடவுளாக வழிபட்ட அந்தணர்கள் சைவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தனர். பிராமணியத்திற்குள் அடைபடாத முருக வழிபாடு கௌமாரம் என்று தளைத்தது.

பிரமாணத்திற்குள் அடைபடாத திருமால் வழிபாடு ஐய்யாசாமி, மதுரைவீரன், கருப்பசாமி, சுடலைமாடன், சாத்தன் வழிபாடாக பரிணமித்தது.

கொற்றவை காளி, கங்கை, காவேரி, மாரி என தனி வழிபாடாக பிராமணியத்தை புறம்தள்ளி சக்திவழிபாடு சுடர்விட்டது.

எல்லாம் கடவுளே, எல்லாம் சிவமயம், எம்மதமும் சம்மதம் என்பவர்கள் பெரும்பான்மை இந்துக்களாக மாறினர்.  

இந்திய மதங்களை ஒருங்கிணைக்க நினைத்தனர் சங்கராச்சாரியார்கள். ஆனால் தங்களின் பிடிவாத சனாதன கொள்கையால் இந்து மதத்தை அழிவு பாதைக்குள் விட்டு சென்றனர்.

சனாதனம் என்ற நச்சால் கொஞ்சம் கொஞ்சாமாக ஆழிந்து வருகிறது இந்து மதம். சனாதனத்தில் இருந்து விடுபட இந்துமதம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் போராடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சனாதனத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்ட சில பிராமணர்களின் அதிகார சுரண்டலின் முன்பு இந்த போராட்டங்கள் தோற்றுப்போகின்றன.

சனாதனம் என்பது இந்த காலகட்டத்தில் தேவை இல்லை என பெரும்பான்மை பிராமணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில கழுசடை பிராமணர்கள் இன்றும் அதை பற்றிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கழுசடைகளாக சில ஆயிரம் பிராமணர்களே உள்ளனர். 

இவர்களின் சனாதன அடுக்கு சில ஆயிரம் சாதிவெறியர்களை ஊக்குவிக்கிறது. இந்த ஊக்கம் இந்து மதத்தை செதில் செதிலாக சிதைத்து வருகிறது. இது நீடித்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்துமதம் இல்லாமல் போகும்.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற உயரிய ஆன்மிக கோட்பாடுகளை கொண்டது இந்து மதம். ஆனால் சனாதனம் என்ற ஒற்றை கோட்பாட்டில் சாக்கடைக்குள் கிடக்கிறது.

சனாதனம் இல்லாத இந்துமதம் வேண்டும். அதுவே என்மதம் என்பதில் எனக்கும் பெருமையே.

முற்றும். நன்றி.
 
பின்குறிப்பு : (சிவன், முருகன், ஐயப்பன், மாரி உட்பட தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை தனி ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்து மத கிளைகளான பிரம்ம மதம், சமண மதம், சீக்கியம் குறித்தும் விரிவாக விளக்க வேண்டி உள்ளது. சனாதனத்தின் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் குறித்த விளக்கங்களை சனாதனம் என்ற கட்டுரை தொடரில் எழுதுகிறேன்.)

10/02/2020

ஓயாத இராமாயணம் - இந்து மதம் 4

இந்துமத இதிகாசங்களில் இராமாயணமும், மகாபாரதமும் முக்கியமானவை. மகாபாரதம் என்பது பல கதைகளின் ஒரு கதை. ஆனால் இராமாயணம் என்பது ஒரு கதையின் பல கதை.

‘‘என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனும் அல்ல, -தசரதனின் மகனும் அல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் வணங்க மாட்டேன்!’’ - இந்த பிரபலமான வரிகள் இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் உடையது. 

பகவத் கீதையை வெகுவாக புகழ்ந்த காந்தியடிகள், இராமாயணத்தை தூக்கி குப்பையில் வீசியிருந்தார். (இராம பக்தர்கள் காந்தியடிகளை வெறுத்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.) அந்த வம்புக்குள் நாம் நுழைய வேண்டாம். கட்டுரைக்குள் வருவோம்.

தென்னிந்தியாவில் சைவம் வைணவம் போல வட இந்தியாவில் இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டைகள் இருந்த காலங்கள் உண்டு.

இங்கே எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் வரலாம். இராமர் வேறு மதம், கிருஷ்ணர் வேறு மதமா? இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே. இருவருமே வைணவம் தானே! இருவருமே இந்து மதம் தானே! அப்படி இருக்கும் போது எப்படி இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டை இருந்திருக்கும்?

 சின்ன உதாரணம்: தமிழகத்தில் தென்கலை, வடகலை என்ற மதக்கலவரம் இப்போதும் உண்டு. இது இராமர் என்ற ஒரே கடவுளை வணங்கும் இரு மதங்களுக்கு இடையேயான மோதல்.

வடகலைக்கும் தென்கலைக்கும் ஏன் சண்டை வருகிறது? இவர்களை அவர்கள் ஏற்பதில்லை. அவர்களை இவர்கள் ஏற்பது இல்லை ஏன்? இங்கே இருக்கிறது சனாதனத்தின் ஆணிவேர்.

அடுத்தவர் மனைவியை அபகரிக்காதே என்ற அடிப்படை கொள்கையை கொண்ட ஆபிரகாமிய மதங்களின் ஒரு கிளையே ஆரிய மதம். 

தன் மனைவியை கவர்ந்த அரசனிடம் போர்புரிந்து மனைவியை மீட்கும் கணவனின் வரலாறே ஒடிசி மற்றும் இலியட் கதைகள். உலகின் மிக பழமையான இதிகாசங்கள் என அழைக்கப்படும் இந்த இரண்டும் கிரேக்கர்களுடையது.

தன் மனைவியை கவர்ந்த எகிப்த்து மன்னனிடம் இருந்து கடவுளின் உதவியுடன் மனைவியை மீட்கிறார் ஆபிரகாம். இதே கதை தோன்றலே ஒடிசியும் இலியட்டும். இலியட் கதையின் இந்திய பதிப்பே இராமாயணம்.

இராமாயணம் என்பது ஒற்றை படைப்பு அல்ல. இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன. உலகம் எங்கும் 700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன.

700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் இருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையாக இருப்பது வால்மிகி இராமாயணம்.


இந்து மதத்தின் அடிப்படையாக இருக்கும் வால்மிகி இராமாயணம் தான் இந்து மதத்தின் அவமானமாகவும் இருக்கிறது. இது கடுமையான சொல் தான். ஆனால் சனாதனம் என்ற கொடிய விசத்தை இந்துமதத்திற்குள் பாய்ச்சியதில் முதன்மை பங்களிப்பு வால்மிகி இராமாயணத்திற்கு உள்ளது.

இராமர் என்பவர் கடவுளின் அவதாரம் என்றும். சூத்திரர்களை அழிக்கவே இராம அவதாரம் எடுத்தார் என்றும் விவரிக்கிறது வால்மிகி இராமாயணம். இதில் துவக்கமும் இறுதியும் இடைச்செருகல்., இந்த இடைச்செருகளில் தான் சனாதனம் வருகிறது என்பது ஏற்புடையதே.

அப்படியானால் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் வால்மிகி இராமாயணத்தை தீயில் எரிக்க வேண்டும். அல்லது இடைசெருகலாக உள்ள சனாதனத்தை நீக்கி வால்மிகி இராமாயணத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் வால்மிகி இராமாயணம் என்றுமே ஓயாத தீண்டாமையாக தான் இருக்கும். சனாதனத்தை போதிக்கும் இராமன்கள் எப்போதும் செருப்படி வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.

இராமன் என்ற உயரிய கதாபாத்திரத்தை அல்லது உயரிய அரசனை சனாதனம் கொண்டு அசிங்கப் படுத்தியவர்கள் ஆரிய பிராமணர்கள். 

நாராயணனுக்கும், கண்ணனுக்கும், திருமாலுக்கும் பூசப்பட்ட சனாதன சாயம் இராமருக்கும் பூசப்பட்டு உள்ளது. சனாதனத்தை எதிர்த்து மக்கள் மனங்களை கவர்ந்த இவர்களை, சனாதனத்தின் படைப்பாளியாக மாற்றிய கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் ஆரிய பிராமணர்கள். அதற்கு துணைபோனவர்கள் தமிழ் பார்ப்பனர்கள். 

நாடோடிகளான ஆரியர்கள் சிந்து/கங்கை சமவெளியில் நிலைத்து வாழ முற்பட்டனர். இந்த நிலைப்பு அரசாங்கத்தின் தேவையை உணர்த்தியது. ஆரியர்கள் தங்களின் அரசாட்சிக்கான அடிப்படை கோட்பாடுகளை வகுத்தனர். ஆபிரகாமிய மதத்தின் 10 கட்டளைகளை அப்படியே ஏற்றனர். அவற்றை ஒட்டிய புதிய சட்டங்களை எழுதினர். அப்படி தொகுக்கப்பட்டவையே பிராமணங்கள். அவற்றுள் மிகவும் பிரலமானது மனுஸ்மிருதி என்கிற மனுதர்ம சாஸ்த்திரம்.

மனுஸ்மிருதி என்பது ஒன்றல்ல. பல காலகட்டங்களில் பல மனுஸ்மிருதிகள் நடைமுறையில் இருந்தது. யுகங்கள், காலங்கள், ஆட்சிகள், சமூகங்கள் என காலத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மனுஸ்மிருதிகள் வேறுபட்டது. பல மனுஸ்மிருதிகள் இருந்தாலும் எல்லா மனுஸ்மிருதியிலும் சனாதனம் என்ற அடிப்படை மட்டும் மாறாமல் இருந்தது. அதனாலேயே எல்லா மனுஸ்மிருதிகளும் வெறுக்கத்தக்கதாக மாறியது.

அது என்ன சனாதனம்?

எளிமையானது தான். ஆபிரகாமிய மத கோட்பாடை ஒட்டி பிறப்பிலேயே மனிதர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப் படுகின்றனர். இந்த 5 பிரிவினர் கடவுளை அடைவதில் பிறப்பிலேயே தகுதி/தகுதியின்மை பெற்று விடுகின்றனர். வாழும் காலத்தில் என்ன நல்லது செய்தாலும் பிறப்பின் தகுதியை தாண்டி இவர்களால் கடவுளை அடைய முடியாது என்பதே சனாதனம்.

4 வர்ணங்கள் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் 5 எப்படி என்ற சந்தேகம் வரலாம். அங்கே தான் சனாதனத்தின் உச்சகட்ட கொடூரம் உள்ளது.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுக்கு தான் கடவுளை அடையும் தகுதி உள்ளது. 5வதாக உள்ள பஞ்சமர் என்பவர்கள் கடவுள் பெயரை நினைக்க கூட உரிமை இல்லாதவர்கள்.

ஆபிரகாமிய மதங்களின் சனாதனத்தை எதிர்த்து தோன்றியது தான் இந்து மதம். ஆனால் இந்து மதத்தையே சனாதனத்தின் சாட்சியாக மாற்றிவிட்டனர் பிராமணர்கள். 

யார் இந்த பிரமாணர்கள்? எப்படி அவர்களால் இந்து மதத்தை சனாதன மதமாக மாற்ற முடிந்தது?

தொடர்ச்சி அடுத்த இறுதி பதிவில்...

தொடரும்... 

06/02/2020

பகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3

இந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார்? என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவத் கீதை. பைபிள், குரான் வரிசையில் இந்துக்களின் புனிதநூலாக மதிக்கப்படுவது பகவத்கீதை.

பகவத்கீதையில் சனாதன தர்மம் என்ற கறை சேர்க்கப்பட்டதா? அல்லது பகவத்கீதையால் சனாதனதர்மம் கரை சேர்ந்ததா? - மிகப்பெரிய விவாததத்திற்கு உரிய கேள்வி இது! 

இந்து மதத்தில் ஏராளமான கீதைகள் உள்ளன. ஆனால் பகவத்கீதை மட்டுமே பிரபலமாக இருக்கிறது. கிருஷ்ணர் என்ற ஆன்மீக குருவின் சொற்பொழிவுகளின் தொகுப்பே கீதைகள் என அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணர் என்பவர் பாகவதம் என்ற மதத்தின் நிறுவனர் அல்லது முக்கிய மதகுரு. கி.மு துவக்க நூற்றாண்டுகள் அல்லது புத்தருக்கு அடுத்த தலைமுறை கிருஷ்ணரின் காலமாக இருந்திருக்கலாம்.

ஆரிய மதத்தின் வேதங்களை மன்னர்களும் மக்களும் வெறுத்த காலம். சைனமும் புத்தமும் பிரபலமடைந்திருந்த காலம். இந்த காலகட்டத்தில் கங்கை சமவெளியில் தோன்றிய இன்னும் ஒரு மதவழிபாடு தான் பாகவதம்.

ஆரிய வேதங்களை எதிர்த்து, வேள்விகளை எதிர்த்து, வேதக் கடவுள்களை எதிர்த்து தோன்றியதே பாகவதம். சைனம் மற்றும் புத்த மதத்தின் கருத்தியல் மோதலை பின்னுக்கு தள்ளி பாகவதம் வேகமாக முன்னேறியது.

கிருஷ்ணர் என்பவர் புத்தரை போல பாகவதம் என்ற தனிமதத்தின் குருவாக இருந்தார். ஆரிய மதத்தின் யாகத்திற்கு மாற்றாக, சைன மதத்தின் யோகத்திற்கு மாற்றாக, புத்த மதத்தின் துறவுக்கு மாற்றாக கிருஷ்ணர் பக்தி மார்க்கத்தை போதித்தார். கிருஷ்ணரின் பக்தி வழிபாடு பாகவத மதமாக வளர்ந்தது. கிருஷ்ணரை பின்தொடர்ந்து பல பாகவதர்கள் பக்திமதத்தை இந்தியா முழுவதும் பரப்பினர்.

பக்தியால் கடவுளின் அருளை பெறமுடியும் என்பதே பாகவத மதத்தின் கோட்பாடு. ஆரியத்தின் யாகம், சைனத்தின் யோகம், புத்தத்தின் துறவு இந்த மூன்றுக்கும் இணைப்பு பாலமாக இருந்தது பாகவதம். 


மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் காலத்தில் ஆரிய மதத்தை எதிர்த்து ஏராளமான இந்திய மதங்கள் பிறந்தன. ஆரியர்களின் இனவாதம், பிறப்பின் அடிப்படையிலான வர்ண அடுக்குமுறை, குலதெய்வம் இவற்றை எதிர்த்து பிறந்த முக்கிய மதங்கள் தான் சைனம், புத்தம், பாகவதம் உட்பட ஏராளமான மதங்கள்.

நாராயணர், கிருஷ்ணர், இவர்களை தொடர்ந்து வியாசர், ஆதிசங்கரர் என 18ம் நூற்றாண்டு இராமகிருஷ்ணபரமஹம்சர், வரை ஏராளமானவர்கள் பாகவத மதத்தின் குருக்களாக உள்ளனர்.

முழுக்க முழுக்க ஆரியத்தின் சனாதனத்தை எதிர்த்து வந்த பாகவத மதத்தில் எப்படி புகுந்தது சனாதனம் என்பது தான் வியப்பின் உச்சம். அதனால் தான் கீதையில் சனாதனம் என்ற கறை படிந்துள்ளது என்கிறேன்.

சனாதனம் என்பது முழுக்க முழுக்க ஆரிய/அரேபிய/ஆபிரகாமிய மதங்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதி. அது எப்படி இந்து மதத்திற்குள் நுழைந்தது? இந்த கேள்வியில் தான் பிராமணிய மதம் பிறக்கிறது.

சனாதனம், மனுதர்மம், வர்ணதர்மம் என்ற இந்த பெயர்களின் முன்னோடி பிராமணியம். பிராமணியத்தின் பிறப்பை தெரிந்தால் மட்டுமே சனாதனத்தின் வீரியத்தையும் விசத்தையும் புறிந்து கொள்ள முடியும்.

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் எங்கே துவங்கியது? சனாதனத்தை தோற்றுவித்தவர் யார்?

நானே சனாதனத்தை தோற்றுவித்தேன் என பகவத்கீதையில் கிருஷ்ணர் சொல்வது எல்லாம், பிற்சேர்க்கையும், பிராமணர்களின் பித்தலாட்ட சேர்க்கையுமே ஆகும். பகவத் கீதை சனாதனத்தை போற்றுவதும் இல்லை. கிருஷ்ணர் சனாதனத்தை தோற்றுவிக்கவும் இல்லை, போதிக்கவும் இல்லை. 

அப்படியானால் சனாதனம் எப்படி கீதையில் வந்தது? இந்த கேள்விக்கான பதிலை கீதைக்கு முன்னோடியான பிரம்ம சூத்திரம் நூலில் தேடவேண்டி உள்ளது.

பிரம்ம சூத்திரம் என்பது கீதையை எழுதிய அதே வியாசரால் எழுதப்பட்ட நூல் தான். இன்று இந்து மதத்தின் அடிப்படை வேத நூல்களாக மூன்று பட்டியலிடப்படுகிறது. 1.உபநிடங்கள், 2.பிரம்மசூத்திரம், 3.பகவத்கீதை. இந்த மூன்று நூல்களையும் எழுதியவர் ஒரே நபர் தான். அவர் தான் வியாசர்.

வியசர் என்பவர் பாகவத மதத்தின் முதன்மை மதகுருவாக அறியப்பட்டவர். கிருஷ்ணருக்கு பின்னர் பாகவத மதத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்வதில் தீவிர பணியாற்றியவர் வியாசர். வியாசருக்கு பின்னர் தான் ஆதி சங்கரர் உட்பட சங்கராச்சாரியார்கள் வருகிறார்கள். (வியாசருக்கு பின்னர் பலரால் பல உபநிடதங்கள் பலகாலகட்டங்களில் எழுதப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ளுங்கள்.)

உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை இவைகளில் முழுக்க முழுக்க பக்தி, ஆன்மா, முக்தி இவற்றை பற்றி மட்டுமே பேசப்படுகிறது. எங்கேயும் சனாதனத்தையோ, வேள்வி யாகங்களை பற்றியோ பேசுவது இல்லை.

அப்படியானால் சனாதனம், வேள்வி, யாகங்களை பற்றி எங்கே பேசப்படுகிறது என்றால் வேதங்கள், சாஸ்திரங்கள், பிராமணியங்களில் தான் சனாதனம் பேசப்படுகிறது.

வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் தொடர்பே இல்லை. வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தொடர்பே இல்லை. உண்மையில் வேதங்களை விளக்க அல்ல, விலக்க வந்ததே வேதாந்தங்கள்.

எதிரும் புதிருமாக தோன்றிய வேதமும் வேதாந்தமும் பிற்காலத்தில் எப்படி ஒன்றானது?
அங்கே தான் இராமாயணம் பிறக்கிறது.
அங்கே தான் ஆரிய திராவிட யுத்தம் துவங்குகிறது.
அங்கே தான் பெண்ணுக்கும், மண்ணுக்கும், பொன்னுக்கும் வேண்டி உண்டாக்கிய சனாதனம் நிலைக்கிறது.

விரிவாக அடுத்த பதிவில்...

தொடரும்...